வயது முதிர்ச்சியை தடுக்கும் குடைமிளகாயை வைத்து அற்புதமான முறையில் ஒரு கிரேவி செய்து அசத்துக்கள். சாதம், சப்பாத்தி, பூரி என்று அனைத்திற்கும் இது நல்ல சைடு டிஷ்ஷாக இருக்கும்.

capsicum gravy
- Advertisement -

விட்டமின் சி சத்து நிறைந்த குடைமிளகாயை நம்முடைய உணவில் நாம் அதிகமாக சேர்த்துக் கொண்டால் வயது முதிர்ச்சி என்ற ஒன்று நமக்கு விரைவில் ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட குடைமிளகாயை வைத்து நாம் ஒரு அற்புதமான கிரேவி செய்தோம் என்ற குழந்தைகளும் அதை விரும்பி சாப்பிடுவார்கள் அல்லவா? இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் குடைமிளகாய் கிரேவி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

குடைமிளகாயை வைத்து மிகவும் எளிய முறையில் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாமா? முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ள வேண்டும். கடாய் சூடானதும் அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு கடுகும் சீரகமும் ஒரு ஸ்பூன் சேர்க்க வேண்டும். கடுகு வெடித்ததும் அதில் இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்க வேண்டும். கூடவே 10 மிளகை நன்றாக இடித்து அதனுடன் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பச்சை வாடை போன பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இரண்டு கப்பு வெங்காயத்தை அதில் சேர்க்க வேண்டும். ஒரு இனுக்கு கருவேப்பிலையையும் சேர்க்க வேண்டும். வெங்காயத்தை நன்றாக வதங்க வேண்டும். அதன் நிறம் மாற வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு 8 பல் பூண்டை சேர்க்க வேண்டும். பூண்டு நன்றாக வதங்கிய பிறகு அதனுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் நான்கு பெரிய தக்காளியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் தனியா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். எண்ணெய் நன்றாக பிரிந்து வரும் அளவிற்கு தக்காளியை வதங்க வேண்டும். தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு கால் கப் அளவிற்கு மட்டும் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்க வேண்டும். குடைமிளகாயில் மசாலா அனைத்தும் சேர்ந்து நன்றாக வேக வேண்டும். அவ்வளவுதான் குடைமிளகாய் கிரேவி தயாராகிவிட்டது. தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை தூவி இறக்கலாம்.

- Advertisement -

குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மூட்டு வலிக்கு மருந்தாகிறது. கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகள் வராமலும் குடமிளகாய் காக்கிறது.

இதையும் படிக்கலாமே: பருப்பு இல்லாத சாம்பாரை வெறும் 10 நிமிடத்தில் இப்படி கூட வைக்கலாமா? அவசரத்துக்கு இட்லி தோசைக்கு சைடிஷ் எதுவும் இல்லாத சமயத்தில், இந்த சாம்பார் நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும்.

இவ்வளவு மருத்துவ குணம் மிகுந்த குடைமிளகாயை நாமும் நம் உணவில் சேர்த்துக் உண்டு இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் வாழலாம்.

- Advertisement -