மாத்ரு சாபம் நீங்க, குழந்தை பாக்கியம் உண்டாக இதை செய்யுங்கள்

chandran

நம்மால் ஒருவர் எந்த வகையிலாவது பாதிக்கப்படும் போது, பாதிப்பிற்குள்ளான அந்த நபர் நமக்கு ஏதாவது தீங்கு ஏற்பட வேண்டும் என கோபத்துடன் கூறுவதே சாபம் எனக் கருதப்படுகிறது. சாபங்கள் பல வகை இருக்கின்றன. இதில் நம்மை பெற்றெடுத்த தாயே நமக்கு தரும் சாபம் மாத்ரு சாபம் எனப்படுகிறது. இந்த மாத்ரு சாபம் பல பிறவிகள் கடந்தும் நம்மை பாதிக்கும் சக்தி கொண்டது. இதனால் ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது. இத்தகைய பாகத்திற்கான தீர்வு என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Chandra Baghavan

சூரிய பகவான் எப்படி ஒரு ஜாதகருக்கு தந்தைக்கு காரகத்துவம் கொண்ட கிரகமாக இருக்கிறாரோ அது போலவே சந்திர பகவான் ஒருவரின் தாய்க்கு காரகத்துவம் வாய்ந்த கிரகமாக இருக்கிறார். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் பகவானால் அவருக்கு புத்திர தோஷம் ஏற்பட்டு இருக்குமானால் அந்த ஜாதகர் முற்பிறவியில் தன்னைப் பெற்றெடுத்த தாயை சரிவர கவனிக்காமல், அவருக்கு சரியாக உணவு வழங்காமலும் இருந்த காரணத்தால் அந்த தாயின் சாபத்தால் இப்பிறவியில் அவருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் சிக்கல் உண்டாகும் நிலை ஏற்படுகிறது. ஒரு அனுபவம் வாய்ந்த ஜாதகரிடம் தங்கள் ஜாதகத்தை கொடுத்து ஆராய்ந்து சந்திர பகவான் இருக்கும் நிலை தான் தங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொண்டு, அதற்கான கீழ்கண்ட பரிகாரத்தை செய்வதால் நிச்சயம் குழந்தைப் பேறு உண்டாகும்.

100 கிராம் தரமான பச்சரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அரிசியை ஒன்பது பாகங்களாக பிரித்துக் கொண்டு, ஒரு தூய்மையான வெள்ளைத் நிற காடா துணியை எடுத்து, ஒன்பது துண்டுகளாக பிரித்து இந்த ஒன்பது பாக அரிசியை, அந்த ஒன்பது துண்டுகளாக இருக்கும் துணியில் போட்டு பொட்டலமாக முடிந்து கொள்ள வேண்டும். பிறகு ஒன்பது துணி முடிப்புகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து விட வேண்டும். அதில் ஒரு முடிப்பை இரவில் கணவன் – மனைவி இருவரும் தங்கள் படுக்கையில், இருவருக்கும் சேர்த்து ஒரே தலையணைக்கு அடியில் வைத்து கொண்டு உறங்க வேண்டும்.

chandra bagawan

மறுநாள் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் மனைவி கை, கால், முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைத்த அந்த துணி முடிப்பை கையில் வைத்துக் கொண்டு, சந்திர பகவானை மனதில் நினைத்து சந்திர பகவானே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும் என ஒன்பது முறை மனதார துதித்து வழிபட வேண்டும்.

- Advertisement -

chandra bagavan

இப்படி வழிபட்டு முடிந்ததும் அந்த முடிச்சை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். இதே போல் மீதமுள்ள முடிச்சுகளை வைத்து ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்ய வேண்டும். பத்தாவது நாள் காலையில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஒன்பது பச்சரிசி முடிந்த துணி பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு, ஓடும் ஆற்று நீர் அல்லது கண்மாயில் யாரும் பார்க்காத போது போட்டு விட்டு வர வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சூரிய தோஷம் நீங்குகிறது. இந்தப் பரிகாரம் செய்த 45 நாட்களுக்கு பிறகு மனைவி வயிற்றில் கரு உருவாக சந்திர பகவான் அருள் புரிவார்.

இதையும் படிக்கலாமே:
பதவி உயர்வு கிடைக்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chandra putra dosha pariharam in Tamil. It is also called as Kulanthai bakkiyam pera in Tamil or Putra dosham neenga in Tamil or Chandra graha dosha in Tamil or Chandra graham in Tamil.