அட்டகாசமான சுவையில் நொடியில் தயார் செய்யக்கூடிய ஜவ்வரிசி கேரட் பாயாசம் நீங்களும் இதே மாதிரி செஞ்சு பாருங்க வீட்டில் இருப்பவர்கள் திரும்பத் திரும்ப செய்ய சொல்லுவாங்க!

carrot-javvarisi-payasam1_tamil
- Advertisement -

அருமையான கேரட் பாயாசம் பல விதங்களில் செய்து பார்த்திருப்போம். ஆனால் ஜவ்வரிசியை கொண்டு செய்யப்படும் இந்த கேரட் பாயாசம் ரொம்பவே வித்தியாசமான சுவையுடன் இருக்கப் போகிறது. டேஸ்டியான ஜவ்வரிசி கேரட் பாயாசம் ரெசிபி செய்வதற்கு நேரம் அதிகமும் எடுக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய இந்த ஹெல்த்தியான கேரட் பாயாசத்தை எப்படி நாம் தயாரிக்க போகிறோம்? என்பதை தான் இந்த பதிவில் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

பெரிய கேரட் – ஒன்று, ஜவ்வரிசி – 2 டேபிள் ஸ்பூன், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, உலர் திராட்சை – தேவையான அளவு, பால் – 2 டம்ளர், ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன், சர்க்கரை – அரை கப்.

- Advertisement -

செய்முறை

இந்த கேரட் பாயாசம் செய்வதற்கு முதலில் ஒரு பெரிய கேரட்டை நன்கு தோல் சீவி கழுவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு தட்டில் முழுவதுமாக மெல்லியதாக துருவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக வையுங்கள். ஒரு பாத்திரத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெள்ளை ஜவ்வரிசியை சேர்த்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். பின் இதில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும்.

ஜவ்வரிசி நன்கு வெந்து வந்த பிறகு அடுப்பை அணைத்து இதை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு பேன் வைத்து அதில் நெய் விட்டு காய விடுங்கள். நெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்து முந்திரி பருப்புகளை போட்டு நன்கு பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் நெய்யில் உலர் திராட்சைகளை போட்டு வறுத்து எடுத்து தனியாக வையுங்கள். பின்னர் அதே நெய்யில் துருவிய கேரட்டை சேர்த்து நன்கு வதக்குங்கள்.

- Advertisement -

ஒரு ரெண்டு நிமிடம் நன்கு வதங்கியதும் இரண்டு டம்ளர் அளவிற்கு கெட்டியான பால் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பாலிலேயே கேரட் நன்கு வெந்து வரும். ஓரளவுக்கு கெட்டியான பதத்திற்கு வந்த பிறகு நீங்கள் வேக வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து கலந்து விடுங்கள். பாயாசம் எந்த அளவிற்கு கெட்டியாக உங்களுக்கு தேவையோ, அந்த அளவிற்கு இப்போது தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். பாயாசம் கொதித்து வந்த பிறகு அரைக்கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
அருமையான தக்காளி வடகம் செய்வது இவ்வளவு ஈஸியா? 1 வருடமானாலும் கெட்டுப் போகாது பெரிய அப்பளம் போல பொரித்து சாப்பிடலாமே!

பிறகு ஃப்ளேவருக்கு கால் டீஸ்பூன் அளவிற்கு ஏலக்காயை தூள் செய்து போட்டு கொள்ளுங்கள். பாயாசம் நன்கு கெட்டியானதும் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சைகளையும் அதன் மீது சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருமுறை மிதமான சூட்டிலேயே நன்கு கலந்து விட்ட பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான், சுவையான கேரட் ஜவ்வரிசி பாயாசம் ரெடி! இந்த பாயாசத்தை நீங்கள் அப்படியே சூடாகவும் சாப்பிடலாம் அல்லது ஆற வைத்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்தும் சாப்பிடலாம். ரொம்பவே டேஸ்டியான இந்த கேரட் ஜவ்வரிசி பாயாசத்தை இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க!

- Advertisement -