இன்று இந்த சந்திர காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு

chandran

பௌர்ணமி இரவுகளில் வானில் உதிக்கின்ற சந்திரனின் அழகில் மனம் பறிகொடுத்த மனிதர்களே இல்லை. அத்தகைய சந்திரன் தான் மனிதர்களின் மனங்களைக் கட்டுப்படுத்தும் மனோகாரகனாக இருக்கிறார். மேலும் ஒரு மனிதனின் இடது கண், தாயார், வெளிநாடு பயணங்கள் ஆகியவற்றை தீர்மானிக்கும் கிரகமாக சந்திரன் ஜாதகத்தில் செயல்படுகிறார். அந்த சந்திர பகவானின் நல்லருளை பெறுவதால் வாழ்வில் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும். அவற்றை நாம் பெற உதவும் சந்திர பகவானுக்குரிய “சந்திர காயத்ரி மந்திரம்” இதோ.

chandra bagavan

சந்திர காயத்ரி மந்திரம்

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்

பொதுவான பொருள் :

“தாமரைப்பூ சின்னம் பொறித்த கொடியை உடையவராகவும், பொன்னிற ஒளியை வெளிப்படுத்துபவராகவும் இருக்கும் சந்திர பகவானை வணங்குகிறேன். அத்தகைய சந்திர பகவான் எனது அறிவாற்றலை சிறக்கச் செய்து, என் வாழ்வில் ஒளிவீச அருள்புரியுமாறு வேண்டுகிறேன்” என்பதே இந்த காயத்ரி மந்திரத்தின் சரியான பொருளாகும்

chandra bagawan

- Advertisement -

சந்திர பகவானின் இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை துதிப்பது சிறந்தது. திங்கட்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் சந்திர பகவானின் காயத்ரி மந்திரத்தை 108 முறைகளுக்கு மேலாக துதிப்பவர்களுக்கு மனோபலம் அதிகரிக்கும். கண்பார்வை குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கும். அழகு மற்றும் இளமைத் தோற்றம் உண்டாகும். செல்வமும் பெருகும். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புக்தி நடப்பவர்கள் இம்மந்திரத்தை 108 முதல் 1008 முறை வரை தினமும் ஒரு துதித்து சந்திரனால் ஏற்படும் பாதகமான பலன்கள் நீங்கும்.

சந்திர பரிகாரங்கள்:

சந்திர பகவானுக்குரிய சிறந்த பரிகாரத் தலமாக தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திங்களூர் சந்திரன் கோவில் இருக்கிறது. ஏதேனும் ஒரு வளர்பிறை திங்கட்கிழமை தினத்தில் காலை 9 மணிக்குள்ளாக திங்களூர் சந்திர பகவான் கோவிலுக்கு, சென்று சந்திர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவதால் ஜாதகத்தில் சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும். இந்த பரிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ செய்வது சிறப்பு.

திங்களூர் சந்திர பகவான் கோவிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வளர்பிறை திங்கட்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் அருகில் உள்ள கோவிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதியில் சந்திரனுக்கு மல்லிகை பூ சாற்றி, நிறமி சேர்க்கப்படாத கேசரி அல்லது தயிர் சாதம் நைவேத்தியம் வைத்து, சந்திர காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை வரை துதித்து வழிபாடு செய்வதால் சந்திர பகவானின் அருளால் வாழ்வில் மங்களமான பலன்கள் அதிகம் ஏற்படும்.

Chandra Baghavan

மேற்கூறிய இரண்டு பரிகாரங்களையும் செய்ய முடியாதவர்கள் திங்கட்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் அருகில் உள்ள சிவ பெருமான் கோவிலில், சிவபெருமான் அபிஷேகத்திற்கு தரமான பசும்பாலை தானமாக கொடுக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்ததும் பெற்ற தாயாரிடம் காலை தொட்டு, ஆசிர்வாதம் வாங்குவது சந்திரனின் அருளை உங்களுக்கு தரும். வெள்ளியில் சந்திரகாந்தக்கல் பதித்த மோதிரத்தை எப்போதும் உங்கள் வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்வது சிறந்தது.

chandra grahanam

மேலும் உங்கள் சக்திக்கு ஏற்ப திங்கட்கிழமைகளில் மனநலம் குன்றியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு தயிர்சாதம், நீர்மோர் போன்றவற்றை தானம் வழங்க வேண்டும். கோடைக்காலங்களில் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் பந்தல் அமைப்பது, சாலையில் திரிகின்ற விலங்குகள் தாகம் தணிப்பதற்கு வீட்டிற்கு வெளியே தண்ணீர் தொட்டியில் நீர் ஊற்றி வைப்பதும் சந்திர பகவானின் அருளைப் பெறுவதற்கான சிறந்த பரிகாரங்களாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
வாக்குவன்மை, செல்வ சேகரம் உண்டாக்கும் மந்திரம்

இது போன்று மேலும் பல காயத்திரி மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English overview:
Here we Chandran gayathri manthiram in Tamil. This mantra is also called as Chandra gayatri manthiram in Tamil or Chandra bhagavan gayatri mantra in Tamil or Gayathri mantras in Tamil or Chandran manthiram in Tamil.