இன்று சித்திரை மாத வளர்பிறை பஞ்சமி திதி! இன்று மாலை மட்டும் பூஜை அறையில் வாராகி தாயை நினைத்து இந்த 1 விளக்கை ஏற்றினால், 5 தலைமுறைக்கு உங்கள் குடும்பத்திற்கு தீராத கஷ்டம் என்பதே வராது.

varahi
- Advertisement -

பஞ்சமி திதிக்கு நாயகியாக திகழ்பவள் வாராஹி அன்னை. இந்த உலகத்தையே பாதுகாத்து அரவணைத்து வைத்ததிருக்கும் பராசக்தி தேவி அவள். அந்த அம்பாளுக்கு உகந்த பஞ்சமி திதியானது இன்றைய தினம் திங்கட்கிழமை வந்திருக்கின்றது. அதிலும் சித்திரை மாதத்தில் வந்திருக்கக்கூடிய இந்த வளர்பிறை பஞ்சமி திதியை யாரும் தவற விடாதீர்கள். குடும்பத்தின் சுபிட்சத்திற்காக இன்று மாலை வாராஹித்தாயை நினைத்து உங்களுடைய வீட்டில் இந்த ஒரு விளக்கை ஏற்றி வைத்து வழிபாடு செய்தால் போதும். குடும்பம் தலைமுறை தலைமுறைக்கு சந்தோஷமாக வாழும். இது தவிர எதிரி தொல்லை விலக, கண்திருஷ்டியில் இருந்து விடுபட, தீராத கஷ்டங்கள் தீர, கடன் சுமை குறைய, தீராத நோய் தீர, ஏவல் பில்லி சூனியம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்முடைய குடும்பத்தை பாதுகாக்கவும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இன்று சித்திரை மாத வளர்பிறை பஞ்சமி திதி வாராகி வழிபாடு எப்படி செய்வது?
காலையில் நீங்கள் சுத்தபத்தமாக குளித்து இருந்தாலும் பூஜை செய்வதற்கு முன்பு மாலை ஒரு முறை குளித்து விடுங்கள். அதன் பின்பு பூஜை அறையில் வாராகியின் திருவுருவப்படம் இருந்தால் அந்த படத்தை துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, வாசனை நிறைந்த பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். நீல நிற பூ, சிவப்பு நிற பூ, கிடைத்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு. இல்லையென்றால் வாசனை நிறைந்த பூக்களை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். சிவப்பு நிற செம்பருத்தி பூ கிடைத்தாலும் அது வாராஹிக்கு விசேஷம் தான்.

- Advertisement -

வாராஹித் தாயின் முன்பு நீங்கள் கட்டாயம் ஏற்ற வேண்டிய ஒரு விளக்கு ஐந்து முக விளக்கு. 5 மண் அகல்விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்தாலும் சரிதான். ஒரு குத்து விளக்கில் ஐந்து திரி போட்டு, ஐந்துமுக விளக்குகளை ஏற்றி வைத்தாலும் சரிதான். பஞ்சமுக தேவி இந்த ஐந்து முக விளக்கில் வந்து அமர்ந்து கொள்வாள்.

வாராகி தேவிக்கு கிழங்கு வகைகள் என்றால் ரொம்பவும் பிடிக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு எது கிடைத்தாலும் அதை அவித்து நிவேதமாக வையுங்கள். எதுவுமே கிடைக்கவில்லை என்றால் ஒரு டம்ளர் பானகம் நெய்வேதியமாக வைக்கலாம். வாராகி தாயின் முன்பு அமர்ந்து ஏற்றி வைத்திருக்கும் ஐந்து முக விளக்கை பாருங்கள். வாராஹி தாயை மனதில் நினைத்துக் கொண்டு பார்த்தால் அந்த தீபச்சுடரில் வாராகித் தாய் உங்களுக்கு நிச்சயமாக காட்சி கொடுப்பாள். குடும்பத்தில் இருக்கும் தீராத கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனம் உருகி ஐந்து நிமிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

வராகி தேவிக்கு உங்களால் முடிந்தால் 108 முறை வாராகி மந்திரத்தை சொல்லி, குங்கும அர்ச்சனை செய்யலாம். (வாராகி மூல மந்திரம் சொல்லலாம். அப்படி இல்லை என்றால் ‘ஓம் வாராகி தேவியே போற்றி’ என்ற மந்திரத்தை கூட சொல்லலாம்).  உதிரி புஷ்பங்களால் அர்ச்சனை செய்து இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து இந்த பஞ்சமி திதி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

சித்திரை மாதத்தில் வந்திருக்கக் கூடிய வளர்பிறை பஞ்சமி திதியில் வாராகி தாயை மனதில் நினைத்து வீட்டில் பூஜை செய்தால் குடும்பம் சுபிட்சம் பெறும். தீராத கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவு காலம் பிறக்கும். உங்கள் குடும்பத்தை பாதுகாப்பதற்காக அந்த வாராகி தேவி மனம் மகிழ்ந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வந்து அமர்ந்து கொள்வாள்.

- Advertisement -

வாய்ப்பு இருந்தால் உங்கள் வீட்டின் அருகில் வாராகி தாயின் கோவில் இருந்தால் அந்த வாராகி தாய்க்கு உங்கள் கையால் விரலி மஞ்சள் மாலை கட்டி போடலாம். வீட்டில் சுப காரிய தடை இருந்தால் விலகும். விரலி மஞ்சள் 11, 21 என்ற கணக்கில் ஒற்றைப்படையில் வாங்கிக் கொள்ளுங்கள். அந்த விரலி மஞ்சளை, மஞ்சள் நூலால் உங்கள் கையாலேயே தொடுத்து வாராகி அம்மனுக்கு இன்றைய தினம் மாலையாக போடுவது ரொம்ப ரொம்ப நல்லது.

இதையும் படிக்கலாமே: இந்த சுவாமியை ஒரு முறை போய் கும்பிட்டு வாங்க போதும். உங்க ஜாதக கட்டத்தில் இருக்கும் அனைத்து குழப்பத்திற்கும் ஒரு தெளிவு பிறக்கும். சகல விதமான சந்தோஷமும் ஐஸ்வரியமும் உங்கள் வீடு தேடி வரும்.

எது எப்படியாக இருந்தாலும் சரி, மேல் சொன்ன வழிபாட்டை எல்லாம் உங்களால் செய்ய முடியாது என்றாலும் சரி, உங்கள் வீட்டில் வாராஹி அம்மனின் திருவுருவப்படமே இல்லை என்றாலும் சரி, இன்று மாலை அந்த தாயை மனதார நினைத்து வீட்டில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு உங்கள் கஷ்டங்களை எல்லாம் வாராகி தாயின் பாதங்களில் இறக்கி வைத்து விடுங்கள். பிறகு பல தலைமுறைக்கு உங்களுடைய குடும்ப சந்தோஷத்திற்கு குறை இல்லாமல் அந்த தாயே பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை ஆன்மீகம் நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -