உங்களது குழந்தைகள் எந்த கிழமையில் பிறந்தார்கள்? அவர்களின் வருங்காலத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?

birth-day-rasi-palan

நம் குழந்தைகள் எந்த கிழமைகளில் பிறந்திருந்தாலும் அவர்களது வருங்காலமானது சிறப்பாக இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் நினைப்போம். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவரவர் பிறந்த கிழமையை வைத்து, அவர்களுக்கென்று தனித்தனி கிரகங்கள் உள்ளன. அதை பொருத்துதான் அவர்கள் வருங்காலத்தில் எப்படிப்பட்ட குணத்தினை பெறப் போகிறார்கள் என்பதை நிர்ணயிக்க முடியும். அப்படி உங்கள் குழந்தைகள் பிறந்த கிழமையை வைத்து அவர்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்களை பெறப்போகிறார்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

ஞாயிற்றுக்கிழமை:
sunday
ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் வெற்றியை நோக்கி நடைபோடுபவர்களாக இருப்பார்கள். தான் எடுக்கும் முயற்சியில் எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் வெற்றி அடையும் வரை போராடும் குணம் கொண்டவர்கள். வெற்றிவாகை சூடாமல் விடமாட்டார்கள். போராட்டத்தின் மூலம் வெற்றி காண வேண்டும் என்று நினைப்பார்களே தவிர, குறுக்கு வழியில் சென்று வெற்றி அடைய வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். இவர்கள் அனாவசியமாக யாருக்கும் வாக்கு கொடுக்க மாட்டார்கள். அப்படி வாக்கை கொடுத்து விட்டால் அதை காப்பாற்றாமல் விட மாட்டார்கள். அடுத்தவர்களை அடக்கி ஆளும் திறமை உடையவர்கள். ஞாயிற்றுக் கிழமையில் பிறந்த பெண் குழந்தையாக இருந்தால் அறிவாற்றலும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களது கிரகம் சூரியன்.

திங்கள் கிழமை:
monday
திங்கள் கிழமைகளில் பிறந்தவர்கள் எப்பொழுதும் அடுத்தவர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் உடன் இருப்பவர்களுக்கு பொழுது போவதே தெரியாது. அழகான தோற்றத்தையும், பழகுவதற்கு எளிமையான பேச்சையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்களுக்கு நட்பு வட்டாரம் மிகவும் பெரியதாக இருக்கும். எந்த நேரமும் தன் நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு கொண்டிருப்பார்கள். இளகிய மனம் கொண்ட இவர்களிடம் உதவி என்று யார் வந்தாலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்கள். இவர்கள் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி கண்டு மற்றவர்களிடமிருந்து நல்ல பெயரையும், புகழையும் தட்டிச் சென்றுவிடுவார்கள். திங்கட்கிழமையில் பிறந்த பெண் குழந்தைகளாக இருந்தால் அழகான தோற்றமும், அழகான பேச்சும் உடையவர்களாக இருப்பார்கள். உங்களது கிரகம் சந்திரன்.

செவ்வாய்க்கிழமை:
tuesday
செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர்கள் அவர்களது கடுமையான உழைப்பால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள். பூர்வீக சொத்து இல்லை என்றாலும் தானாகவே உழைத்து முன்வந்து தனக்கான சொத்துக்களை சேர்த்துக் கொள்வார்கள். இவர்களை யாராலும் பேசி ஜெயிக்க முடியாது. இவர்களிடம் சண்டை போட்டு வெல்ல முடியும் என்பது கஷ்டம்தான். தவறு செய்து இவரிடம் மாட்டிக் கொண்டால், செய்த தவறை சுட்டிக்காட்டியை, தவறு செய்தவரை தண்டித்து விடுவார். அந்தஸ்து இவரது முயற்சியால் உயர்ந்துகொண்டே போகும். செவ்வாய் கிழமையில் பிறந்த பெண் குழந்தையாக இருந்தால் அந்த மகாலட்சுமியை போன்ற தோற்றத்தோடு அனைவரையும் கவரும் வசீகரம் இருக்கும். உங்களுக்கான கிரகம் செவ்வாய்.

புதன் கிழமை:
wednesday
இவர்கள் பெரும்பாலும் உயர்ந்த பதவியில் இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எழுத்தாளராகவோ, கல்வி துறையிலோ அல்லது கலைத்துறையிலோ ஒரு நல்ல பதவியில் இருப்பார்கள். இவர்களுக்கு படிப்பதிலும் எழுதுவதிலும் அதிக ஆர்வம் இருக்கும். அனைவரிடமும் சுலபமாக பழக மாட்டார்கள். இவர்களுக்கென்று குறிப்பிட்ட சில நண்பர்கள் மட்டும் தான் இருப்பார்கள். நீங்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் அந்த இடத்தில் உங்களது பெருமையை நிலைநாட்டி விடுவீர்கள். அந்த அளவிற்கு அடுத்தவர்களை கவரும் தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். புதன் கிழமையில் பிறந்த பெண் குழந்தைகளாக இருந்தால் அறிவாற்றலும் புகழ்ச்சியும் பெற்றிருப்பார்கள். உங்களுக்கான கிரகனம் புதன்.

வியாழக்கிழமை:
thursday
வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு புத்திசாலித்தனம் உடையவர்களாக இருப்பார்கள். அனாவசியமாக எந்த பிரச்சினையிலும் போய் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அடுத்தவர்களின் பிரச்சனை என்ன என்பதை உஷாராக தெரிந்து வைத்துக் கொள்வார்கள். தன்னுடைய வாழ்க்கையில் என்ன முயற்சி செய்தால், எப்படி முன்னேற்றம் அடையலாம் என்பதை தெளிவாக கணக்கு போட்டு வைத்திருப்பார்கள். அவ்வளவு சுலபமாக ஏமாந்துவிட மாட்டார்கள். வியாழக்கிழமையில் பிறந்த பெண் குழந்தைகள் பிரயாணம் செய்துகொண்டே இருப்பார்கள். உங்களுக்கான கிரகணம் குரு பகவான்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை:
friday
வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் கொஞ்சம் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதாவது தங்களுக்கு பிடித்ததை அடைய வேண்டுமென்ற குணம் இவர்களுக்கு இருக்கும். எந்த ஒரு பொருளையும் வாங்க வேண்டுமென்று நினைத்து விட்டால் அடம்பிடித்து வாங்கி விடுவார்கள். குறிப்பிட்ட ஊரை சுற்றி பார்க்க வேண்டும் என்று நினைத்தால் அந்த ஊருக்குச்  சுற்றுலா சென்று விடுவார்கள். இவர்களை சுலபமாக ஏமாற்றி விடலாம். மற்றவர்கள் கூறுவதை அப்படியே நம்பிவிடுவார்கள். வெள்ளிக் கிழமையில் பிறந்த  பெண் குழந்தைகளாக இருந்தால் அதிக கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கிரகம் சுக்கிரன்.

சனிக்கிழமை:
saturday
சனிக் கிழமையில் பிறந்தவர்கள் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். தங்களுக்கு தேவை என்று நினைக்கும் போது கடுமையாக உழைத்துக் கொள்வார்கள். தேவையில்லை என்று நினைக்கும் போது வேலை செய்யாமல் அமைதியாகவே இருப்பார்கள். எந்த சமயத்தில் எது தேவை என்று யோசிக்கும் திறமை இவர்களிடம் உண்டு. அனைவரிடமும் நெருங்கியும் பழக மாட்டார்கள், விலகியும் இருக்க மாட்டார்கள். அளவோடு பேசுவார்கள். சனிக்கிழமைகளில் பிறந்த பெண் குழந்தையாக இருந்தால் எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் முழு உழைப்பையும் செலுத்துவார்கள். இவர்களது கிரகம் சனி பகவான்.

இதையும் படிக்கலாமே
சனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள காகத்திற்கு இப்படி சாதம் வையுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pirantha kizhamai jothidam in Tamil. Pirantha kizhamai jathagam. Pirantha naal gunathisayam. Birth date characterize Tamil.