காலிஃபிளவரில் ஒரு முறை இப்படி அடை செஞ்சு பாருங்க. என்னங்க காலிஃபிளவர்ல அடையான்னு யோசிக்கிறீங்களா? ஆமா ரொம்பவே வித்தியாசமான இந்த அடை தோசையை எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

adai Cauliflower
- Advertisement -

நம்முடைய தினசரி உணவு பட்டியலில் இட்லி, தோசை இவற்றை போலவே அடையும் ஒரு முக்கியமான உணவு தான். முன்பெல்லாம் இதை அரிசி பருப்பு அனைத்தும் ஊற வைத்து அரைத்து செய்ய இதற்கென தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் உடனடியாக செய்யக் கூடிய பல இன்ஸ்டன்ட் அடை வகைகள் உள்ளது. அதுவும் இல்லாமல் அடைமாவு கடைகளில் கூட தனியாக விற்கப்படுகிறது. அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பகுதியில் இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ஒரு அடை ரெசிபி பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை 

இந்த அடை செய்ய முதலில் ஒரு மீடியம் சைஸ் காலிஃபிளவரை கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் போட்டு உடனே தனியாக எடுத்து வைத்து விடுங்கள். காலிஃபிளவர் வெந்து விடக் கூடாது. அடுத்து ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் கொஞ்சம் கருவேப்பிலை கொத்தமல்லியும் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது வெந்நீரில் போட்டு எடுத்த காலிஃபிளவரை நாம் காய் சீவும் சீவலில் துருவி கொள்ள வேண்டும். இப்போது காலிஃபிளவர் நமக்கு தேங்காய் துருவல் போல உதரி உதரியாக கிடைத்து விடும். இதை ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/4 டீஸ்பூன் கரம் மசாலா, 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1/2 டீஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள்.

அதன் பிறகு நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து பின்பு 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்த பிறகு 1 கப் மைதா மாவு, 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு இது இரண்டையும் சேர்த்த பிறகு தண்ணீர் ஊற்றாமல் முதலில் மாவை நன்றாக கலந்து விடுங்கள். இவையெல்லாம் நன்றாக கலந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அடை மாவை விட இன்னும் கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். இது மிகவும் தண்ணியாகவோ அல்லது அடை மாவு பதத்திற்கு இருந்தால் கூட நமக்கு சரியாக அடை தோசை ஊற்ற வராது.

- Advertisement -

இப்போது அடுப்பில் பேன் அல்லது தோசை கல் இரண்டில் உங்களிடம் எது உள்ளதோ அதை வைத்து சூடான பிறகு இந்த மாவை எடுத்து அப்படியே கேக் போல ஊற்றிக் கொள்ளுங்கள். இதை அகலமாக தோசை போல பரப்பாமல் கொஞ்சம் சின்னதாக அதே நேரத்தில் தடிமனாக ஊற்றிய பிறகு சுற்றிலும் எண்ணெய் ஊற்றி மூடி போட்டு இரண்டு நிமிடம் வரை வேக விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: தெளிவான கண் பார்வை பெற உதவும் கொத்தமல்லியை இப்படி எளிமையான முறையில் துவையல் செய்து சாப்பிட்டு பாருங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ரத்தத்தின் சர்க்கரை அளவையும் குறைக்க உதவும்.

ஒரு புறம் நன்றாக சிவந்து விடும் அதன் பிறகு மறுபுறம் திருப்பிப் போட்டு எடுத்து விடுங்கள். நல்ல சுவையான வித்தியாசமான காலிஃபிளவர் அடை தோசை தயார். இந்த காலிஃபிளவர் அடை தோசை ரெசிப்பி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க

- Advertisement -