சித்ரா பௌர்ணமி தீப வழிபாடு

pournami deepam
- Advertisement -

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். அந்த முயற்சிகள் வெற்றியடைந்தால்தான் அவருடைய வாழ்க்கை நல்ல வாழ்க்கையாக மாறும். அப்படி முயற்சிகள் வெற்றி அடைவதற்காக ஒவ்வொரு முறையும் பல வழிப்பாட்டு முறைகளை நாம் மேற்கொள்வோம். ஆனால் நாளை வரக்கூடிய சித்ரா பௌர்ணமி அன்று ஒரு நாள் மட்டும் நாம் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் இந்த வருடம் முழுவதும் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்துமே வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திர நாளன்று வரக்கூடிய பௌர்ணமியை தான் சித்ரா பௌர்ணமி என்று கூறுகிறோம். இந்த சித்ரா பௌர்ணமி என்பது மிகவும் விசேஷகரமான பௌர்ணமியாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக சித்தர்களை வழிபடுவதற்கும், சித்திரகுப்தரை வழிபடுவதற்கும், சிவபெருமானை வழிபடுவதற்கும் உகந்த நாளாக திகழ்கிறது.

- Advertisement -

பொதுவாக பௌர்ணமி தினங்களில் அம்மன் வழிபாடு என்பதும் சிறப்புக்குரியது என்பதால் இவர்கள் அனைவரையும் சேர்த்து வழிபடுவதற்குரிய பலன் நமக்கு கிடைக்கும். அதோடு மட்டுமல்லாமல் நாளை செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப்பெருமானின் அருளையும் பெறுவதற்குரிய ஒரு சக்தி வாய்ந்த வழிபாடாக தான் சித்ரா பௌர்ணமி வழிபாடு திகழ்கிறது. சித்ரா பௌர்ணமி நாளன்று நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் அதன் பலன் நமக்கு மிகவும் அதிகமாக கிடைக்கும். அந்த வகையில் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறவும் காரிய சித்தி உண்டாகவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான தீப வழிபாட்டை பற்றி பார்ப்போம்.

இந்த தீபத்தை நாளை காலையில் அதாவது பிரம்ம முகூர்த்த வேளையில் அடுத்ததாக மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் மூன்றாவது முறையாக சந்திர பகவான் வந்த பிறகு என்று மூன்று வேளை இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை நம்முடைய வீட்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்து ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு தேங்காய் வேண்டும்.

- Advertisement -

முதலில் தேங்காயின் குடும்பி கிழக்கு பார்த்தமாறு வைக்க வேண்டும். தேங்காய் ஆடாமல் அசையாமல் இருப்பதற்கு ஏதாவது ஒரு பொருளை தேங்காயை சுற்றி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக தேங்காய்க்கு மேல் கெட்டியாக குலைத்த மஞ்சளை வைத்து அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் அகல் விளக்கு ஆடாமல் அசையாமல் கீழே விழுகாமல் தேங்காய் மீது அப்படியே இருக்கும்.

இப்பொழுது அந்த அகல் விளக்கில் நல்லெண்ணையை ஊற்றி பஞ்சு திரி போடவேண்டும். அடுத்ததாக இந்த அகல் விளக்கில் ஏழு மல்லிகை பூ அல்லது ஆவாரம் பூ போட வேண்டும். பிறகு தீபத்தை ஏற்றிவிட்டு அந்த தீபத்தை பார்த்து இந்த வருடம் முழுவதும் நமக்கு என்னென்ன நடக்க வேண்டும் நம்முடைய பிரச்சனைகள் என்னென்னவெல்லாம் தீர வேண்டும் என்று நினைக்கிறோமோ அது அனைத்தையும் மானசீகமாக அந்த தீபத்திடம் கூற வேண்டும்.

- Advertisement -

இப்படி மூன்று வேளையும் செய்ய வேண்டும். இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும். ஒரு மணி நேரம் எரிந்ததும் தீபத்தை குளிர விட்டு மறுபடியும் மதிய வேளையில் இதில் தேவையான அளவு எண்ணெயை மட்டும் ஊற்றி தீபத்தை ஏற்றலாம். இயன்றவர்கள் அதில் இருக்கக்கூடிய மல்லிகை பூவை எடுத்துவிட்டு புதிதாகவும் போடலாம். இப்படி மூன்று வேளையும் தீபம் ஏற்றி முடித்த பிறகு மறுநாள் காலையில் இந்த தேங்காயை அப்படியே எடுத்து பூஜையறையில் வைத்து விட வேண்டும்.

ஒரு வருட காலம் வரை இந்த தேங்காய் பூஜை அறையில் இருக்கட்டும். அடுத்த வருடம் சித்ரா பௌர்ணமி வரும் நாளில் இந்த தேங்காயை உடைத்து ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும். நடுவில் தேங்காய் விரிசல் அடைந்து விட்டாலோ அல்லது கெட்டுவிட்டாலோ அப்பொழுதே அதை எடுத்து ஓடுகின்ற நீரில் போட்டுவிட்டு அடுத்து வரக்கூடிய பௌர்ணமி தினத்தில் இதே போல் தேங்காயை வைத்து தீபம் ஏற்றி அந்த தேங்காய் எடுத்து பூஜை அறையில் வைத்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர சித்ரா பௌர்ணமி தின வழிபாடு

மிகவும் அற்புத சக்தி வாய்ந்த தேங்காயில் நாம் இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட காரிய சித்தி உண்டாகும். வளமான வாழ்க்கையை வாழ முடியும்.

- Advertisement -