சின்ன வெங்காயம் சேர்த்து இப்படி ஒருமுறை புதினா சட்னி செஞ்சு பாருங்க வாழ்க்கையில் இந்த சட்னியின் ருசியை மறக்கவே மாட்டீங்க!

onion-mint-chutney_tamil
- Advertisement -

புதினா வெங்காயம் சட்னி | Mint onion chutney recipe in Tamil

பசியை தூண்டி வயிற்றை சுத்தம் செய்யக்கூடிய இந்த புதினா இலைகளை கொண்டு அடிக்கடி சட்னி செய்து சாப்பிட்டால் ஆரோக்கியம் வலுப்பெறும். அந்த வகையில் சின்ன வெங்காயம் சேர்த்து செய்யப்படும் இந்த சட்னி ஒரு முறை நீங்கள் இப்படி செய்து சாப்பிட்டால் வாழ்க்கையில் இதன் ருசியை மறக்கவே மாட்டீங்க! அவ்வளவு சுவையாக இருக்கக்கூடிய இந்த புதினா சட்னி ரெசிபி எப்படி சுலபமாக செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

புதினா – ஒரு கட்டு, உளுத்தம் பருப்பு – ரெண்டு டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – இரண்டு இன்ச், தேங்காய் துண்டுகள் – அரை கப், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், வர மிளகாய் – ஒன்று.

- Advertisement -

செய்முறை

புதினா சட்னி செய்வதற்கு முதலில் ஒரு கட்டு புதினாவை எடுத்து நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். புதினாவை ஆயும் பொழுது ஒவ்வொரு குச்சியாக எடுத்து ஒரு முறை கையால் லேசாக தட்டி விடுங்கள். அப்பொழுது தான் அதில் இருக்கும் பூச்சி, புழுக்கள் கீழே விழும். சுத்தம் செய்த புதினாவை தண்ணீர் இல்லாமல் உலர வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சியை சுத்தம் செய்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மற்ற தேவையான பொருட்களை தயாராக வைத்து அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாணலியை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். இந்த அளவிற்கு உளுந்து சேர்க்கும் பொழுது தான் இந்த சட்னி ருசியாக இருக்கும்.

- Advertisement -

பொன்னிறமாக வறுபட்டதும் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் காரத்திற்கு ஏற்ப கூடுதலாகவும் சேர்க்கலாம். பின்னர் இஞ்சியை சேர்த்து ஒரு முறை லேசாக வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை அப்படியே முழுதாக சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கி வர வேண்டும். அதன் பிறகு புதினா இலைகளை சேர்த்து சுருள வதங்க விடுங்கள். புதினா இலைகள் சுருண்டு வதங்கி வரும் பொழுது புளி சிறு நெல்லிக்காய் அளவு சேர்த்து, தேங்காய் துருவல் அல்லது தேங்காய் துண்டுகளையும் போட்டு நன்கு வதக்குங்கள்.

இதையும் படிக்கலாமே:
இட்லி வேகும் நேரத்துக்குள்ள சூப்பரான ஒரு தக்காளி பாயா நிமிஷத்துல ரெடி பண்ணிடலாம். இது ஆட்டுக்கால் பாயா இல்லன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. டேஸ்ட் அப்படி இருக்கும்.

இரண்டு நிமிடம் நன்கு வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். நன்கு ஆறியதும் கெட்டியாக தண்ணீர் குறைவாக சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் தாளிக்க எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வர மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து தாளித்து கொட்டுங்கள். அவ்வளவுதாங்க ரொம்பவே ருசியாக இருக்கக்கூடிய இந்த புதினா சட்னி இதே மாதிரி நீங்களும் செஞ்சு பாருங்க பத்து இட்லி கூட அசராமல் சாப்பிடுவீங்க.

- Advertisement -