சித்திரை மாத ராசி பலன் – 12 ராசிக்கும் துல்லிய கணிப்பு

chithirai

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு சித்திரை மாதம் உயர்வை தரும் மாதமாக தான் பிறக்கப் போகின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுநாள் வரை இருந்த பிரச்சனைகள் இந்த மாதம் ஒரு நல்ல முடிவுக்கு வரும். வீட்டிலிருந்தே அலுவலகப் பணியை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்க கூட வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில் முன்னேற்றத்தை நோக்கி செல்லும். சொந்த தொழிலில் புதிய முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றால், மாதத் தொடக்கத்திலேயே அதற்கான அடிக்கல்லை நாட்டி விடுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியத்தில் மட்டும் மேஷ ராசிக்காரர்கள் சற்று அக்கறை காட்ட வேண்டும். பிரச்சனை என்று வரும் சூழ்நிலையில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். பொறுமை அவசியம் தேவை.

பரிகாரம்: தினமும் காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வது நல்ல பலனைத் தரும். வீட்டிலிருந்தே தினம்தோறும் அம்மனை நினைத்து மாலை வேளையில் தீபமேற்றுவது மன அமைதியை தேடி தரும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சி தரும் மாதமாக தான் பிறக்கப் போகின்றது. வீட்டில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானத்திற்கு எந்த ஒரு குறைபாடும் இருக்காது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமணம் போன்ற சுப பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம். இதுநாள் வரை உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் கூட, இனி உங்களின் நல்ல மனதை புரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது. உங்களது பொருட்களை மட்டும் சற்று கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். வியாபார முன்னேற்றத்தில் செல்லும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்கள், அவரவர் பணியை சற்று கவனமாக செய்ய வேண்டியது அவசியம். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது.

பரிகாரம்: தினம்தோறும் சிவபெருமானை நினைத்து 5 நிமிடம் கண்களை மூடி தியானம் செய்வது மன அமைதியைத் தரும். வீட்டிலிருந்தபடியே, செவ்வாய்க்கிழமை முருகனுக்கு நெய் தீபம் ஏற்றுவது நல்லது.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நன்மை தரக்கூடிய மாதமாக தான் பிறக்கப் போகின்றது. வருமானம் அதிகரிக்கும். உங்களை சுற்றி உள்ளவர்களிடத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். ஆனால் அந்த ஆதாரத்தோடு சேர்த்து, சில பிரச்சினைகளும் வர வாய்ப்பு உள்ளது. இரண்டையும் சேர்த்து தான் சமாளிக்க வேண்டியிருக்கும். உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டியது அவசியம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். லாபம் உயரும். வீட்டிலிருந்தே அலுவலகப் பணியை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் இருந்து நல்ல பெயர் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த சலுகைகளை உங்கள் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்களுக்கு நினைத்தபடி சீட்டு கிடைக்கும்.

பரிகாரம்: தினம்தோறும் வீட்டிலிருந்தே பெருமாளை நினைத்து வழிபடுவது நல்லது. திங்கட்கிழமைகளில் விநாயகரை நினைத்து வீட்டிலிருந்தே நல்லெண்ணை தீபம் ஏற்றுவது நல்ல பலனைத் தரும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தைத் தரக்கூடிய மாதமாக தான் இந்த மாதம் பிறக்கப் போகின்றது. புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் போய் முடியும். பொருளாதாரம் சீராக இருக்கும். சிக்கனமாக செலவு செய்வது நல்லது. சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்கள், சற்று கவனமாக உங்களுடைய பணிகளை தொடர வேண்டும். மேலதிகாரிகளிடம் பணிவாக பேசினால், வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்: வீட்டிலிருந்தே தினம் தோறும் முருகப் பெருமானை மனதார நினைத்து வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சியான மாதமாக தான் பிறக்கப் போகின்றது. வருமானம் சீராக இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை அடையும். உங்களது பிள்ளைகளின் செயல்பட்டால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சொந்த தொழிலில் அதிக ஈடுபாட்டுடன், செயல்படுவதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். அலுவலகப் பணியில், சற்று வேலை பளு அதிகரிக்கும். வீட்டிலிருந்தே பணியை செய்தாலும் இரவு பகல் பாராமல் உழைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். பணம் சம்பந்தப்பட்ட பரிமாற்றங்களில் கவனம் தேவை. யாரை நம்பியும், யாரும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் வீட்டிலிருந்தே அனுமனை நினைத்து தீபமேற்றி வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றத்தை தரக்கூடிய மாதமாக தான் அமையப்போகிறது. நீங்கள் எடுக்கின்ற முயற்சியில் தடைகள் ஏற்பட்டாலும், மன தைரியத்தோடு செயல்பட்டு வெற்றி அடைந்து விடுவீர்கள். பொருளாதாரத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. இதுநாள் வரை குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் ஒரு முடிவுக்கு வரும். உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கக்கூடிய நேரமிது. குழந்தை வரம் வேண்டி இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டிலிருந்து அலுவலகப் பணியை செய்பவர்கள் மிகவும் சிறப்பாக, அவரவர் பணியை செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் உடன் பணிபுரியும் நட்பு வட்டத்துடன் கவனத்தோடு இருப்பது நல்லது.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் அம்மனை நினைத்து வீட்டிலிருந்தே நெய் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளித் தர கூடிய மாதமாக தான் பிறக்கப் போகின்றது. வீடு, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் இருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல போனால் இந்த மாதம் சகல வசதியுடன் வாழக்கூடிய யோகம் உங்களுக்கு வரப்போகிறது. எதிர்பாராத வரவின் காரணமாக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இதுநாள் வரை இருந்த பிரச்சனைக்கு இந்த மாதம் நல்ல தீர்வு கிடைத்துவிடும். சொந்தத் தொழில் சம்பந்தமாக பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் வியாபாரிகளுக்கு அலைச்சல் உண்டாகும். அலுவலகப் பணியில் அதிக கவனம் எடுத்து வேலை செய்வது நல்லது. அலட்சியப்போக்கோடு எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

பரிகாரம்: தினம்தோறும் குலதெய்வத்தை நினைத்து வீட்டிலிருந்தே தீபமேற்றி வழிபடுவது நன்மை தரும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சந்தோஷமான மாதமாக தான் பிறக்கப் போகின்றது. எதிலும் துணிச்சலோடு செயல்படப் போகிறீர்கள். உங்களின் சமூக மதிப்பு அதிகரிக்கும். இதனால் வரை ஏளனமாகப் பேசியவர்களும், இனி உங்களைப் பார்த்து மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு உங்களின் செயல்பாடு மேலோங்கும். சொந்த தொழில் நல்ல லாபத்தை பெற்றுத் தரும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்கள், மேலதிகாரிகளிடம் நல்ல பாராட்டைப் பெறுவர். பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஊதிய உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் வீட்டிலிருந்தே அம்மனை நினைத்து நெய்தீபம் ஏற்றுவது நல்ல பலனைத் தரும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நன்மை தரக்கூடிய மாதமாக தான் பிறக்கப் போகின்றது. சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதாக இருந்தாலும், இந்த மாத இறுதிக்குள் அவை அனைத்தும் சரியாகிவிடும். பிரச்சினைகளை தைரியத்தோடு எதிர்கொள்ளக்கூடிய மனோசக்தி உங்களிடம் உள்ளது. முடிந்தவரை அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். அலுவலகப் பணியில் ஈடுபடுவோர் எவ்வளவுதான் உழைப்பை போட்டு வேலை செய்தாலும், நல்ல பேர் கிடைப்பது மட்டும் கஷ்டம்தான். சொந்தத் தொழில் எப்போதும் போல் செல்லும். புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்: தினந்தோறும் விநாயகரை மனதார நினைத்து வீட்டிலிருந்தே தீபமேற்றி வழிபடுங்கள் எல்லா பிரச்சினைகளும் தீர ஒரு வழி கிடைக்கும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றியைத் தரக்கூடிய மாதமாக தான் பிறக்கப் போகின்றது. உங்களின் செயல் திறன் அதிகரிக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி அடையாமல் உங்களது கால்களை பின் வாங்க மாட்டீர்கள். உங்களைப் பற்றிய புகழ் உங்களை சுற்றி உள்ளவர்கள் இடத்தில் மேலோங்க போகிறது என்றுதான் கூறவேண்டும். குடும்பத்தில் மட்டும் சின்ன சின்ன பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது. அனுசரித்துச் சென்றால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். உடல்நலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை உடனே மருத்துவரிடம் சென்று சரிசெய்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் அரசு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அவ்வப்போது வந்து போகும். அலுவலகப் பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்: தினம்தோறும் சிவபெருமானை நினைத்து வீட்டிலிருந்து ஐந்து நிமிடம் அமைதியாக தியானம் செய்வது நன்மை தரும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சந்தோஷமான மாதமாக தான் பிறக்கப் போகின்றது. எந்த இடத்திலும் உங்களது கை மேலோங்கி நிற்கும். உங்கள் கையில் கொடுக்கப்படும் பொறுப்புகளை சரியான முறையில் முடித்துவிட்டு நல்ல பெயரையும் வாங்கி செல்வீர்கள். வீட்டில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களது பணியை சிறப்பாக செய்து முடிப்பதால், நீங்கள் எதிர்பாராத பதவி உங்களுக்கு காத்திருக்கிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. மாணவர்கள் கல்வியில் மட்டும் கொஞ்சம் அக்கறை எடுத்து படித்தால் முன்னேற்றத்தை அடைந்து விடலாம்.

பரிகாரம்: தினம்தோறும் அம்மனை நினைத்து வீட்டிலிருந்தே தீபமேற்றி வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உயர்வைத் தரும் மாதமாக தான் பிறக்கப் போகின்றது. புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். சொந்த தொழில் முன்னேற்றத்தோடு செல்லும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுநாள்வரை கணவன்-மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனை, இனி சரியாகிவிடும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு சற்று வேலை பளு அதிகமாக இருந்தாலும் நல்ல பெயரை வாங்க நேரம் வந்துவிட்டது. சம்பள உயர்வு பதவி உயர்வு உங்களைத் தேடி வரும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரம்: தினம் தோறும் முருகப் பெருமானை நினைத்து வீட்டில் இருந்து நெய் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.