உங்களின் தீராத கடன் பிரச்சனைகளை விரைவில் தீர்க்கும் அற்புத மந்திரம்

ambal

உலகில் இருக்கும் அனைவருமே என்ன தான் கடினமாக உழைத்தாலும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க ஒரு அழகிய வீடு ஆகியவற்றிற்காக தான் அவர்கள் உழைத்து ஈட்டும் செல்வத்தில் பெரும் பகுதியை செலவழிக்க நேரிடுகிறது. மேலும் சில சமயம் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளுக்காக கடன்களும் வாங்க நேருகிறது. இது எல்லாம் சேர்ந்து ஒரு நபரை மிகுதியான பொருளாதார கஷ்டத்திற்கு உள்ளாக்குகிறது. சமயங்களில் அவர் மற்றும் அவரது குடும்பத்தையே வறுமை நிலையில் அவதியுறுமாறு செய்துவிடுகிறது. இவை அனைத்தையும் போக்கும் ஒரு அற்புதமான மந்திரம்தான் சாகம்பரி தேவி காயத்ரி மந்திரம்.

sagambari

சாகம்பரி தேவி காயத்ரி மந்திரம்

ஓம் சாகம்பர்யை வித்மஹே சதாக்ஷ்யை
ச தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்

சாகம்பரி தேவிக்குரிய சக்தி வாய்ந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் உடல் மற்றும் மன சுத்தியுடன் 108 முறை துதிப்பது நல்லது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டில் இருக்கும் பூஜையறையில் அம்பாளின் படம் முன்பாக பழம் அல்லது கற்கண்டுகள் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து, இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதிப்பதால் உங்கள் வீட்டில் நிலவுகின்ற வறுமை நிலையை விரைவில் போக்கும். உணவு, உடை, தண்ணீர் போன்றவற்றிற்கு எப்போதும் குறைவு உண்டாகாது. தீராத கடன் பிரச்சினைகள் தீரும். நீங்கள் விரும்பிய காரியங்கள் அனைத்தும் நடைபெறும்.

mariyamman

சாகம்பரி தேவி வழிபாடு

- Advertisement -

பெண் தெய்வ வழிபாடு என்பது நம் இந்திய நாட்டில் மிகப் பழங்காலம் தொட்டே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நமது கஷ்டங்கள் தீர பெண் தெய்வங்களை தாயாக கருதி முறையாக துதித்து வழிபாடு செய்வது வழக்கமான ஒன்று தான். அதிலும் அனைத்து நன்மைகளையும் வழங்குகின்ற இந்த சாகம்பரி தேவியை வழிபாடு வட இந்தியாவில் உத்திராஞ்சல், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருக்கின்ற பக்தர்கள் அதிகம் மேற்கொள்கின்ற ஒரு வழிபாட்டு முறையாக இருக்கின்றது. அப்படி வழிபாடு செய்யும்போது சாகம்பரி தேவிக்குரிய மந்திரங்களை துதித்து அவர்கள் வழிபாடு செய்து வாழ்வில் மிகுதியான பலன்களை பெறுகின்றனர்.

சாகம்பரி தேவி வழிபாட்டிற்குரிய தினங்கள்

மங்களங்கள் வழங்கும் தெய்வமான சாகம்பரி தேவியை அனைத்து தினங்களிலும் வழிபடலாம் என்றாலும் வாரத்தில் வருகின்ற புசெவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். மேலும் நவராத்திரி காலத்தில் சாகம்பரி தேவிக்கு நைவேத்தியங்கள் வைத்து வழிபடுவது வாழ்வில் நன்மைகள் அதிகம் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிபாடாக இருக்கிறது.

sagambari

சாகம்பரி தேவி வழிபாடு பலன்கள்

சாகம்பரி தேவிக்குரிய காயத்ரி மந்திரங்களை ஜெபித்து, வழிபாடு செய்வதால் அனைத்து விதமான தோஷங்கள் நீங்கி, நன்மைகள் உண்டாகும். வறுமை நிலை நீங்கி செல்வங்கள் பெருகும். தொழில், வியாபாரங்களில் நஷ்டங்கள் ஏற்படாமல் நல்ல வருமானமும் உண்டாகும். கல்வி, கலைகளில் சிறந்து விளங்க முடியும். திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த வாழ்க்கைத்துணை அமையப் பெறுவார்கள். மன அமைதி கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
நடக்கப்போவதை முன்கூட்டியே தெரிவிக்க உதவும் மந்திரம்

இது போன்று மேலும் பல காயத்திரி மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Shakambari devi gayatri mantra in Tamil. It is also called as Shakambari devi mantra in Tamil or Devi mantras in Tamil or Gayathri mantras in Tamil or Gayathiri manthiram in Tamil.