நீங்க சப்பாத்தி சுட்டா மட்டும் வரட்டி மாதிரி வருதா? சப்பாத்தி மாவு பிசையும் போது 2 ஸ்பூன் இந்த மாவையும் கூட சேர்த்து பிசைஞ்சு பாருங்க. சப்பாத்தி அப்படியே லேயர் லேயராக சாஃப்ட் ஆக வரும்.

chappathi
- Advertisement -

சப்பாத்தி என்று நாம் சுலபமாக சொல்லி விடுவோம். ஆனால் இல்லத்தரசிகளுக்கு சாஃப்ட் ஆக இந்த சப்பாத்தியை செய்வதற்குள் போதும் போதும் என ஆகிவிடும். சில பேர் சப்பாத்தி சுட்டால் ட்ரையாக வரட்டி போல வரும். சப்பாத்தியை சாஃப்டாக அதேசமயம் சுவையாக செய்வதற்கு எளிமையான, சுலபமான பயனுள்ள குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த குறிப்பை பின்பற்றினால் உங்கள் வீட்டு சப்பாத்தி நிச்சயம் சாஃப்ட் ஆக வரும். வாங்க அந்த பயனுள்ள வீட்டு குறிப்பு என்ன என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

சப்பாத்தி மாவு பிசையும் முறை:
சப்பாத்தி ரொம்பவும் வறட்சியாக வருவதற்கு முதல் காரணம் சப்பாத்தி மாவில் சரியான அளவு தண்ணீரை ஊற்றி பிசையாததுதான். மாவுக்கு ஏற்ற தண்ணீரை சரியான அளவு ஊற்றி இருக்க வேண்டும். 2 கப் மாவுக்கு, 3/4 கப் தண்ணீர் சரியாக இருக்கும். சில மாவு கொஞ்சம் தண்ணீரை அதிகமாக உறிஞ்சும். சில மாவு தண்ணீரை கொஞ்சம் குறைவாக உறிஞ்சும்.

- Advertisement -

அதற்கு ஏற்றது போல கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து நீங்கள் மாவை பிசைய வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் 2 கப் கோதுமை மாவு போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, இதில் 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு போட்டு, முதலில் எல்லா மாவையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு 3/4 கப் அளவு தண்ணீரை ஊற்றி, 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு மாவை சாஃப்ட்டாக பிசைந்து, அதன் மேலே லேசாக எண்ணெயை தடவி ஒரு மூடி போட்டு, மூடி வைத்து விடுங்கள். மாவு டிரையாக கூடாது. சப்பாத்தி மாவு பிசைந்து வைத்த பிறகு 1 மணி நேரம் ஊறினால் சப்பாத்தி சாஃப்டாக கிடைக்கும். (கடலை மாவு சேர்க்கும்போது சப்பாத்தி எப்போதும் செய்வதை விட மிக மிக மிருதுவாக லேயர் லேயராக உப்பி நமக்கு கிடைக்கும்.)

- Advertisement -

மாவு நன்றாக ஒரு மணி நேரம் ஊறிய பின்பு, மாவை மீண்டும் உங்கள் கைகளைக் கொண்டு லேசாக பிசைந்து, தேவையான உருண்டைகளை செய்து எடுத்துக் கொள்ளுங்கள். மாவைத் திரட்டும் போது அதிகமாக மாவு தொட்டாலும் சப்பாத்தி மேலே, ரொம்பவும் நரநரப்பாக வந்து விடும். அதையும் நீங்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.

மாவின் மிகக் குறைந்த அளவு தண்ணீர் ஊற்றி மாவை ரொம்ப கல்லு போல பிசைந்தாலும் சப்பாத்தி வரட்டி போல தான் வரும். சப்பாத்தி தேய்க்கும் போது ரொம்பவும் மெல்லிசாகவும் கேட்கக் கூடாது. ரொம்பவும் தடிமனாகவும் தேய்கக் கூடாது.

- Advertisement -

சரியான பக்குவத்தில் சப்பாத்தியை தேய்த்து, சூடாக இருக்கும் தோசை கல்லில் போட்டு, உடனடியாக எண்ணெய் ஊற்றி விடக்கூடாது. இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு சப்பாத்தியை வேகவைத்து அதில் சின்ன சின்னதாக பபுள்ஸ் எழும்பி வரும்போது, எண்ணெய் அல்லது நெய் தடவினால் சப்பாத்தி மேலே நன்றாக பொங்கி வரும். சப்பாத்தி சிவந்து வெந்தவுடன், அதன் பிறகு சப்பாத்தியை கல்லிலிருந்து எடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஹோட்டல் ஸ்டைலில் சுவையான அதே சமயம் ஆரோக்கியமான வெஜ் வெள்ளை குருமா வீட்டில் இப்படி செஞ்சி பாருங்க. இனி யாரும் ஹோட்டல் பக்கமே போக மாட்டாங்க

இப்படி எண்ணெய் ஊற்றாமல் இரண்டு பக்கமும் வேக வைத்து அதன் பின்பு எண்ணெய் ஊற்றி சிவக்க விட்டு சப்பாத்தியை கல்லிலிருந்து எடுத்தால் சப்பாத்தி ஆறிய பின்பு கூட சாஃப்ட் ஆக இருக்கும். உப்பி வரும்போது லேயர் லேயராக நமக்கு கிடைக்கும். அதிலும் இந்த சப்பாத்தியில் குறிப்பாக நாம் இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்திருக்கின்றோம். இப்படி செய்தால் நீங்கள் செய்யக்கூடிய சப்பாத்தியின் பக்குவம் நிச்சயம் தவறவே தவறாது. நீங்களும் சாஃப்ட் ஆக சப்பாத்தி செய்யலாம். வேண்டும் என்றால் மேலே சொன்ன குறிப்பை பின்பற்றி ஒரு முறை சப்பாத்தி மாவு பிசைந்து சப்பாத்தி செய்து தான் பாருங்களேன். உங்கள் வீட்டில் நிச்சயம் பாராட்டு கிடைக்கும்.

- Advertisement -