காலையில் சுட்ட இட்லி காய்ந்து போய் விட்டதா? தூக்கிப் போடாமல் 5 நிமிஷத்துல இப்படி பண்ணி பாருங்க புதுவிதமான டிஷ் தயாராகிவிடும்!

chilli-idli2
- Advertisement -

பொதுவாக அடிக்கடி நாம் சாப்பிடும் உணவு வகைகளில் இட்லியும் தன் பங்கிற்கு ஒரு இடத்தை பிடித்திருக்கும். எல்லா இடங்களிலும், எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் சாப்பிடக்கூடிய இந்த இட்லி வகையை தமிழர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அடிக்கடி காலை உணவாக இடம்பெறும் இந்த இட்லி சில சமயங்களில் மீந்து போவதும் உண்டு. இப்படி காய்ந்து மீந்து போன இட்லியைப் தூக்கி எறியாமல் அதையும் கூட சூப்பரான நவீன டிஷ் ஆக மாற்றி காட்டலாம்! அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

Idli

‘சில்லி இட்லி’ செய்ய தேவையான பொருட்கள்:
மீந்து போன இட்லி – 4, சீரகம் – 1/4 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 2, பெரிய தக்காளி – 1, கறிவேப்பிலை – ஒரு கொத்து, பச்சை மிளகாய் – 2, மிளகாய் தூள் – 1 ஸ்பூன், டொமேட்டோ சாஸ் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

- Advertisement -

‘சில்லி இட்லி’ செய்முறை விளக்கம்:
முதலில் காய்ந்த இட்லிகளை கத்தி பயன்படுத்தி துண்டு துண்டாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் இட்லி துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். பின்னர் மற்றொரு வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி அதில் கால் டீஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள். பொடிப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் ஒரு இணுக்கு கறிவேப்பிலையை கழுவி சேர்த்துக் கொள்ளுங்கள்.

chilli-idli

பின்னர் நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி மற்றும் வெங்காயம் நன்கு வதங்கி சுருண்டு வரும் பொழுது தேவையான அளவிற்கு மிளகாய் தூள் மற்றும் சில்லி சாஸ் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மிளகாய் தூளின் பச்சை வாசம் போனதும் பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி கொண்டே இருக்க வேண்டும். 5 நிமிடத்திற்கு நன்கு கிண்டிய பின்பு அடுப்பை அணைத்து சுடச்சுட பரிமாற வேண்டியது தான்.

- Advertisement -

எப்பொழுதும் எந்த ஒரு பொருளையும் வீணாக்காமல் இருக்க வேண்டும். குறிப்பாக சாப்பிடும் உணவு வகைகளை கூடுமானவரை நன்றாக இருந்தால் அதனை வீணாக்காமல் இருப்பது கூட ஒரு வகையில் புண்ணியம் தான். அதுகூட இல்லாமல் எவ்வளவவோ நபர்கள் இவ்வுலகில் பசியால் வாடி கொண்டிருப்பார்கள். எனவே உணவை வீணாக்காமல் இது போல் பழைய உணவுகளை புது விதமான டிஷ் செய்து சாப்பிட்டு அசத்தி விடலாம்.

chilli-idli1

இனி காய்ந்து போன இட்லிகளை குப்பையில் எரியாமல் இது போல் சில்லி இட்லிகளாக புது விதமாக மாற்றி முயற்சி செய்து பார்க்கலாம். ரொம்ப ரொம்ப சுலபமாக ஐந்து நிமிடத்தில் இந்த சில்லி இட்லியை தயார் செய்து விட முடியும். எனவே நீங்களும் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இது போல் செய்து கொடுத்து அசத்தி விடுங்கள்.

- Advertisement -