உதவி செய்யும் எண்ணம் இருந்தால், இந்த 5 பேரை திரும்பிக்கூட பார்க்காதீங்க. சாணக்கிய நீதி.

- Advertisement -

பிரதிபலனை எதிர்பார்க்காமல் நாம் மற்றவர்களுக்கு செய்யும் நல்ல காரியங்களை தான் உதவி என்று கூறுகின்றோம். அப்படி இருக்கும் பட்சத்தில் ‘இவர்களுக்கு உதவி செய்யலாமா?’ ‘அவர்களுக்கு உதவி செய்யலாமா!’ என்று யோசித்து உதவி செய்வது மட்டும் சரியா என்ற கேள்வி நம் எல்லோர் மனதிலும் வரும். நாம் மற்றவர்களுக்கு செய்யும் உதவிக்காக நமக்கு எந்த ஒரு பிரதிபலனும் வேண்டாம். எந்த ஒரு நல்ல பெயரும் கூட வேண்டாம். அவர்கள் நம்மை பாராட்டவும் வேண்டாம். ஆனால் அவர்களுக்கு உதவி செய்த ஒரே காரணத்திற்காக நம் வாழ்க்கைக்கே பெரிய பிரச்சனை வந்துவிட்டால் என்ன செய்வது? இப்படியும் சிலர் இருக்கிறார்கள்.. நாம் செய்யும் உதவியை பெற்றுக்கொண்டு நம்மையே குறைகூறும் பலபேர் இந்த பூமியில் இருந்துதான் வருகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் நாம் அடையாளம் கண்டு கொள்வது எப்படி. இதற்கான விடையை சாணக்கியர் நமக்காக சொல்லி இருக்கின்றார். அது என்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Chanakya

முதலில் அடுத்தவருக்கு ‘துரோகம்’ செய்பவர்கள். ‘நம்முடைய எதிரிகளை கூட மன்னித்து விடலாம். ஆனால் துரோகிகளை மன்னிக்கவே கூடாது’ என்று நம் முன்னோர்கள் ஒரு பழமொழியை நமக்கு கூறியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு உங்களுக்கு நண்பனாக இருக்கும் ஒருவர், அடுத்தவருக்கு துரோகம் செய்வதை நீங்கள் அருகில் இருந்து பார்த்து இருப்பீர்கள். மற்றவருக்கு துரோகம் செய்யும் அந்த நபர், இன்று உங்களுக்கு துரோகம் செய்யவில்லை. ஆனால் அடுத்தவருக்கு துரோகம் நினைக்கும் எண்ணம் கொண்டவர் உங்களை மட்டும் விட்டு வைப்பாரா? யாருக்கு துரோகம் செய்தாலும் அது துரோகம் தானே! ஆகவே துரோக எண்ணம் கொண்டவர்களிடம் நட்பும் வைத்துக் கொள்ளாதீர்கள். அவர்களுக்கு உதவியும் செய்து விடாதீர்கள். அது உங்களுக்கு பிரச்சனையைதான் தேடித்தரும்.

- Advertisement -

இதில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள் ‘அடுத்தவர்களை குறை சொல்பவர்கள்’. ‘மற்றவர்களைப் பற்றி உங்களிடம் வந்து குறை கூறுபவர்கள், உங்களைப் பற்றி மற்றவர்களிடம் சென்று குறை கூற மாட்டார்கள்’ என்பது என்ன நிச்சயம். இது நீங்கள் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். உங்களுக்கு தெரிந்த நபரோ அல்லது உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் நபரோ இப்படிப்பட்ட ஒரு குணத்தை கொண்டிருந்தால் அவர்களுக்கு உதவி என்று போய் நீங்கள் நிற்காதீர்கள். எப்படியாக இருந்தாலும் உங்களைப் பற்றியும், நீங்கள் செய்த உதவியை பற்றியும் மற்றவர்களிடம் சென்று குறை கூறத்தான் செய்வார்கள்.

Chanakya

மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் ‘அரைகுறையான அறிவை’ உடையவர்கள். அதாவது முட்டாளுக்கு கூட சில விஷயத்தை சொல்லி புரிய வைத்துவிடலாம். அறிவாளிகள் சொல்வதை சுலபமாக புரிந்து கொள்வார்கள். ஆனால் இந்த அரைகுறை அறிவோடு இருக்கின்றார்களே! அவர்களுக்கு சிலது தெரிந்து இருக்கும். சிலது தெரியாமல் இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லி புரிய வைப்பதற்குள் பிராணனே போய்விடும். அவ்வளவு விவாதத்தில் ஈடுபடுவார்கள். ஆகவே இப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவியும் உங்களை பிரச்சினையில் கொண்டுபோய் விடும்.

- Advertisement -

நான்காவதாக கூறப்படுவது ‘ஒழுக்கமில்லாத பெண்’. இந்த காலகட்டத்தில் ஒரு பெண்ணிற்கு பிரச்சனை என்றால் பத்து பேர் ஓடி வந்து நிற்பார்கள். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கூட ஒரு பெண் விழுந்து விட்டாள் அவளை தூக்கி விட நிறைய பேர் இருப்பார்கள். ஒரு ஆண் விழுந்துவிட்டால்! அவரையும் காப்பாற்றுவதற்கு சில பேர் வருவார்கள், ஆனால் ‘யோசித்து வருவார்கள்’. இப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு பெண்ணிற்கு கஷ்டம் என்று வந்துவிட்டால், உதவிக்காக செல்பவர் நல்ல மனதோடு சென்றாலும், அந்தப் பெண் நல்லவரா என்பதை தெரிந்து கொண்டு செல்வது நல்லது. நல்ல குணத்தை உடைய பெண்கள் என்றால் பிரச்சினையே இல்லை. ஆனால் அந்தப் பெண் மற்றவர்களை ஏமாற்றும் குணம் கொண்டவளாக இருந்தால்! உங்களால் அந்தப் பிரச்சினையிலிருந்து கண்டிப்பாக வெளியில் வரவே முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

ஐந்தாவதாக கூறப்படுவது ‘நேர்மை இல்லாதவர்கள்’. நேர்மை இல்லாதவர்களுக்கு நாம் செய்யும் உதவி நம்மையும் அவர்களது பட்டியலில் சேர்த்து விடும். அதாவது அவர்கள் செய்யும் கெட்ட செயலுக்கு நாமும் துணை போவதாக தானே அர்த்தம். குறிப்பாக பெண்களிடம் நேர்மை இல்லாதவர்களிடம் எந்த சகவாசமும் வைத்துக் கொள்ளாதீர்கள். அப்படிப்பட்டவர்கள் நிச்சயம் ஒழுங்கீனம் உடையவர்களாக தான் இருப்பார்கள். அவர்களுக்கு உதவி செய்தால் பிரச்சனை உங்களுக்குத்தான்.

- Advertisement -

ஒருவருக்கு சரியான நேரத்தில் நாம் செய்யப்படும் உதவி என்பது மிகவும் மகத்தான ஒன்று. ஆனால் அதன் மூலம் நமக்கு பிரச்சினைகள் வரும் என்றால் அதிலிருந்து நாம் தள்ளி இருப்பதில் எந்த ஒரு தவறும் இல்லையே! உதவியை செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்யப் போய் நீங்கள் மாட்டிக் கொள்ளாதீர்கள். மேலே குறிப்பிட்டுள்ள குணம் கொண்டவர்களிடம் இருந்து ஒரு அடி தள்ளியே இருப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே
சாணக்கியர் உரைத்த வெற்றிக்கான தந்திர குறுக்கு பாதைகள் பற்றி தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Chanakya neeti. Chanakya thanthram. Chanakya quotes in Tamil. Chanakya thoughts in Tamil. Chanakya niti.

- Advertisement -