- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்செட்டிநாட்டு சுவையில் இப்படி காரமான சிக்கன் கிரேவி செய்து இறக்கி வைத்த உடனே, சாப்பிட அனைவரும்...

செட்டிநாட்டு சுவையில் இப்படி காரமான சிக்கன் கிரேவி செய்து இறக்கி வைத்த உடனே, சாப்பிட அனைவரும் வந்து விடுவார்கள். அந்த அளவிற்கு இதன் வாசனையும், சுவையும் அசத்தலாக இருக்கும்

- Advertisement -

என்னதான் பலவிதமான காய்கறிகளை சமைத்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக கொடுத்தாலும், அவர்கள் விரும்பி சாப்பிடுவது என்னமோ இந்த சிக்கனை தான். இப்படி கோழிக்கறியில் விதவிதமான உணவுகளை செய்து கொடுத்தால் தட்டாமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிக்கன் உணவுகள் பிடித்துள்ளன. ஆனால் செட்டிநாட்டில் செய்யும் உணவுகளில் எப்பொழுதும் உப்பும், உறைப்பும் சற்று அதிகமாகவே இருக்கும். அப்படி இந்த சிக்கன் குழம்பை காரசாரமாக ஒரு முறை செய்து வைத்து பாருங்கள். சட்டி நிறைய சாதம் செய்தாலும் சட்டென தீர்ந்துவிடும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சிக்கன் – அரை கிலோ, வெங்காயம் – 2, தக்காளி – 1, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒன்றரை ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், சோம்பு – ஒரு ஸ்பூன், கசகசா – ஒரு ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – ஒன்று, ஏலக்காய் – 2, துருவிய தேங்காய் – 5 ஸ்பூன், பருப்பு – 8 ,புதினா தழை – 2 கொத்து, கொத்தமல்லி தழை – 4 கொத்து, எண்ணெய் – 4 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். பிறகு அதில் சோம்பு, சீரகம், கசகசா, பட்டை, ஏலக்காய் இவை அனைத்தையும் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை நன்றாக ஆற வைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.

பிறகு இவற்றுடன் துருவிய தேங்காய், முந்திரி பருப்பு, கொத்தமல்லி தழை, புதினா தழை, பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்

- Advertisement -

பிறகு அடுப்பின் மீது கடாயை வைத்து, எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தக்காளியையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் இவற்றுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி விட்டு, அரைத்து வைத்துள்ள மசாலா விழுதையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, இவற்றுடன் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து கலந்துவிட்டு, 20 முதல் 30 நிமிடம் வரை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாட்டு கோழிக்கறி குருமா தயாராகிவிடும்.

சற்று முன்