இப்படி மசாலா அரைத்து சுவையான செட்டிநாட்டு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்தால் போதும். தட்டு நிறைய சாதம் கொடுத்தாலும் தட்டாமல் சாப்பிடுவார்கள்

ennai
- Advertisement -

ஒவ்வொரு நாள் பொழுதும் ஒவ்வொரு விதமான உணவுகளை சமைக்க தான் செய்கின்றனர். ஆனால் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வித சுவைகளில் குழம்பு செய்யப்படுகிறது. அதிலும் ஆந்திராவில் செய்யப்படும் குழம்பு என்றால் அது மிகவும் காரணமாக இருக்கின்றது. அதேபோல் தமிழ்நாட்டில் செய்யப்படும் குழம்பு வகைகள் மிதமான காரத்துடன் இருக்கும். அவ்வாறு செட்டிநாடுகளில் செய்யும் குழம்புகளில் எப்பொழுதும் மசாலா வாசனை அதிகமாகவே இருக்கும். இவ்வாறு செய்யப்படும் குழம்பு மிகவும் அருமையான சுவையில் இருக்கும். எனவே தான் செட்டிநாடு சமையல் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கிறது. அவ்வாறு செட்டிநாடு ஸ்டைலில் ஒரு அருமையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – அரை கிலோ, வெங்காயம் – 4, தக்காளி – 3, எண்ணெய் – 100 கிராம், கசகசா – ஒரு ஸ்பூன், சோம்பு – 2 ஸ்பூன், பொட்டுக்கடலை – 2 ஸ்பூன், முந்திரி – 10, தேங்காய் – அரை மூடி, புளி – எலுமிச்சை பழ அளவு, உப்பு – ஒரு ஸ்பூன், தனியா தூள் – ஒன்றரை ஸ்பூன், தனி மிளகாய் தூள் – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் கத்தரிக்காயின் காம்பை வெட்டி எடுத்து, அதனை நான்காக கீறி, தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் அரை மூடி தேங்காயைத் துருவி வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் சூடு ஏறியதும் அதில் ஒரு ஸ்பூன் கசகசா, 2 ஸ்பூன் பொட்டுக்கடலை, ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் 10 முந்திரிப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவை அனைத்தும் நன்றாக வறுபட்டதும் இதனுடன் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து லேசாக வறுத்து விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து வைக்கவேண்டும். பின்னர் மறுபடியும் அடுப்பின் மீது கடாயை வைத்து 100 கிராம் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கத்திரிக்காயை சேர்த்து பொரித்தெடுத்து, அவற்றைத் தனியாக வைக்க வேண்டும். பின்னர் அதே கடாயில் ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து, அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, தனியாத்தூள் மிளகாய்த்தூள், சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு எலுமிச்சை அளவு புளியை தண்ணீர் சேர்த்து கரைத்து, புளித் தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். இவற்றுடன் பொரித்து வைத்துள்ள கத்தரிக்காய் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்து விட்டால், சுவையான செட்டிநாடு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயாராகிவிடும்.

- Advertisement -