அருமையான தக்காளி வடகம் செய்வது இவ்வளவு ஈஸியா? 1 வருடமானாலும் கெட்டுப் போகாது பெரிய அப்பளம் போல பொரித்து சாப்பிடலாமே!

tomato-vadagam1
- Advertisement -

அருமையான தக்காளி வடகம் ரொம்ப ரொம்ப சுலபமாக இப்படி தயார் செய்து வைத்தால் ஒரு வருடம் கூட கெட்டுப் போகாது, ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது எல்லாம் எடுத்து பொறித்து சாப்பிட்டுக் கொள்ளலாம். எல்லா வகையான சாதங்களுக்கும் வைத்து சாப்பிடக் கூடிய இந்த சுவையுள்ள தக்காளி வடகம் எளிதாக எப்படி வீட்டில் தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி – ஒரு டம்ளர், தக்காளி – 2, சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, வெறும் மிளகாய்த்தூள் – கால் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

தக்காளி வடகம் செய்வதற்கு முதலில் ஒரு டம்ளர் அளவிற்கு பச்சரிசியை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின் நல்ல தண்ணீர் ஊற்றி சுமார் 4 மணி நேரம் நன்கு ஊற விட்டு விடுங்கள். அரிசி நன்கு ஊறி வந்த பிறகு ஒரு மிக்ஸர் ஜாரில் அவற்றை சேர்த்து கொஞ்சம் போல தண்ணீர் விட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தோசை மாவு பதத்திற்கு இருக்கும். அரைத்து எடுத்த இந்த மாவுடன் இப்பொழுது தக்காளியை அரைத்து ஊற்ற வேண்டும்.

ரெண்டு மீடியம் சைஸ் தக்காளியை எடுத்து பொடியாக நறுக்கி மிக்ஸர் ஜாரில் சேர்த்து நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்து மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். உங்கள் காரத்திற்கு நீங்கள் அரிசி மாவு அரைக்கும் பொழுதே இரண்டு வரமிளகாய்களை சேர்த்து அரைக்கலாம்.

- Advertisement -

அப்படி இல்லை என்றால் தக்காளி பேஸ்ட் கலந்த பிறகு அரை டீஸ்பூன் அளவிற்கு வெறும் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நல்ல பிளேவருக்கு அரை ஸ்பூன் சீரகத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த மாவை சிறு சிறு குழி உள்ள தட்டுகள் அல்லது கிண்ணங்களில் ஒரு கரண்டி அளவிற்கு ஊற்றி அடிப்பகுதியில் நன்கு பரப்பிக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒவ்வொரு தட்டுகளையும் அல்லது கிண்ணங்களையும் இட்லி பானையில் வைத்து ஒரு நிமிடம் மட்டும் அவித்து எடுக்க வேண்டும். அவித்து எடுத்த இந்த மாவை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் சேர்த்து லேசாக கத்தியை வைத்து பெயர்த்து எடுத்தால் தனியே வந்துவிடும். இப்பொழுது இதை ஒரு நாள் முழுக்க நல்ல வெயிலில் காய வைத்து எடுத்தால் போதும், மொற மொறவென்று தக்காளி வடகம் ரொம்ப சுலபமாக சூப்பரான முறையில் தயாராகி விடும்.

இதையும் படிக்கலாமே:
வெங்காயம் தக்காளி எதுவும் சேர்க்காம ஒரு காரச் சட்னி ரெசிபி. நல்லா சுள்ளுன்னு காரசாரமா சாப்பிடறவங்களுக்கு இப்படி செஞ்சு கொடுங்க. இந்த சட்னி ஒரு வாரம் ஆனா கூட கெட்டே போகாது.

தக்காளி சேர்த்து செய்யும் பொழுது ஒரு விதமான புளிப்பு சுவையுடன் நன்கு மொறு மொறு என்று ருசியாக இருக்கும். இந்த அருமையான தக்காளி வடகம் தயாரித்த பின்பு நீங்கள் ஒரு வருடம் வரை கூட ஸ்டோர் செய்து வைக்கலாம், கெட்டுப் போகாது. தேவைப்படும் பொழுது எண்ணெயை கொதிக்க வைத்து அதில் ஒவ்வொரு வடகத்தையும் போட்டு பொரித்து எடுத்தால் அப்பளம் போல பெரிதாக பொரிந்து வரும். சுவையான தக்காளி வடகத்தை இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்.

- Advertisement -