- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கேரட் சாதத்தை இப்படி செய்து கொடுத்து பாருங்க. லஞ்ச் பாக்ஸ் காலியாகத்தான் திரும்பிவரும்.

கேரட் சாதத்தை இப்படி செய்து கொடுத்து பாருங்க. லஞ்ச் பாக்ஸ் காலியாகத்தான் திரும்பிவரும்.

- Advertisement -

பள்ளிகள் திறக்க கூடிய இந்த சமயத்தில் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி நமக்கு அவசியம் தேவைப்படும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வெரைட்டி ரைஸ் என்றால் அதில் இந்த கேரட் சாதத்திற்கு முதலிடம் உண்டு. கேரட் சாதம் தானே, எல்லோருக்கும் செய்ய தெரியுமே. ஆனால், வழக்கம் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இப்படி ஒரு முறை இந்த கேரட் சாதத்தை ட்ரை பண்ணி பாருங்க. சுவையிலும் மணத்திலும் நிச்சயம் வித்தியாசம் இருக்கும்.

carrot

முதலில் ஒரு பெரிய பவுல் அளவு சாதத்தை, தேவையான அளவு உப்பு போட்டு வடித்து ஆற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 3 பெரிய கேரட் துண்டுகளை கழுவி, தோல் சீவி துருவி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் 5 டேபிள் ஸ்பூன் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 டேபிள்ஸ்பூன், உரித்து இடித்த பூண்டு பல் – 10, கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, வரமிளகாய் – 4, கறிவேப்பிலை – 2  கொத்து, பச்சைமிளகாய்- 4 கீரியது, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து பருப்பு அனைத்தும் பொன்னிறம் வரும் வரை வறுக்க வேண்டும்.

carrot-rice1

பருப்பு வறுபட்டு வந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன் அளவு, சேர்த்து மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி, பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன் போட்டு, துருவிய கேரடை போட்டு, நன்றாக வதக்கி விட வேண்டும். தண்ணீர் எதுவும் தெளிக்க வேண்டாம். எண்ணெயிலேயே கேரட்டை வதக்கி மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து விட்டு வேகவைத்துக் கொள்ளவேண்டும். கேரட் அப்படியே ஐந்தே நிமிடத்தில் வெந்துவிடும்.

- Advertisement -

அடுத்தபடியாக கேரட் வெந்ததும் உதிரி உதிரியாக இருக்கக்கூடிய சாதத்தை கடாயில் இருக்கும் கேரட்டுடன் கொட்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவி நன்றாக கலந்துவிட வேண்டும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். சாதம் கடாயில் இருக்கும் கேரட்டுடன் நன்றாக கலந்து சூடு ஆன பின்பு சுட சுட சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸில் கட்டிக் கொடுத்து மதியம் சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்க வீட்ல ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

carrot-rice2

பின்குறிப்பு: இந்த கேரட் துருவலில் உங்களுக்கு இன்னும் கூடுதலாக காரம் தேவைப்பட்டால் பச்சை மிளகாய்களை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் மிக குறைவான அளவு தான் சேர்க்க வேண்டும். உதிரி உதிரியான சாதத்தில் கேரட் சாதம் செய்வதைவிட, சாதத்தை கொஞ்சம் நன்றாக வேக வைத்து அந்த சாதத்தில் கேரட் சாதம் செய்தால் சுவை இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். ஆனால் பார்ப்பதற்கு உதிரி உதிரியாக அழகாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்