உங்க வீட்ல பொட்டுக்கடலை இருக்கா? அது போதுமே! 2 நிமிஷத்துல, 2 ஸ்னாக்ஸ் ரெடி! குழந்தைங்க விரும்பி சாப்பிடற கிரிஸ்பி வடை, கிரிஸ்பி கட்லட்!

vadai-cutlet

இப்போ குழந்தைங்க வீட்டிலேயே இருக்கிறாங்க. விதவிதமாக ஸ்நாக்ஸ் செய்து தர வேண்டியது அம்மாவோட கடமையா இருக்கு. உங்க வீட்ல இருக்க பொருட்களை வைத்தே சுலபமான முறையில் ஸ்னாக்ஸ் ரெடி பண்ணிடலாம். அதுவும் உங்க குழந்தைக்கு பிடித்த மாதிரி! ஈஸியான அந்த இரண்டு ஸ்நாக்ஸ் எப்படி செய்யறதுன்னு இப்ப பாத்துரலாம்!

children-snacks

சாதத்தையும், பொட்டுக்கடலை மாவையும் சேர்த்து செய்யக்கூடிய வடைக்கு தேவையான பொருட்கள்:
வடித்த சாதம்-1 கப், பொட்டுக்கடலை-1/2 கப், பச்சை மிளகாய்-1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும், கருவேப்பிலை, மல்லித்தழை-பொடியாக நறுக்கிக் கொள்ளவும், மிளகாய்த் தூள்-1/4 ஸ்பூன், மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன், சோம்பு-1/4 ஸ்பூன், பூண்டு-1 திரி பொடியாக வெட்டி கொள்ளவும், இஞ்சி-சிறிய துண்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும், உப்பு-தேவையான அளவு.

vadai

தண்ணீர் ஊற்றிய சாதத்தை பயன்படுத்தக்கூடாது. மீதமான தண்ணீர் ஊற்றாத சாதத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். சாதத்தை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவேண்டும். அடுத்ததாக 1/2 கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த சாதத்தோடு, பொட்டுக்கடலை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, மிளகாய் தூள், சோம்பு, பூண்டு, உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

கையில் சிறிதளவு எண்ணெய்த் தொட்டு, இந்த கலவையை சிறிய உருண்டைகளாக பிடித்து, பருப்பு வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொறு மொறு வடை தயார்! தீயை மிதமாக வைத்து வடையை சுட்டு எடுக்க வேண்டும்.

- Advertisement -

cutlet

இரண்டாவது ஸ்னாக்ஸ் உருளைக்கிழங்கு பொட்டுக்கடலை கட்லட்:

உருளைக்கிழங்கு-3
பொட்டுக்கடலை-1 கப்
பச்சை மிளகாய்-1 பொடியாக வெட்டி கொள்ளவும்.
வெங்காயம்-1 பொடியாக வெட்டிக் கொள்ளவும்
கரம் மசாலா-1/4 ஸ்பூன்
மிளகாய் தூள்-1/4கால் ஸ்பூன்

potato-urulai

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அரைத்த பொட்டுக்கடலை மாவை சேர்த்துக்கொண்டு, அதன் பின்பாக பொடியாக வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லித் தழை, கரம் மசாலா, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு போட்டு, பிசைந்து கொள்ளவும்.

cutlet1

இந்த கலவையானது கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும். கட்லட் செய்யும் பதத்திற்கு. கொஞ்சம் பிசுபிசுப்பாக இருக்கும் பட்சத்தில், கொஞ்சமாக அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம். தயார் செய்த இந்த கலவையை, கையில் கொஞ்சம் எண்ணெய் தேய்த்துக் கொண்டு,  கட்லெட் போல் தட்டிக்கொண்டு, தோசைக்கல்லில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி, இரண்டு பக்கமும் பொன்னிறம் வருவது போல், ஷேடோ ஃபிரை செய்தால் மட்டுமே போதும். கிரிஸ்பியான ஸ்னாக்ஸ் தயார்.

இதையும் படிக்கலாமே
இன்றைக்கு மதியம், உங்கள் வீட்டில் சாதம் மிச்சம் ஆகிவிட்டதா? டக்குனு, இன்னைக்கு நைட்டே இந்த தோசையை சுட்டு பாருங்க! சூப்பரா, சுவையா இருக்கும்.

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Children’s healthy snacks in Tamil. Kid snack recipes. Easy snack recipes. Vegetarian snack recipes. Children’s recipes healthy.