இந்த சுவாமியை ஒரு முறை போய் கும்பிட்டு வாங்க போதும். உங்க ஜாதக கட்டத்தில் இருக்கும் அனைத்து குழப்பத்திற்கும் ஒரு தெளிவு பிறக்கும். சகல விதமான சந்தோஷமும் ஐஸ்வரியமும் உங்கள் வீடு தேடி வரும்.

veerabathran
- Advertisement -

நம்முடைய தலையெழுத்து எப்படி இருந்தாலும் சரி, நம்முடைய ஜாதக கட்டம் எப்படி இருந்தாலும் சரி, நாம் எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும். நம்முடைய தலையெழுத்தை ஆண்டவன் இப்படி எழுதி விட்டானே, நம்முடைய ஜாதகத்தில் இப்படிப்பட்ட தோஷம் இருக்கிறதே என்ன செய்யப் போகின்றோம் என்ற கோழைத்தனம் மட்டும் நம்முடைய மனதில் வந்து விடவே கூடாது. வீரமாக எல்லா பிரச்சினையையும் எதிர்த்து போராடினால் வெற்றி நிச்சயம் உண்டு. கோழைத்தனத்தை அடித்து விரட்டி வீரத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால் நாம் யாரை வழிபாடு செய்ய வேண்டும். வீரத்திற்கு பெயர் போன வீரபத்திர சாமி வழிபாட்டை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

ஜாதக கட்டத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களும் விலக, தீராத மனக் குழப்பத்தை தெளிவுபடுத்த, கோழையாக இருப்பவர்கள் தன்னம்பிக்கையோடு மாற, இவரை வழிபாடு செய்யலாம். எந்த ரூபத்தில் இருந்து எதிரிகளால் பிரச்சினை வருவது என்றே தெரியாமல் சில பேர் பயந்து கொண்டு இருப்பார்கள். அவர்களும் இவரை வழிபாடு செய்யலாம். சில பேருக்கு அடிக்கடி இரத்த காயம் ஏற்படும். நல்லாதான் நடந்து போவாங்க. விழுந்து கை கால் உடைந்து இரத்த காயத்தோடு சில நாள் படுத்தே கிடப்பார்கள். இப்படிப்பட்டவர்களும் வீரபத்திர சுவாமி வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

வீரபத்திர சுவாமி வழிபாடு:
இவ்வளவு பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு தரக்கூடிய இந்த வீர பத்திர சுவாமியை எப்படித் தான் வழிபாடு செய்வது. வீட்டின் அருகில் எந்த இடத்தில் வீர பத்ர சுவாமிக்கு கோவில் இருக்கிறது என்று பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. வீர பத்ர சுவாமிக்கு வெள்ளை நிறம் மிகவும் உகந்த நிறமாக சொல்லப்பட்டுள்ளது. கரையே இல்லாத வெள்ளை நிற வேட்டி, வெள்ளை நிற பூக்களை கொண்டு வீரபத்திரரை வழிபாடு செய்யலாம். எந்தக் கிழமையில் வேண்டுமென்றாலும் வீரபத்திரரை வழிபாடு செய்யலாம். வெள்ளை நிற பொருட்களை வாங்கி கொடுத்து வீரபத்திரரை வழிபாடு செய்தால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் சகலவிதமான பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வை கொடுக்கும்.

அடிக்கடி கைகால் உடைகிறது. அடிக்கடி ரத்தம் காயம் ஏற்படுகிறது என்றால் செவ்வாய்க்கிழமையில் வீரபத்திரருக்கு சிவப்பு நிற பூக்களை வாங்கிக் கொடுத்து விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம். எதிரி தொல்லையால் பிரச்சனை கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் போன்ற பிரச்சனைகள் நம்மை சூழ்ந்து இருக்கிறது என்றால் ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் வீரபத்ர சுவாமிக்கு சிவப்பு அல்லது வெள்ளை நிற பூக்களை வாங்கி கொடுத்து வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

ஜாதக கட்டத்தில் செவ்வாயால் உங்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்றால் செவ்வாய்க்கிழமை சிவப்பு நிற பூக்களை வீரபத்திர சுவாமிக்கு உங்கள் கையாலேயே கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். செவ்வையால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும்.

இது தவிர பௌர்ணமி அன்று வீரபத்திரரை வழிபாடு செய்தால் சகல ஐஸ்வர்யமும் நமக்கு கிடைக்கும். சகலதோஷங்களும் நம் ஜாதகத்தை விட்டு விலகும். கோழைத்தனம் நீங்கும் மன தைரியம் பிறக்கும். தீர்க்க முடியாத பலவிதமான பிரச்சனைகளுக்கு சுபம் போட்டு முடிக்க கூடிய வழிபாட்டை பௌர்ணமி தினத்தில் செய்யுங்கள். கிராமத்து காவல் தெய்வமாக சொல்லப்படும் இவர் நிறைய பேருக்கு குலசாமியாகவும் விளங்குகின்றார். நம்பி இந்த தெய்வத்தின் பாதங்களை சரணடைந்து வழிபாடு செய்தால், இந்த தெய்வம் நம் கூடவே நின்று நம் குடும்பத்தை காக்கும் என்ற நம்பிக்கையும் முன்னோர்களிடத்தில் இருந்தது.

இதையும் படிக்கலாமே: குடும்பத்தில் அடிக்கடி சண்டை வந்து எப்போதும் சண்டை சச்சரவாக இருந்தால் வெள்ளிகிழமையில் இதை மட்டும் மறக்காமல் செய்து விடுங்கள். நிம்மதியான குடும்ப வாழ்க்கை வாழ முன்னோர் சொன்ன எளிய பரிகாரம்.

உங்களால் வீரபத்திர சுவாமி இருக்கக்கூடிய கோவிலுக்கு செல்ல முடியவில்லையா. வீட்டிலிருந்தபடியே வீரபத்திர சுவாமி நினைத்து மனதார வழிபாடு செய்தாலும் உங்கள் குடும்பத்திற்கு அவரின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும். நம்பிக்கை இருந்தால் மேல் சொன்ன வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -