ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபடலாமா?

0
353

ஆஞ்சநேயர் ஒரு பிரமச்சாரி என்பதால் அவரை வீட்டில் வைத்து வழிபட்டால் வழிபாடு செய்பவருக்கு திருமணமே ஆகாமல் அவரும் பிரமச்சாரியாகவே வாழ நேரிடும் என்றொரு மூட நம்பிக்கை உள்ளது. அனால் அது வெறும் மூட நம்பிக்கையே தவிர அதில் உண்மை இல்லை. ஏன் என்றால் ஆஞ்சநேயரின் கடவுளான ராமபிரானே பிரமச்சாரி கிடையாது. அதோடு வாய்வு மைந்தனான அனுமன் ஒரு சிரஞ்சீவியும் கூட.

ஆஞ்சநேயரின் வடிவங்கள் பல உள்ளது. அதில் பஞ்சமுக ஆஞ்சநேயரை நம் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். அனால் அவரை வழிபாடு செய்வதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன.

ஆஞ்சநேயரை வழிபடுபவர் உடலளவிலும் மனதளவிலும் சுத்தமாக இருக்கவேண்டும்.

ஆஞ்சநேயரை வைத்து வழிபட்டால் நிச்சயம் அவரோடு ராமபிரானையும் வைத்து வழிபடவேண்டும்.

பூஜை அறையினுள் துளசி இலைகள் போட்டு தீர்த்தம் வைத்திருக்க வேண்டும்.

பூஜை அறையை விளக்குமாறு கொண்டு பெருக்காமல், துணியால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

வழிபாடு செய்யும் காலத்தில் ராம நாமத்தினை கூறி, நம்முடைய அனைத்து விதமான கோரிக்கைகளை அவரிடம் வைத்து வணங்க வேண்டும்.

வீட்டில் ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து அனுமன் சாலீசா துதியைப் தொடர்ந்து ஒரு மண்டலம் பாராயணம் செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்