இந்த சின்ன சின்ன ஐடியா எல்லாமே சூப்பரா இருக்கே! அப்படின்னு சொல்ற அளவுக்கு நச்சுனு 10 வீட்டு குறிப்புகள் உங்களுக்காக.

tips
- Advertisement -

எல்லாமே சின்ன சின்ன குறிப்பு தான். ஆனா தினம்தோறும் நம்முடைய வீட்டில் பயன்படும் அளவிற்கு பயனுள்ள குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த குறிப்புகளை எல்லாம் இல்லத்தரசிகள் தெரிந்து வைத்துக் கொண்டால் வேலை சுலபமாகிவிடும். நேரத்தை மிச்சம் பிடிக்கலாம். வீட்டில் இருப்பவர்களிடம் நல்ல பெயரும் வாங்கலாம். இல்லத்தரசிகளுக்கு கணவரிடம் பாராட்டை வாங்கும் போது ஒரு தனி சந்தோஷம் கிடைக்கும் அல்லவா. சரி வாங்க குறிப்பை பார்க்கலாம்.

குறிப்பு 1:
தெரியாமல் வெள்ளைத் துணியில் சாயம் ஒட்டி விட்டது, அல்லது மற்ற ஏதோ ஒரு கறை பட்டுவிட்டது. புதிய துணியாக உள்ளது. அந்த கறையை உடனடியாக நீக்க என்ன செய்வது. கொஞ்சமாக ஹேர்பிக்கை எடுத்து கறை பட்ட இடத்தில் நன்றாக தடவி விடுங்கள். இரண்டு நிமிடம் கழித்து பிரஷ் போட்டு தேய்த்தால் கறை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். கலர் துணிக்கு கூட இந்த குறிப்பை நீங்கள் பின்பற்றி பார்க்கலாம். கறை ரொம்பவும் காய்ந்து விட்டால் கறையை நீக்குவதில் சில சிரமங்கள் இருக்கும். மொத்தமாக ஐந்து நிமிடத்தில் ஹேர்பிக் உங்களுடைய துணியிலிருந்து நீங்கி இருக்க வேண்டும். அதற்குள் வேக வேகமாக வேலை செய்யுங்கள்.

- Advertisement -

குறிப்பு 2:
அடுப்பை பற்ற வைக்க பயன்படுத்தும் லைட்டர் சில சமயம் சரியாக எரியாது. வாங்கிய ஒரு சில மாதங்களிலேயே ரிப்பேர் ஆகிவிடும். இதற்கு காரணம் லைட்டரை பற்ற வைக்கக்கூடிய இடத்தில் இருக்கும் அழுக்கு. லைட்டரை பற்ற வைக்கும் போது நெருப்பு வரும் அல்லவா அந்த இடத்திற்கு உள்ளே காது குடையும் பட்ஸை வைத்து எண்ணெய் பிசுக்கை நீக்கி விட்டால், லைட்டர் சூப்பரா ஒர்க் ஆகும்.

குறிப்பு 3:
உங்க வீட்ல காப்பர் பாத்திரம் பயன்படுத்துவிங்களா. அதாவது செம்பு டம்ளர், செம்பு அண்டா, செம்பு ஜக், இவைகளை ஐந்தே நிமிடத்தில் பளபளப்பாக புதுசு போல மாற்ற ஒரு டிப்ஸ். லெமன் உப்பு மட்டும் இதற்கு போதும். பாதி லெமனை வெட்டி அதில் சால்ட் உப்பை தொட்டு காப்பர் பாத்திரத்தை தேய்த்தால் நிமிடத்தில் பளிச்சென மாறும்.

- Advertisement -

குறிப்பு 4:
மூக்கு கண்ணாடி, வீட்டில் குளியலறையில் இருக்கும் கண்ணாடி, டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி, என்று எல்லா கண்ணாடியையும் பளிச்சென்னை துடைப்பது சிரமம். கடையிலிருந்து லிக்விட் வாங்க வேண்டியதாக இருக்கும். உங்க வீட்ல சேனிடைசர் இருக்கா. அந்த சேனிடைசர் துணியில தொட்டு கண்ணாடியை துத்து பாருங்க. செலவே இல்லாமல் சூப்பர் கிளீன் கிடைக்கும்.

குறிப்பு 5:
மூக்கு கண்ணாடி பயன்படுத்துபவர்கள் தேவையில்லை எனும் போது கண்ணாடியை கழட்டி கண்ணாடி டப்பாவில் போட்டு வைப்பது என்பது சிரமம். வெளியிடங்களுக்கு எல்லாம் கண்ணாடி டப்பாவை தூக்கிச் செல்ல முடியாது. சிறியதாக இருக்கும் ஷாக்ஸ். குழந்தைகள் காலில் போடுவார்கள் அல்லவா காட்டன் சாக்ஸ், அதை கையில் வைத்துக் கொள்ளுங்கள். கண்ணாடியை கழட்டி அந்த சாக்ஸுக்கு உள்ளே வைத்து சின்ன பர்ஸ்ஸில் வைத்துக் கொண்டால் கூட கண்ணாடியில் கீறல் விழாமல் பாதுகாக்கலாம்.

- Advertisement -

குறிப்பு 6:
தோசைக்கல்லை அடுப்பின் மேலே வைத்து விட்டு மறந்து விடுவோம். தோசை கல் நன்றாக காய்ந்து விடும். உடனடியாக அதில் தோசை வராது. பிசுபிசுன்னு ஒட்டும் இந்த சமயத்தில் தோசைக்கல்லின் மேலே கொஞ்சமாக பல் தேய்க்கும் பேஸ்ட் போட்டு தடவி சுத்தம் செய்துவிட்டு, அந்த தோசை கல்லின் மேலே கொஞ்சம் எண்ணெய் விட்டு, புளி தேய்த்து மீண்டும் தோசை வார்த்தால் தோசை சூப்பராக வரும்.

குறிப்பு 7:
எண்ணெய் ஊற்றி ஸ்டோர் செய்யும் கண்ணாடி பாட்டிலுக்கு உள்ளே சுத்தம் செய்வது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. பாட்டிலுக்கு உள்ளே கையும் போகாது. அந்த பாட்டிலுக்கு உள்ளே கொஞ்சமாக பேஸ்ட்டை போட்டு வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி இரண்டு முறை குளிக்கி கீழே ஊற்றினால் பிசுபிசுப்பு நிறைந்த எண்ணெய் பாட்டில் ஒரு நொடி பொழுதில் சுத்தமாகிவிடும்.

குறிப்பு 8:
லெமனை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். அதில் ஒரு கிராம்பை சொருகி விடுங்கள். இதை ஒரு ஃபோர்க்கில் குத்தி நெருப்பில் 2 செகண்ட்ஸ் காண்பிக்க வேண்டும். அதாவது கிராம்பு நெருப்பில் பட்டு கருகி லேசாக வாடை வரும். கிராம்பு சேர்த்து எலுமிச்சம் பழத் துண்டுகளை அப்படியே கொசு வரும் இடத்தில் வைத்தால் இரண்டு நாட்களுக்கு அந்த இடத்தில் கொசு எட்டி பார்க்காது.

குறிப்பு 9:
மசாலா பொருட்கள் கொட்டி வைத்திருக்கும் டப்பாவில் ஈரப்பதம் நிறைந்து பூசனம் வருகிறதா. சின்ன சின்ன காய்ந்த தேங்காய் ஓடுகளை அதில் போட்டு வைத்தால் ஈரப் பசையில் பூசனம் பிடிக்காமல் இருக்கும்.

குறிப்பு 10:
ஃப்ரிட்ஜில் மசாலா பொருட்களை ஸ்டோர் செய்யும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா. ஸ்டோர் செய்துவிட்டு எந்த மசாலா எங்கே இருக்கிறது என்று அடிக்கடி தேடுவீங்களா. இதோ இனி இப்படி கிளிபில் மசாலா பொருட்களை ஸ்டோர் செய்யுங்கள். (மேலே இருக்கும் புகைப்படத்தை பாருங்கள்.) தேடாமல் அவசரத்திற்கு அப்படியே எடுக்கலாம்.

- Advertisement -