குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவில் ஆரோக்கியத்தையும் மறைத்துக் கொடுத்தால், கொடுப்பவரும் திருப்தி. சாப்பிடுபவர்க்கும் சந்தோஷம்.

vadai
- Advertisement -

குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் உணவு என்று வரும் பொழுது அனைவரும் ஒன்று போலத்தான் இருக்கிறார்கள். ஒரு சிலர் குழந்தைகளுக்கு அட்வைஸ் செய்துவிட்டு, தானும் அவ்வாறே நடந்து கொள்வார்கள். அதாவது விருப்பம் இல்லாத காய்கறி வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் குழந்தைகளுக்கு மட்டும் அறிவுரை கூறுவார்கள். இதனை சாப்பிடுவது உடம்பிற்கு நல்லது என்று சொல்வார்கள். ஆனால் ஒரு சிலர் ஒரு உணவினை பிடிக்காது என்று நினைத்து விட்டால் அதனை முயற்சி செய்து கூட பார்க்க மாட்டார்கள். அப்படி அனைவரும் சத்தான உணவுகளை தவிர்த்து விடுவது அவர்களின் உடல்நலத்திற்கு கேடாகும். இவ்வாறு உடம்பிற்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில உணவு வகைகளை அவர்களுக்கு பிடித்த உணவுகளுடன் சேர்த்து சமைத்துக் கொடுக்கும் பொழுது, அவர்கள் அறியாமலேயே அதனை விருப்பமாக சாப்பிடுவார்கள். அப்படி அனைவருக்கும் பிடித்த உளுந்து வடையில் கீரையையும் சேர்த்து எப்படி கீரை வடை செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு – ஒரு கப், பச்சை மிளகாய் – 3, இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, பெரிய வெங்காயம் – 2, அரைக்கீரை – அரை கட்டு, மிளகு – அரை ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கப் உளுத்தம் பருப்பை சுத்தமாக தண்ணீர் ஊற்றி 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் 3 பச்சை மிளகாய் மற்றும் சிறிய துண்டு இஞ்சியை சேர்த்துக் கொண்டு, அவற்றுடன் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.

பிறகு ஊறவைத்த உளுத்தம் பருப்பில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி, பருப்பினை மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். அதனுடன் உப்பு சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு அரைத்த உளுத்தம் மாவை ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு இரண்டு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதேபோல் அரைக்கீரையினை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு அதனை தண்ணீரில் நன்றாக அலசி, வடி கட்டி வைக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள கீரையையும், வெங்காயத்தையும் உளுத்தமாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அரை ஸ்பூன் சோம்பு சேர்க்க வேண்டும். அதன்பின் அரை ஸ்பூன் மிளகை லேசாக தட்டி சேர்க்க வேண்டும்.

இவை அனைத்தையும் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். அதன் பிறகு ஒரு பாலித்தீன் கவர் அல்லது வாழை இலையில் லேசாக எண்ணெய் தடவி கொள்ள வேண்டும். பிறகு எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சிறிதளவு உளுத்த மாவை எடுத்து எண்ணெய் தடவிய கவரில் வைத்து, வடை போன்று தட்டி, பிறகு எண்ணெயில் சேர்க்க வேண்டும். பின்னர் வடை நன்றாக சிவந்து பொரிந்ததும் வெளியே எடுக்க வேண்டும்.

- Advertisement -