உங்கள் குழந்தைகள் சாப்பிட அடம் பிடித்தால் இனிமேல் கவலை வேண்டாம். இந்த சுவையான ஃபைவ் மினிட்ஸ் ஃப்ரைட் ரைஸை செய்து கொடுங்கள். அடம் பிடிக்கும் குழந்தையும் அழகாக சாப்பிடும்

egg
- Advertisement -

குழந்தைகள் என்றாலே அழகுதான். அவர்கள் செய்யும் குறும்பும் அழகு தான், அவர்கள் செய்யும் சேட்டையும் அழகு தான். இப்படி நாம் ரசிக்கின்ற குழந்தைகள் நமக்கு தொல்லை கொடுக்கும் நேரமும் இருக்கிறது. அதுதான் அவர்களுக்கு சாப்பாடு கொடுக்கும் நேரம். சாப்பாட்டு வேளை சிக்கல் தான். இவர்களை எப்படி சாப்பிட வைப்பது, இந்த உணவை குழந்தைகள் அடம் பிடிக்காமல் சாப்பிட வேண்டுமே என்று பல எண்ணங்கள் ஓட ஆரம்பிக்கும். அதையும் மீறி குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும் பொழுது அந்த சாப்பாட்டை அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் போதும். இறுதி வரை அந்த சாப்பாட்டை அவர்களுக்கு நம்மால் கொடுக்க முடியாது. இப்படி அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க உடனே இந்த ஃபிரைட் ரைஸ் செய்து கொடுங்கள். இதனை செய்வது மிகவும் ஈஸி தான். வீட்டில் இரண்டு முட்டை இருந்தால் போதும். உடனே இதனை செய்து விடலாம். வாருங்கள் இந்த ப்ரைட் ரைஸை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சாதம் – ஒரு கப், முட்டை – 2, எண்ணெய் – 3 ஸ்பூன் வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, மிளகு தூள் – அரை ஸ்பூன், பூண்டு – மூன்று பல், இஞ்சி சிறிய துண்டு – 1, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி, புதினா தழை – ஒரு கைப்பிடி, உப்பு – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு பச்சை மிளகாயையும் நறுக்கி வைக்க வேண்டும். அதன்பின் இஞ்சி மற்றும் பூண்டை பொடியாக நறுக்க வேண்டும். பின்னர் கொத்தமல்லி மற்றும் புதினா தழையையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாய் வைக்க வேண்டும். பிறகு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் கொத்தமல்லி மற்றும் புதினா தழையையும் சேர்த்து கிளற வேண்டும். பிறகு இதனுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பின்னர் இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் 2 முட்டையை உடைத்து ஊற்றி கிளற வேண்டும்.

பின்னர் முட்டை நன்றாக சுருண்டு வதங்கியதும், இவற்றுடன் அரை ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்துவிட வேண்டும். பிறகு இறுதியாக ஒரு கப் சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து விட்டால் போதும். சுவையான முட்டை ஃப்ரைட் ரைஸ் சாதம் தயாராகிவிடும். இவ்வாறு மிகவும் சிம்பிளான இந்த ஃப்ரைட் ரைஸை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்துப் பாருங்கள். தட்டில் ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது.

- Advertisement -