உங்கள் மனக்கவலைகள் நீங்க, நினைத்த காரியங்கள் நடக்க இவற்றை செய்யுங்கள்

moon

பகற்பொழுதில் உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் சூரியனின் வெப்பத்தால் அவதியுறுகின்றன. ஆனால் பௌர்ணமி இரவில் முழு நிலவின் ஒளியில் அவ்வுயிர்கள் அனைத்தும் உடலும், மனமும் குளிர பெறுகின்றன. பௌர்ணமியில் வானில் தோன்றும் முழுமையான சந்திரனின் அழகில் மனம் அமைதி மனிதர்களுக்கு தானாகவே உண்டாகிறது. எனவே தான் சந்திரனை மனோகாரகன் என ஜோதிட சாஸ்திரம் வர்ணிக்கிறது. அப்படிப்பட்ட சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் பாதகமான நிலையில் இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்கும் நிலை உண்டாகிறது. அந்த சந்திரனின் முழுமையான அருளைப் பெற்று எல்லா வகை இன்பங்களையும் பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் பற்றி இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Chandra Baghavan

மாதந்தோறும் வருகின்ற பௌர்ணமி, சுபமுகூர்த்த வளர்பிறை திங்கட்கிழமைகள் மற்றும் சந்திர பகவானுக்குரிய நட்சத்திர தினங்கள், உங்கள் ஜென்ம நட்சத்திர தினங்களில் இந்த சந்திர ஹோமத்தை செய்து கொள்ளலாம். இந்த சந்திர ஹோமத்தை வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்து கொள்ளலாம். கோயில்களில் செய்வது பலன்களை விரைவாக தர வல்லதாகும். யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது.

சந்திர ஹோமம் செய்யும் தினத்தன்று ஹோம பூஜை செய்யும் நபர்கள் காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பான பலன்களை தரும். உணவு சாப்பிட விரும்புபவர்கள் உப்பு, புளி, காரம் சேர்க்காத உணவுகள் அல்லது பழம், பால் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

சந்திர ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய சந்திர கிரக தோஷங்களை போக்குகிறது.

- Advertisement -

chandra bagavan

இந்த சந்திர ஹோமத்தை செய்து கொள்ளும் நபர்களுக்கு ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புக்தி போன்றவை நடைபெறும் காலங்களில் சந்திர கிரகத்தால் ஏற்படுகின்ற தோஷங்கள், பாதகமான பலன்கள் போன்றவை ஏற்படாமல் தடுத்து நன்மைகளை உண்டாக்கும். தாயாருக்கு ஏற்பட்டிருக்கின்ற உடற்பிணிகள் போன்றவை நீங்கும். தாய் வழி முன்னோர்களின் சொத்துக்களை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும்.

Homam

மன நல பாதிப்புகள் நீங்கும். வீண் பயங்கள், கவலைகள், மன அழுத்தங்கள் போன்றவை அகலும். வயிறு, நுரையீரல் போன்றவற்றில் ஏற்படும் நோய்கள் குணமாகும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு அரசியலில் வெற்றியையும், புகழையும் உண்டாக்கும். வெளிநாடுகள் செல்லும் முயற்சிகளில் வெற்றியுண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். காரியங்களில் இருக்கின்ற தடை, தாமதங்கள் நீங்கும். பெண்களால் பொருள் இழப்பு, அவமானம் போன்றவை ஏற்படாமல் காக்கும்.

இதையும் படிக்கலாமே:
குரு பகவானால் ஏற்படும் புத்திர தோஷம் நீங்க பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chandra homam in Tamil. It is also called as Chandra graha shanti homam in Tamil or Homangal in Tamil or Homam pooja in Tamil or Homangal palangal in Tamil.