வீட்டிற்குள் இந்த திசையில் மட்டும் செடிகளை வைத்து வளர்க்கவே கூடாது. இது வீட்டில் இருப்பவர்களுக்கு மனக் கஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

planting-water
- Advertisement -

நமக்கு முன்னால் வாழ்ந்த முன்னோர்கள் வீட்டிற்கு முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும் செடிகொடிகளை வைத்து வளர்த்து வந்தார்கள். அது உடலுக்கும், நம்முடைய சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய வீடுகளில், அந்த அளவிற்கு இட வசதி கிடையாது. சில வீடுகள் மிகவும் நெருக்கமாக இடைவெளியிலும், சில வீடுகள் இடைவெளியை இல்லாமலும் தான் கட்டப்பட்டுள்ளன. அப்படி இருக்கும் போது வீட்டிற்குள் செடிகளை வைத்து வளர்ப்பதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

vastu-direction

அவரவர் விருப்பப்படி, அவரவருக்கு இஷ்டப்பட்ட செடிகளை வீட்டிற்குள் வாங்கி வைத்து வளர்த்துக் கொள்ளலாம். இதற்கு குறிப்பிட்ட வாஸ்து எதுவும் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் பொதுவாகவே வடக்கு திசையிலும் கிழக்குத் திசையிலும் உங்களுடைய வீட்டில் இடம் இருந்தால், உங்கள் வீட்டிற்குள் வளர்க்கக்கூடிய செடிகளைப் வடக்குப் பக்கத்தில் கிழக்குப் பக்கத்திலும் வைத்து வளர்த்து வரலாம். அதாவது வடக்குப் பக்கத்தில் இருக்கும் பால்கனி. அல்லது கிழக்கு திசையில் இருக்கும் பால்கனி.

- Advertisement -

இப்படி வடக்கு பக்கத்திலும் கிழக்குப் பக்கத்திலும் வைத்து வளரக்கூடிய செடிகள் இயற்கையாகவே செழிப்பாக வளரும். செடிகளில் நிறைய பூக்கள் பூக்கும். நிறைய காய்கள் காய்க்கும். அப்படி இருக்கும்போது உங்களுடைய மனதிற்குள் ஒரு நிறைவு கிடைக்கும். நம் வீட்டில் வளர்க்கும் செடிகள் நம்முடைய குழந்தைகள் போல் தான். நம்முடைய வீட்டில் இருக்கும் குழந்தைகளை எப்படி பராமரிக்கின்றோமோ, அதேபோல்தான் செடி கொடிகளையும் பரமத்து வருகின்றோம்.

ஆசை ஆசையாக வாங்கி வைத்த செடி நன்றாக வளரும் போது அதை பார்க்கும் போது நம்மை அறியாமலேயே நமக்குள் ஒரு சந்தோஷம் வரும். நமக்குள் ஒரு மனநிறைவு ஏற்படும். இது நமக்கு நேர்மறை ஆற்றலை உண்டாக்கி பல நன்மைகளை, நம்முடைய வாழ்க்கையில் கொண்டு வந்து சேர்க்கும். இதனால் வீட்டிற்குள்ளும் சரி, வீட்டிற்கு வெளியேயும் சரி வடக்கு பக்கத்திலும் கிழக்குப் பக்கத்திலும் செடிகளை வைத்து வளர்ப்பது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அடுத்தபடியாக தெற்கு மேற்கு. இந்த இரண்டு திசைகளில் செடி கொடிகளை நட்டு வைத்து வளர்த்து வந்தால் இயற்கையாகவே அந்த செடிகளுக்கு கிடைக்கக்கூடிய போஷாக்கு ஊட்டச் சத்து நிறைவாக கிடைக்காது. இதன்மூலம் செடிகள் நன்றாக வளராது. ஆசைஆசையாக நாம் வாங்கி வைத்த செடி கொடிகள் நன்றாக வளராமல் பட்டுப் போய் விட்டால் அது நம்முடைய மனதிற்கு கவலையை கொடுக்கும். அந்த கவலை, சோகமாக மாறும். அந்த வருத்தம் எதிர்மறை விளைவுகளை உண்டுபண்ணி விடும்.

money-plant1

செடியை வாங்கி வைத்து அது வளராமல் போனால் அதன் மூலம்,  எவ்வளவு கஷ்டம் வரும் என்பது, ஆசைஆசையாக செடிகளை வளர்ப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஆகவே முடிந்த வரை உங்களுடைய வீட்டில் தெற்கு பக்கத்திலும் மேற்கு பக்கத்திலும் செடிகளை வைத்து வளர்க்க வேண்டாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

Money plant

உங்கள் வீட்டில் இருக்கும் மாடி தோட்டம் ஆக இருந்தாலும் சரி, வீட்டிற்கு வெளியில் இடமிருந்து அந்த இடத்தில் தோட்டம் போடுவதாக இருந்தாலும் சரி, அல்லது உங்கள் வீட்டிற்குள் தொட்டியில் செடிகளை வைத்து வளர்த்து வந்தாலும் சரி, அதை வடக்கு பக்கத்திலும் கிழக்குப் பக்கத்திலும் வைத்து வளர்ப்பது செடிகளின் செழிப்பானவளர்ச்சிக்கு மிகவும் நல்லது. செடியின் செழிப்பான வளர்ச்சியை பார்க்கும் போது நம்முடைய மனம் சந்தோஷம் அடையும். அந்த சந்தோஷம் நமக்கு பல நன்மைகளை கொண்டு வந்து சேர்க்க கூடியதாக அமையும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -