28-10-2023 அன்று நடக்கவிருக்கும் சந்திர கிரகணம் பற்றிய தெளிவான தகவல்கள்

chandra-graham
- Advertisement -

இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆனது 28-10-2023 ஆம் தேதி நிகழ்வு இருக்கின்றது. இந்த சந்திர கிரகணம் நடைபெறவிருக்கும் நேரம் என்ன. இந்த கிரகணம் நம்முடைய இந்தியாவில் தெரியுமா? இந்த சந்திர கிரகணத்தால் பாதிக்கப்பட போகும் ராசிகள் எவை, எந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.

ஐப்பசி மாதம் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடக்குமே பௌர்ணமி நாளன்று, கிரகணம் வந்துவிட்டால் அந்த அன்னாபிஷேகம் எப்போது செய்வார்கள், இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

- Advertisement -

சந்திர கிரகணம் நடைபெறவிருக்கும் நேரம்

இந்த சந்திர கிரகணமானது 28ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி, 29ஆம் தேதி அதிகாலை முடிவடையும். அதாவது அக்டோபர் 28ஆம் தேதி நள்ளிரவு 11.31 நிமிடத்திற்கு பகுதி சந்திர கிரகணம் ஆனது தொடங்கவிருக்கின்றது. இந்த கிரகணம் உச்சமடையக்கூடிய நேரம் என்றால் அக்டோபர் 29 நளளிரவு 1.44 மணியிலிருந்து அதிகாலை 3.56 வரை நடக்க இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவிலும் நிச்சயம் தெரியும்.

பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்

ரேவதி, அஸ்வினி, மகம், மூலம், பரணி, இந்த ஐந்து நட்சத்திரக்காரர்களும் பரிகார பூஜை செய்து கொள்ள வேண்டும். கிரகணம் நடைபெறும் நேரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கிறது. ஆகவே கன்னி ராசிக்காரர்களும் இந்த பரிகாரத்தை செய்து கொள்வது நல்லது என்று ஜோதிடர்களால் சொல்லப்பட்டுள்ளது. கவனமாக இருக்க வேண்டிய ராசிகளின் பட்டியலில் மேஷம், தனுசு, சிம்மம், மீனம் இந்த நான்கு ராசிகளும் அடக்கம்.

- Advertisement -

ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. இந்த கிரகண நேரத்தில் மேலே சொல்லப்பட்டுள்ள நட்சத்திர ராசிக்காரர்களுக்கு நவகிரகங்கள் சரியான இடத்தில் அமரவில்லை. அதனால் ஏதேனும் பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு ஆட்படும் ராசிக்காரர்கள், நட்சத்திரக்காரர்கள் கிரகண நேரத்தில் பூஜை அறையில் அமர்ந்து குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளலாம்.

உங்களுக்கு பிடித்த தெய்வத்தின் நாமத்தைச் சொல்லி வழிபாடு செய்யலாம். அப்படி இல்லை என்றால் ஓம் சக்தி, ஓம் நமசிவாய, ஸ்ரீ ராம ஜெயம், இப்படிப்பட்ட மந்திரங்களை உச்சரிக்கும் போது அதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.

- Advertisement -

அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலை சந்திர கிரகணம் முடிவடைகிறது அல்லவா. அடுத்த நாள் காலையில் எழுந்தவுடன் எல்லோரும் தலைக்கு குளித்து விட வேண்டும் பிறகு வீட்டையும் பூஜை அறையையும் சுத்தம் செய்துவிட்டு இறைவழிபாடு செய்து விட்டு புதுசாக உணவினை சமைத்து சாப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

பிறகு கோவில்களிலும் காலை நடை திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் கடவுளுக்கு நடைபெறும். கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்வது எல்லோருக்கும் நல்லது. ராசி நட்சத்திரம் பார்க்காதீங்க. எல்லோரும் கிரகணம் முடிந்த பிறகு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்யுங்கள் இது பொதுப்படையானவை.

தோஷ நிவர்த்தி பரிகாரம்

கிரகணம் நடந்து முடிந்த பிறகு, மறுநாள் காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பரிகாரம் செய்ய வேண்டிய ராசி நட்சத்திரக்காரர்கள் பக்கத்தில் இருக்கும் கோவிலில் நவகிரக சன்னிதானத்தில், சந்திர பகவான் இருப்பார். அவருக்கு தேங்காய் உடைத்து உங்கள் பெயர், நட்சத்திரம் ராசி சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். உங்கள் கைகளால் நெல்மணிகள், மட்டை தேங்காய், அதோடு உங்களால் முடிந்த காணிக்கையை வைத்து ஒரு பிராமினருக்கு தானமாக கொடுத்து விட்டால் போதும். உங்களுக்கு பிடித்த கிரக பீடை விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அன்னாபிஷேகம் எப்போது

தஞ்சை பெரிய கோவிலில் 28ஆம் தேதி மாலை 3.00 மணியிலிருந்து இரவு 7.00 மணி வரை அன்னாபிஷேகம் நடைபெறும் என்று சொல்லப்பட்டுள்ளது. இரவு 8.00 மணி அளவில் அர்த்த ஜாம பூஜையும் நடந்து முடிந்து விடும். அதன் பிறகு நடை சாத்தப்படும். கிரகண நேரம் 28ஆம் தேதி நள்ளிரவு தான் நமக்கு தொடங்குகிறது அல்லவா.

ஆகவே 28ஆம் தேதி முன்கூட்டியே தஞ்சை பெரிய கோவிலில் ஈசனுக்கு இந்த அன்னாபிஷேகம் நடைபெற்று முடிந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே மற்ற கோவில்களிலும் இதே போல அன்னாபிஷேகத்தை செய்து கொள்ளலாம் என்று சிவாச்சாரியார்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

கர்ப்பிணிகள் கவனத்திற்கு


இரவு நேரத்தில் தான் இந்த சந்திர கிரகணம் வரப்போவதால், கர்ப்பிணிகள் வெளியே செல்வதற்கு வாய்ப்பு கிடையாது. இருப்பினும் சில பேர் நள்ளிரவில் பசிக்கும் என்பதற்காக பழங்கள், பால் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி பசித்தாலும் கர்ப்பிணி பெண்கள் கிரகண நேரத்தில் எந்த ஒரு உணவையும் சாப்பிடக்கூடாது.

இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமை இந்த ஒரு வரி மந்திரத்தை சொன்னால் தங்கம் சேரும்.

மனதிற்குள் குல தெய்வத்தின் பெயரை உச்சரித்துக் கொண்டு அமைதியாக இருப்பது நல்லது. தூக்கத்திலேயே இந்த கிரகண நேரம் கழித்து விட்டால் எந்த தொந்தரவும் இல்லை. ஒரு வேலை உங்களுக்கு முழிப்பு வந்தால் கிரகணத்தின் தாக்கம் உங்கள் குழந்தையை தாக்காமல் இருக்க குலதெய்வத்தின் நாமத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொள்ளுங்கள். மேலே சொல்லப்பட்டிருக்கும் ஆன்மீகம் சார்ந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளபடி அமைந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -