புதையல் நிறைந்த அமானுஷ்ய குகை அதை பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கும் சித்தர்

kugai1
- Advertisement -

பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் இரும்பு, செம்பு போன்றவற்றை எல்லாம் மூலிகைகள் கொண்டு தங்கமாக்கினார்கள் என்று நாம் படித்திருப்போம். அதுபோல் பல சித்து விளையாட்டுகளை அறிந்த கொங்கணர் என்னும் சித்தர் செம்பை தங்கமாக்கி அதை ஒரு குகைக்குள் வைத்திருப்பதாகவும் அந்த குகையை அவரே காவல் காப்பாகாதாவும் கூறப்படுகிறது. வாருங்கள் அந்த அமானுஷ்ய குகை பற்றி விரிவாக பார்ப்போம்.

cave

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ளது தங்காயூர் வேலம்மாள் வலசு என்ற பகுதி. இந்த ஊரில் இருந்து 4 கி.மீ. தள்ளி ஒரு மலை உள்ளது. அதை ஒற்றை மலை என்று அந்த ஊர் மக்கள் அழைக்கிறார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும் இந்த மலையில் தான் அமானுஷ்ய குகை ஒன்று உள்ளது. இந்த குகைக்குள் பல மர்மங்கள் இன்றும் புதைந்திருப்பதாக அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர்.

- Advertisement -

இந்த குகைக்குள் கொடிய விஷம் கொண்ட பூச்சிகள் இருப்பதால் அதில் மக்கள் யாரும் நுழைவதில்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த குகையில் கொங்கண சித்தர் வாழ்ந்ததாகவும். அவர் அனைத்து பொருட்களையும் தங்கமாக மாற்றும் வித்தையை கற்றவர்’ என்றும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

Kongana siddhar

மாலைக்குள் இருக்கும் அந்த மர்ம குகைக்குள் 2 அறைகள் உள்ளன. முதல் அறை சற்று பெரியதாகவும் 2-வது அறை சிறியதாகவும் உள்ளது. 2-வது அறைக்குள் ஆட்கள் நுழைவது அவ்வளவு எளிதல்ல. ஒரே ஒரு ஆள் மட்டும் படுத்துக்கொண்டு நுழையும் அளவிற்கே சிறு துவரம் உள்ளது. அந்த அறைக்குள் ஒரு நான்கு கால் மண்டபம் இருப்பதாகவும் அதற்கடியில் தான் புதையல் இருப்பதாகவும், அந்தப் புதையலை இன்று வரை கொங்கண சித்தர் பாதுகாத்து வருவதாகவும் அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். மேலும் சில பேர் தங்க ஊஞ்சலில் அமர்ந்தபடி இன்னும் சித்தர் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.

- Advertisement -

குகைக்குள் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்த்துவிடலாம் என்று ஒரு சிலர் அதில் நுழைய முயற்சித்துள்ளனர். அனால் அவர்களால் அதற்குள் முழுமையாக நுழைந்து செல்ல முடியவில்லை. மூச்சி திணறல் காரணமாக போன வேகத்திலேயே திரும்பி வந்துவிட்டார்களாம்.

cave

அந்த குகைக்கு வெளியில் மலை பாறையை குடைந்து அதில் மூலிகைகள் அரைப்பதற்கு ஏதுவாக உரல் போல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அமர்நது தியானம் செய்வதற்காக கல்லில் மேடைபோல் ஒன்று உருவாக்கப்ட்டுள்ளது. மேலும் கொங்கணரில் சிலையும் விநாயகரின் சிலையும் குகைக்கு சற்று தூரத்தில் உள்ளது. இவை எல்லாம் அங்கு கொங்கணர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் என்று மக்கள் கூறுகின்றனர். அங்குள்ள கொங்கர் மற்றும் விநாயகர் சிலைகளுக்கு அந்த ஊர் மக்கள் விசேஷ நாட்களில் பூஜை செய்து வழிபடுகின்றனர்.

சித்தர்கள் என்றாலே புரியாத புதிர்தான். அவர்களது அமானுஷ்ய சக்தியை எவ்வளவுதான் ஆராய்ச்சி செய்தாலும் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவ்வளவு அமானுஷ்யம் அடங்கியுள்ள இந்த கோவிலை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்கும் வரும்.

- Advertisement -