எவ்வளவுதான் சுத்தமாக வைத்திருந்தாலும் அடிக்கடி தலையில் அழுக்கு சேர்கிறதா? இதனால் உதிரும் முடி உதிர்தலை உடனடியாக சரி செய்ய இப்படி பண்ணினா போதுமே!

carrot-coconut-milk-hair-pack
- Advertisement -

நாம் என்னதான் தலையை அடிக்கடி வாரி சுத்தம் செய்தாலும், தலையின் ஸ்கால்ப் பகுதியில் ஏராளமான அழுக்குகளும், தூசுகளும் படிந்திருக்கும். இதை நீங்கள் சுத்தம் செய்யாவிட்டால் பொடுகு பிரச்சனை வரக்கூடும். ஒவ்வொரு பிரச்சினையாக அதன் பிறகு தலை எடுக்கத் துவங்கும். இதனால் முடி உதிர்தல் வேகமாக நடக்கும். இதிலிருந்து எளிதாக நம்முடைய தலை முடியை ரொம்பவே சுத்தமாக வைத்திருக்கவும், முடி உதிர்களை தடுத்து நிறுத்தவும் என்ன செய்யலாம்? என்கிற ரகசிய அழகு குறிப்பு பதிவை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

நம்முடைய தலை முடியை உள்ளிருந்தே வலுவாக்கக்கூடிய சத்துக்கள் அத்தனையும் நம் வீட்டு சமையல் அறையில் ஒளிந்து கொண்டிருக்கிறது. இந்த சில பொருட்களை நாம் பயன்படுத்தி தலைக்கு ஹேர் பேக் போல வாரம் ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை போட்டு வந்தாலே செமையான ஒரு ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -

இதற்கு முதலில் சமையல் கட்டில் இருக்கும் கேரட் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு தோல் சீவி விட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவிற்கு தேங்காய் துண்டுகளை சேர்த்து கால் கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த இந்த விழுதை பிழிந்தால் தேங்காய் பால் கிடைக்கும். இந்த தேங்காய் பாலுடன் துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள கேரட் சாறினை சேர்க்க வேண்டும் எனவே கேரட்டையும் மிக்ஸியில் தனியாக அரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

கேரட் சாறு மற்றும் தேங்காய் பால் ஒன்றுக்கு பாதியாக இருக்க வேண்டும் ஒரு மடங்கு கேரட் சாருடன் பாதி அளவிற்கு தேங்காய் பால் கலந்து கொள்ளுங்கள் பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு பாதாம் எண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள் பாதாம் எண்ணெயில் இயற்கையாக தலைமுடிக்கு மாஸ்டரைசர் செய்து நல்ல ஒரு புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது. மேலும் சைனிங்காகவும், அழுக்குகள் சேராமலும் பாதுகாக்க இது உதவும்.

- Advertisement -

இந்த எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பின்னர் தலைக்கு எல்லா இடங்களிலும் படும்படி பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அப்படியே தலை முடியை இறுக்கமாக கட்டி ஒரு 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். இதில் இருக்கக்கூடிய பொருட்கள் குளிர்ச்சி தன்மையை உங்களுக்கு ஏற்படுத்தாது என்பதால் எல்லாரும் பயன்படுத்தலாம். பிறகு நீங்கள் எப்போதும் போல தலைமுடியை மைல்டாக அலசி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
உங்க முகம் தங்கம் போல ஜொலிப்பதோடு,வசீகரமாகவும் இருக்கணும் நினைச்சா, ஆவாரம் பூவுடன் இந்த பொருளை சேர்த்து ட்ரை பண்ணுங்க. உங்க முகத்தை நீங்களே அடிக்கடி கண்ணாடியில் பார்த்து ரசித்து கொண்டே இருப்பீங்க.

எப்போதும் ஹேர் பேக் போடும் போது சுடச்சுட தண்ணீரை ஊற்றி தலையை அலசக்கூடாது. சாதாரணமான தண்ணீரில் அலசினால் போதும். குளிர்ந்த தண்ணீரிலும் தலையை அலசக்கூடாது. அவ்வளவுதாங்க இதை வாரம் ஒரு முறை கூட வேண்டாம், பத்து நாளுக்கு ஒருமுறை செஞ்சாலே உங்க முடி ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் பளபளன்னு நீண்டு அடர்த்தியாக கரு கருவென்று கருங்கூந்தல் போல சூப்பராக வளரும்.

- Advertisement -