தெளிவான கண் பார்வை பெற உதவும் கொத்தமல்லியை இப்படி எளிமையான முறையில் துவையல் செய்து சாப்பிட்டு பாருங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ரத்தத்தின் சர்க்கரை அளவையும் குறைக்க உதவும்.

malli thuvaiyal
- Advertisement -

நம்முடைய இந்தியாவில் தான் அதிக அளவில் கொத்தமல்லியை சமையலில் உபயோகித்து வருகிறோம். இது ஒரு வகையான கீரை வகையை சார்ந்ததாகும். இதில் இருக்கும் இலைகளும் தண்டுகளும் மிகவும் சத்து மிகுந்ததாக காணப்படுகிறது. இதை நாம் சமையலில் அலங்காரத்திற்காக உபயோகப்படுத்தும் பொழுது அதை குழந்தைகள் எடுத்து போட்டுவிட்டு சாப்பிடுவார்கள். ஆனால் அதுவே இதை துவையலாக செய்தால் அதில் இருக்கும் சத்துக்கள் எதுவும் குறையாமல் நம் உடம்பிற்கு கிடைத்து விடும். பல அற்புத சத்துக்களை கொண்ட இந்த கொத்தமல்லியை வைத்து எப்படி எளிமையான முறையில் சமையலே தெரியாதவர்கள் கூட துவையல் செய்ய முடியும் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

கொத்தமல்லியில் விட்டமின் ஏ, சி, கே போன்ற விட்டமின்கள் உள்ளன. மேலும் இதில் நார்ச்சத்துகளும், இரும்பு சத்துகளும், மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த இலையில் 11 அத்தியாவசியமான எண்ணெய்களும் காணப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

- Advertisement -

இந்த கொத்தமல்லியை நாம் தினமும் நம்முடைய உணவில் சேர்த்து உண்டு வந்தால் சர்க்கரையின் அளவை இது கட்டுப்படுத்துகிறது. மேலும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதோடு, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கவும் இது உதவுகிறது. கெட்ட கொழுப்பை குறைத்து உடலில் இருக்கக்கூடிய எலும்புகளை வலுப்பெறச் செய்கிறது. மேலும் குடல் ஆரோக்கியத்தையும் இது பாதுகாக்கிறது என்றே கூறலாம். அதையும் விட ஒரு படி மேலாக நம் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இவ்வளவு அற்புதங்களை தரக்கூடிய கொத்தமல்லியை வைத்து எப்படி எளிமையான முறையில் துவையல் செய்யலாம் என்று பார்ப்போம். இந்த துவையல் செய்வதற்கு ஒரு கட்டு கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து நீரில் அலசி வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடாய் நன்றாக சூடானதும் அதில் 1 1/2 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். பிறகு அதனுடன் 5 காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும். பருப்பு நன்றாக சிவந்த பிறகு உரித்து வைத்திருக்கும் 7 பல் பூண்டை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

பூண்டு லேசாக வதங்க ஆரம்பித்ததும் அதனுடன் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் இருக்கும் நீர் சத்து அனைத்தும் போகும் அளவிற்கு நன்றாக வதக்க வேண்டும். பிறகு அதில் துருவிய 1/2 மூடி தேங்காவை போட்டு வதக்க வேண்டும். பிறகு அதனுடன் ஒரு நெல்லிக்காய் அளவு புளியையும் சேர்த்து தேவையான அளவு உப்பையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும். அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து விட வேண்டும். வதக்கிய இந்த பொருட்கள் நன்றாக ஆற வேண்டும்.

ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது சிறிதாக நீர் ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சுவையான துவையல் தயாராகிவிட்டது. இட்லி, தோசை போன்ற டிபன் வகைகளுக்கு இதில் சிறிது தண்ணீரை ஊற்றி கரைத்து சட்னியாகவும் பயன்படுத்தலாம். அவ்வாறு சட்னியாக செய்யும் பொழுது அதில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை போன்றவற்றை தாளித்து போடுவதன் மூலம் அதன் சுவை மேலும் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: அட! இது என்ன பச்சை கலர் இட்லி? இதை எப்படி செய்வது? பார்க்கும்போதே சாப்பிடனும்னு ஆசையா இருக்கா. ரெசிபியை தெரிஞ்சுக்கோங்க.

சமைக்கவே தெரியாது என்பவர்கள் கூட இந்த எளிமையான கொத்தமல்லி துவையலை தங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் வாழலாம்.

- Advertisement -