உங்களுக்கு சிறந்த வாக்குவன்மை, செல்வ சேர்க்கை ஏற்பட செய்யும் துதி இதோ

vinayagar

இந்த பூமியில் தோன்றிய உயிர்களில் பேசும் திறன் என்பது மனித குலத்திற்கு மட்டுமே கிடைத்த ஒரு வரம் ஆகும். பேச்சுத்திறன் எனப்படும் சிறந்த வாக்கு வன்மையை ஒருவர் பெற்றிருந்தால், நன்மைகள் பல அவரை தேடி வரும். மேலும் வேண்டிய காரியங்களில் வெற்றியும், வாழ்வில் மிகச் சிறப்பான செல்வச் சேர்க்கையும் ஏற்படுவதற்கு வழிவகை செய்கிறது. ஒரு நபருக்கு சிறந்த வாக்குவன்மை ஏற்பட விநாயகப் பெருமானின் அருள் வேண்டும். அந்த விநாயகப் பெருமானின் அருளை பெற்று தரும் துதி இதோ.

Vinayagar

விநாயக பெருமான் துதி

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும்
செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும்

உருவாக்கும் ஆதலால் வானோரும்
ஆனைமுகத்தானைக் காதலால் கூப்புவர் தம்கை

ஆனைமுகன் எனப்படும் விநாயகப்பெருமானை போற்றும் 11 ஆம் திருமுறை துதி இது. இந்தத் துதியை தினமும் காலையில் 27 முறை அல்லது 108 முறை துதிப்பது மிக சிறப்பாகும். புதன் கிழமைகள் மற்றும் மாதத்தில் வருகின்ற சதுர்த்தி திதிகளில் மாலையில் விநாயகர் கோவிலுக்கு சென்று, விநாயகருக்கு பாலபிஷேகம் செய்து, அருகம்புல் சமர்ப்பித்து இந்தத் துதியை 108, 1008 முறை துதித்து வழிபடுபவர்களுக்கு சிறந்த வாக்கு வன்மை உண்டாகும். செய்கிற காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். செல்வச் செழிப்பு மற்றும் வளமான வாழ்வும் ஏற்படும்.

vinayagar

- Advertisement -

“விநாயகப் பெருமானை வழிபடுவதால் தெய்வீக வாக்கு வன்மை உண்டாகும். செய்யும் காரியங்கள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். செல்வச் சேர்க்கை ஏற்படும். எனவே தான் விண்ணுலக தேவர்களும் விநாயகப்பெருமானை விரும்பி வழிபடுகின்றனர் என்பதே இந்த துதியின் பொதுவான பொருள் ஆகும். மனிதர்களாகிய நாமும் இந்த விநாயகர் துதியை உளமார துதித்து விநாயகரை வழிபடுவதால் வாழ்வில் சகல நன்மைகளையும் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே:
ஆபத்துகள் நீங்க மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vinayaga peruman thuthi in Tamil. It is also called as Pillayar mantra in Tamil or Vinayagar slokam lyrics in Tamil or Ganesh mantras in Tamil or Ganapathy manthirangal in Tamil.