- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகொஞ்சம் வித்தியாசமான முறையில் வெங்காயம் சேர்க்காமல் தயிர் சிக்கன் கிரேவி எப்படி செய்யவது?

கொஞ்சம் வித்தியாசமான முறையில் வெங்காயம் சேர்க்காமல் தயிர் சிக்கன் கிரேவி எப்படி செய்யவது?

- Advertisement -

எப்போதும் ஒரே மாதிரியாக சமைக்காமல் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி, அதே நேரத்தில் உடலுக்கு கேடு இல்லாமல் அப்படியே நமக்கும் கொஞ்சம் ஈஸியாகவும் ஏதாவது சமைத்தால் நன்றாக தானே இருக்கும். அப்படி ஒரு ஈஸியான ரெசபி தான் இந்த தயிர் சிக்கன் கிரேவி. அதிலும் வெங்காயம் சேர்க்காமல் கிரேவி எப்படி? யோசிக்கிறீங்களா வாங்க எப்படின்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: சிக்கன் – 1/2 கிலோ, மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், தனி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், பிரியாணி மசாலா – 1/2 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் தயிர் – 150 கிராம், தக்காளி – 1, உப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன். கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு.

- Advertisement -

முதலில் அரை கிலோ சிக்கன் நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள் . அதில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் தனியாத்தூள், 2 டீஸ்பூன் தனியாத்தூள், 1/4 டீஸ்பூன் பிரியாணி மசாலா, பிறகு இத்துடன் 100 அல்லது 150 கிராம் அளவிற்கு தயிர் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு பத்து நிமிடம் ஊற வைத்து விடுங்கள்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் கடாய் வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிய பிறகு கறிவேப்பிலை போட்டு விடுங்கள். அதன் பிறகு ஊற வைத்திருக்கும் இந்த சிக்கன் தயிர் மசாலாவை அதில் சேர்த்து, இதில் 1/4 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதன் மேல் ஒரு மூடி போட்டு, 7 நிமிடம் வேக வைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு பொடியாக நறுக்கிய தக்காளியை இந்த கிரேவி மீது போட்டு மேலும் ஒரு ஐந்து நிமிடம் வேக விடுங்கள்.

- Advertisement -

இதில் தயிர் சேர்த்து இருப்பதால் இதிலிருந்து கொஞ்சம் தண்ணீர் விட தொடங்கும். உங்களுக்கு இந்த கிரேவி திக்காக வேண்டுமென்றால் தண்ணீர் சுண்ட சுண்ட இதை செமி கிரவியாக செய்து கொள்ளலாம். கொஞ்சம் குழம்பு தேவை எனும் பட்சத்தில் ஓரளவுக்கு திக்காவதற்கு முன்பே அடுப்பை அணைத்து விடலாம். சுவையான தயிர் சிக்கன் கிரேவி தயார் இதன் மேல் மல்லித்தழைகளை தூவி பரிமாறலாம்.

பொதுவாகவே சிக்கனை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள், அதிலும் இப்படி வித்தியாமான முறையில் செய்து கொடுங்கள் திரும்ப திரும்ப இதையே கேட்பார்கள். இதில் எண்ணெய் அதிகம் சேர்க்க போவது இல்லை எனவே உடம்பிற்கு அவ்வளவாக கெடுதாலும் இல்லை.

இந்த தயிர் சிக்கன் கிரேவி இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, பரோட்டா என எது கூட வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம் சாத்துக்கும், அருமையாக இருக்கும். இதில் சாதத்துக்கு செய்யும் போது மட்டும் தண்ணீர் அளவை கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு கிரேவி இன்னும் சற்று திக்காக தேவைப்பட்டால் ஒரு தக்காளி வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம், வெங்காயம் சேர்க்கக்கூடாது.

சற்று முன்