உங்கள் லக்கினம் என்ன ? இது தான் உங்கள் குணம்

astrology

மேஷம்
meshamமேஷ லக்கினத்தில் பிறந்த நண்பர்கள் பிறரிடம் அன்பு பாராட்டும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதோடு பிறர் கூறும் புத்திமதிகளை இவர்கள் அலட்சியம் செய்ய மாட்டார்கள். செல்வம் சேர்ப்பதில் வல்லவர்களான இவர்கள் எப்போதும் செல்வந்தர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். மற்றவர்களிடம் இருக்கும் உயர் குணங்களை இவர்கள் எப்போதும் பாராட்டுவார்கள்.

ரிஷபம்
rishabamரிஷப லக்கினத்தில் பிறந்த நண்பர்கள் சில நேரங்களில் உண்மைக்கு புறம்பானவர்களோடு சேரும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். திருமண வாழ்வை பொறுத்தவரையில் இவர்களுக்கு அன்பான மனைவி அமைவர். சில ஆண்கள் தன் வயதிற்கு மூத்த பெண்களை திருமணம் செய்யவும் வாய்ப்புகள் உண்டு. இவர்கள் மனதில் சில நேரங்களில் வஞ்சனைகளும் பொய்யும் குடிகொள்ள வாய்ப்புகள் அதிகம். கலைத்துறையில் இவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். இவர்கள் நல்ல செல்வ செழிப்போடு வாழ்வார்கள்.

மிதுனம்
midhunamமிதுன லக்கினத்தில் பிறந்த நண்பர்களுக்கு கற்பனை சக்தி சற்று அதிகம் உண்டு. பிறரிடம் எப்போதும் வெளிப்படையாக பேசும் இவர்கள் எப்போதும் மலர்ந்த முகத்தோடு காணப்படுவார்கள். கணிதத்தில் இவர்களுக்கு ஆர்வம் சற்று அதிகமாக இருக்கும். பணத்தை இவர்கள் எப்போதும் பெரிய பொருட்டாக நினைக்கமாட்டார்கள். சில நேரங்களில் வீம்பிற்கு செலவு செய்வார்கள்.

கடகம் 
kadagamகடக லக்கினத்தில் பிறந்த நண்பர்கள் குடும்பத்தை விட வெளியில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். பொருளை காட்டிலும் புகழை விரும்பும் இவர்கள் எளிதில் ஏமாற மாட்டார்கள். பொருளாதாரத்தை பொறுத்தவரையில் இவர்களிடம் பணம் வரும் போகும். அரசியலில் இவர்களுக்கு ஈடுபாடு சற்று அதிகமாக இருக்கும். சிலர் அரசியவாதியாக கூட இருக்கலாம். பிறரை மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்களுக்கு பொருளாதார பிரச்சனை அவ்வப்போது வரும்.

சிம்மம்
simmamசிம்ம லக்கினத்தில் பிறந்த நண்பர்களுக்கு முன்கோபம் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனாலும் அவை விரைவில் மறையும். இவர்கள் தான் நினைத்தைதை எப்படியாவது செய்தே ஆகவேண்டும் என்று எண்ணுபவர்கள். ஆனால் பல நேரங்களில் இவர்களுக்கு ஒரு தூண்டுகோல் தேவைப்படும்.மாமிச உணவை அதிகம் விரும்பி சாப்பிடும் இவர்கள் நல்ல உடல் வலிமையோடு இருப்பார்கள். இவர்களிடம் நெருகுவதற்கு எப்போதும் பிறர் சற்று அஞ்சுவார்கள்.

கன்னி
kanniகன்னி லக்கினத்தில் பிறந்த நண்பர்களுக்கு கல்வி என்பது சற்று கடினமாக இருந்தாலும் வியாபாரத்தில் சிறந்து விளங்குவர். இவர்கள் சிக்கனமாக இருந்து பொருளை சேர்த்துவிடுவர். இவர்களிடம் உதவி என்று சென்றால் பல நாட்கள் இழுத்தடிப்பார்கள். சில நேரங்களில் தன் பேச்சால் மற்றவர்களை எளிதில் ஏமாற்றிவிடுவார்கள்.

- Advertisement -

துலாம்
thulamதுலா லக்கினத்தில் பிறந்த நண்பர்களுக்கு வியாபாரம் என்பது அருமையாக அமையும். மிகவும் சாமர்த்தியமாக வியாபாரம் செய்யும் இவர்களுக்கு கூட்டு தொழிலும் நன்கு ஒத்துப்போகும். ஆனால் தன்னோடு கூட்டில் இருப்பவர்கள் தனுக்கு அடிபணிந்து தான் நடக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். செல்வம் சேர்ப்பதில் இவர்கள் வல்லவர்களாக இருந்தாலும் மனதில் அவ்வவ்போது சிறிதளவு வஞ்சமும் இருக்கும். இவர்களிடம் புத்திசாலித்தனமும் சாமர்த்தியமும் எப்போதும் குடிகொண்டிருக்கும்.

விருச்சிகம்
virichigamவிருச்சிக லக்கினத்தில் பிறந்த நண்பர்கள் நல்ல அறிவு திறன் கொண்டவர்காளாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு இவர்கள் ஆதரவாக இருப்பார்கள். இவர்களிடம் செல்வம் தடையின்றி செல்லும். சில நேரங்களில் தர்மம் செய்வார்கள். சில நேரங்களில் செய்யமாட்டார்கள். அவர்கள் மனப்போக்கு எப்படியோ அப்படியே நடந்துகொள்வர். சற்று முன்கோப குணம் கொண்ட இவர்கள் சில நேரங்களில் கலகம் செய்வதிலும் ஈடுபடுவார்கள்.

தனுசு
dhanusuதனுசு லக்கினத்தில் பிறந்த நண்பர்கள் பிறரிடம் நன்றாக பழகும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். நல்ல அறிவோடும் பண்போடும் செல்வாக்கோடும் வாழ்வார்கள். இவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டால் நியாயமாக நடந்துகொள்வார்கள். சில நேரங்களில் பொருளாதார பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறன் இவர்களிடம் இருக்கும். இவர்களின் குடும்ப அமைப்பு சிறப்பாக இருக்கும்.

மகரம்
magaramமகர லக்கினத்தில் பிறந்த நண்பர்கள் நல்ல சாதுர்யமாக பேசும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்வில் முன்னேற்றம் அடைய பல திட்டங்களை வகுத்து அதன்படி நடந்து வெற்றி காண்பர். வித விதமான ஆடி அணிகலன்கள் அணிந்து மகிழும் குணம் கொண்டவர்கள். கலையில் அதிக ஆர்வம் கொண்ட இவர்கள் சினிமா சம்மந்தமான துறையில் ஜொலிக்க வாய்ப்புகளை அதிகம்.

கும்பம்
kumbamகும்ப லக்கினத்தில் பிறந்த நண்பர்களுக்கு குடும்ப அமைப்பு சிறப்பாக இருக்கும். நல்ல உலக அறிவு படைத்தவர்களாக இவர்கள் இருப்பார்கள். இவர்கள் பல நேரங்களில் தற்பெருமையை விரும்புவார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் அடைவதை சற்று தாமதம் ஏற்படலாம். இவர்கள் பிறரை நன்கு சோதிப்பார்கள். செல்வம் சேர்க்கும் திறன்கொண்ட இவர்கள் தர்மவானாகவும் இருப்பார்கள்.

மீனம்
meenamமீன லக்கனத்தில் பிறந்த நண்பர்களின் போக்கை அறிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. இவர்களிடம் இருக்கும் ரகசியத்தை பிறர் அவ்வளவு எளிதில் பெற முடியாது. ஏழ்மை நிலையில் இருந்தாலும் எப்படியாவது முன்னேறும் குணம் கொண்டவர்கள். இவர்கள் தாராள மனப்போக்கோடு காணப்பட்டாலும் சில நேரங்களில் கஞ்சத்தனம் காட்டுவார்கள்.