ஓவன் இல்லாமல் முட்டை சேர்க்காமல் ஒரு கேக்

rava cake
- Advertisement -

புதிதாக சமைக்க ஆரம்பிப்பவர்கள் தாங்கள் சமைக்கும் பொருள் சுவையாக இருக்க வேண்டும். அதே சமயம் எளிமையாக இருக்க வேண்டும். அனைவரும் பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கான ஒரு அருமையான சுவையான ரவை கேக் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக ஓவன் இல்லாமல் கேக் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் அது மிருதுவாக இருக்காது என்று கூறுவார்கள். அதே போல் தான் முட்டை சேர்க்காமல் கேக் செய்வதும். ஆனால் நாம் இப்பொழுது செய்யும் இந்த ரவா கேக்கில் முட்டையும் கிடையாது. அதை செய்வதற்கு ஓவனும் தேவையில்லை.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • ரவை – 1 கப்
  • சர்க்கரை – 1/2 கப்
  • பால் – 1/2 கப்
  • தயிர் – 1/4 கப்
  • ரீபைண்ட் ஆயில் – 1/4 கப்
  • ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்
  • பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன்
  • பேக்கிங் சோடா – 1/2 ஸ்பூன்

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ரவை, சர்க்கரை, பால், தயிர், ரீபைண்ட் ஆயில், ஏலக்காய் தூள் இவை அனைத்தையும் சேர்த்து 30 நொடிகள் அரைக்க வேண்டும். தயிர் சேர்க்க விருப்பமில்லாதவர்கள் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு பால் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம். பால் காய்ச்சி ஆர வைத்த பாலாக இருக்க வேண்டும்.

அரைத்த இந்த விழுதை ஒரு பவுலில் மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா இவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பேக்கிங் பவுடர் இல்லாதவர்கள் பேக்கிங் சோடாவை 1/2 ஸ்பூன் சேர்த்துக் கொண்டால் போதும். பிறகு இதை ஒரு தட்டு போட்டு பத்து நிமிடத்திற்கு ஊற விட வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு அடிகனமான கடாயை வைக்க வேண்டும். கனமான கடாய் இல்லாதவர்கள் குக்கரை கூட பயன்படுத்தலாம். அதனுள் ஒரு ஸ்டாண்டை வைத்து தட்டு போட்டு 5 நிமிடத்திற்கு குறைந்த தீயில் வைத்து மூடி விட வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது கேக் தயார் செய்யும் கேக் ப்பேன் எடுத்துக் கொள்ளலாம். அந்த கேக் பாத்திரம் இல்லாதவர்கள் வீட்டில் இருக்கும் டிபன் பாக்ஸ் போன்ற அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளலாம். அதன் உள் எண்ணையை நன்றாக தடவ வேண்டும். பிறகு அதன் மேல் மைதா மாவை தூவ வேண்டும். அப்பொழுதுதான் கேக் எடுக்கும் பொழுது சுலபமாக வரும்.

இந்த பாத்திரத்தில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் ரவை மாவை ஊற்றி நன்றாக லெவல் செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் அடுப்பில் வைத்திருக்கும் கடாயில் இந்த பாத்திரத்தை வைத்து மூடி வைத்து விட வேண்டும். பத்து நிமிடம் அப்படியே குறைந்த தீயில் இருக்கட்டும். 10 நிமிடம் கழித்து மூடியை திறந்து ரவை மாவின் மேல் நம் வீட்டில் இருக்கக்கூடிய நமக்கு விருப்பப்பட்ட ஏதாவது பருப்புகளை நிலவாக்கில் நறுக்கி மேலே அலங்காரத்திற்காக தூவி விடலாம். பிறகு மறுபடியும் மூடிவிட வேண்டும்.

- Advertisement -

25 நிமிடம் அடுப்பிலேயே குறைந்த தீயில் இருக்க வேண்டும். 25 நிமிடம் கழித்து ஒரு பல் குத்தும் குச்சியை பயன்படுத்தி அந்த கேக்கை குத்தி பார்க்க வேண்டும். குச்சியில் மாவு ஒட்டாமல் வந்துவிட்டால் கேக் வெந்து விட்டது என்று அர்த்தம். இப்பொழுது பாத்திரத்தை வெளியே எடுத்து ஆர வைக்க வேண்டும். நன்றாக ஆரிய பிறகு கத்தியை பயன்படுத்தி அதன் ஓரங்களை நன்றாக விலகி விட வேண்டும். பிறகு ஒரு தட்டில் அதை கவிழ்த்தி திருப்பி போட்டால் சுவையான அருமையான ரவா கேக் தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: கம்புல இப்படி அடை சுட்டு கொடுத்தா குட்டிஸ் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

இப்படி தயார் செய்த இந்த ரவா கேக்கை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கொடுக்கும் பொழுது அவர்கள் ஆகா ஓகோ என்று புகழ்ந்து சாப்பிடுவார்கள். மிருதுவாகவும், சுவையாகவும் திகழக்கூடிய இந்த ரவா கேக்கை நீங்களும் ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

- Advertisement -