உங்களுக்கு சொந்த வீடு, நிலம் அமைய ஜாதகத்தில் இவை இருந்தால் போதும்

chandra

ஜோதிடத்தில் ஜாதகம் பார்த்து பலன் கூறப்படும் ஜோதிடக்கலை மிகவும் நுணுக்கமானதாகும். இக்கலையில் பல்வேறு கிரகங்கள், நட்சத்திர சாரங்கள், புக்திகள், திசைகள், பாகைகள், போன்றவற்றை கணக்கிட்டு பலன்கள் கூறப்படுகின்றன. பலரும் தங்களின் ஜாதகத்தில் எந்த கிரகத்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளவே ஆர்வமாக இருக்கின்றனர். அந்த வகையில் ஒருவரின் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை பார்ப்போம்.

jathagam astro

ஒரு நபரின் ஜாதகத்தில் அதிர்ஷ்டங்கள் ஏற்பட பல்வேறு கிரகங்களின் நிலைகள், அந்த கிரகங்கள் இருக்கின்ற வீடுகள், அந்த கிரகங்கள் சேர்க்கை மற்றும் சுபகிரக பார்வை மூலம் அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனினும் திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படுவதற்கு ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாம் வீடு காரணமாக அமைகிறது.

ஒரு நபரின் ஜாதகத்தில் எட்டாம் வீடு திடீர் அதிர்ஷ்டம் தரக்கூடிய இடமாகி, அந்த வீட்டில் சந்திரன் கிரகம் இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகன் தனது சிறந்த புத்திசாலித்தனம் மூலம் மிகுதியான அதிர்ஷ்டங்களை பெறுவார். அவரின் தாயார் மூலமாக அந்த ஜாதகருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். வெள்ளி, வைரம் போன்ற ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

chandra bagawan

அரிசியைப், பால், தண்ணீர், அலுமினியம், எண்ணெய் போன்ற வியாபாரங்களில் அந்த ஜாதகர் ஈடுபட்டிருந்தால் அந்த வியாபாரங்களில் மிகப்பெரிய லாபங்கள் உண்டாகும். மேலும் உணவுப் பண்டங்கள் தயாரித்தல், துணிகளை தூய்மை செய்தல் போன்ற தொழில்களில் இருந்தாலும் அதில் மிகச் சிறந்த அதிர்ஷ்டங்களும் லாபங்களையும் கிடைக்கப் பெறுவார்கள். தங்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களால் மிகப் பெரும் அதிர்ஷ்டம் ஏற்படும். இவர்களுக்கு திடீரென்று சொந்த வீடு அமையும். அந்த வீடு ஏதேனும் ஒரு நீர்பாங்கான இடத்திற்கு அருகில் அமையும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ஜாதகத்தில் இந்த கிரகங்கள் இணைந்திருந்தால் அமோக வாழ்க்கை

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chandra graha adhirstam in Tamil. It is also called as Chandran palangal in Tamil or Athirstam in Tamil or Jothida palangal in Tamil or Jathaga palangal in Tamil.