உங்கள் ஜாதகத்தில் இந்த கிரகங்கள் சேர்க்கை பெற்றால் யோகங்கள் பல உண்டு

budhan

பொதுவாக அனைத்து மனிதர்களுக்குமே சிந்தனை திறன் இருந்தாலும், சிறந்த கல்வி அறிவும், அனுபவங்களும் பெறும் போது அந்த சிந்தனைத்திறன் மேலும் கூர்மையடைந்து, அந்த நபருக்கு புதியவற்றை படைக்கும் படைப்பாற்றலை தூண்டுகிறது. ஜோதிட சாஸ்திரம் மனிதர்களின் மனதிற்கு காரகன் சந்திரன் பகவான் எனவும், அதே சமயம் அந்த மனிதர்களின் கல்வியறிவு மற்றும் சிந்தனை திறனுக்கு காரகத்துவம் வகிப்பவர் புதன் பகவான் எனவும் கூறுகிறது. இந்த சந்திரனும், புதனும் சேர்ந்து ஒரு நபரின் ஜாதகத்தில் இருப்பதால் உண்டாகும் பலன்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

chandra bagawan

ஜோதிட புராணங்கள் தேவலோகத்தில் சந்திர பகவான் நடத்திய யாகத்திற்கு சென்ற குரு பகவானின் மனைவியான தாரைக்கும், சந்திர பகவானுக்கும் ஏற்பட்ட முறையற்ற தொடர்பால் பிறந்த மகன் தான் புதன் பகவான் என கூறுகிறது. வளர்பிறை சந்திரன் சுப பலன்களை வழங்கும் கிரகம். அதே போன்று புதன் கிரகமும் ஓரளவிற்கு சுபத்தன்மை கொண்ட கிரகம் ஆவார். எனவே ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் – புதன் சேர்ந்து இருப்பதால் நன்மையான பலன்களே உண்டாகும். இந்த சந்திரன் மற்றும் புதன் கிரகங்கள் சேர்ந்திருக்கும் வீடுகள் சந்திரன் மற்றும் புதன் பகவானுக்குரிய உச்ச மற்றும் ஆட்சி வீடுகளாக இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகருக்கு சிறப்பான வாழ்க்கை அமைய வழி வகை செய்யும்.

ஜாதகத்தில் புதன் – சந்திரன் சேர்ந்திருக்கும் அமைப்பு பெற்றவர்கள் சிறந்த வியாபார தந்திரம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு தொழிலில் ஈடுபட்டாலும் குறுகிய காலத்திலேயே புகழும், செல்வமும் ஈட்டுவார்கள். மக்கள் ஈர்ப்பு தன்மை இவர்களுக்கு அதிகம் இருப்பதால் மக்களிடம் அதிகம் தொடர்புடைய தரகுத் தொழில், அரசியல் துறை போன்றவற்றில் சிறப்பார்கள். அரசியல் துறையில் இவர்கள் ஈடுபட்டாள் தங்களின் சிறந்த மதிநுட்பத்தாலும், செயல்பட்டாலும் உயர்ந்த அமைச்சர் பதவிகளையும் பெறுவார்கள். அரசியல் சாணக்கியர் எனவும் சிலர் இவர்களை புகழ்வார்கள்.

budhan

வியாபாரத் திறன் இருந்தாலும் அடிக்கடி மக்களை சந்தித்து, அவர்களுடன் பழகும் வாய்ப்பளிக்கும் தொழில்கள், பணிகளையே விரும்பிச் செய்வார்கள். சிறந்த பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றலிருக்கும். இந்த இரண்டின் மூலம் எதிரிகளையும் தங்களின் ஆதரவாளர்களாக மாற்றி விடுவார்கள். காகிதம் சம்பந்தமான பொருட்கள், திரவம் சம்பந்தமான பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் விற்பனை, மருந்துப் பொருட்கள் தயாரிப்பு, நடமாடும் உணவகம் மற்றும் புத்தக விற்பனை கடை போன்ற தொழில்கள் இவர்களுக்கு மிகுந்த லாபத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு அதிக செல்வமும், அதிர்ஷ்டமும் உண்டாக இவை தேவை

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chandra budhan palan in Tamil. It is also called as Chandra bhagavan in Tamil or Budhan graham in Tamil or Jathagathil chandran in Tamil or Chandra budhan serkai in Tamil.