சித்திரை பௌர்ணமி விரதம் இருப்பது எப்படி ? அதன் பலன்கள் என்ன ?

chitra pournami sivan

சித்ரா பௌர்ணமி நாளானது சித்ரகுப்தனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நன்னாளில் விரதம் இருப்பதன் மூலம் நாம் பல அறிய பலன்களை பெற இயலும். அந்த வகையில் சித்ரா பௌர்ணமி விரதம் இருப்பது எப்படி, சித்ரா பௌர்ணமி நாளில் என்னவெல்லாம் செய்யலாம். இப்படி பல தகவல்களை பார்ப்போம் வாருங்கள்.

chitra pournami

சித்ரா பௌர்ணமி விரதம் இருப்பது எப்படி ?
சித்ரா பௌர்ணமி நாளில் காலையிலே குளித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பொதுவாக சித்ரகுப்தன் படத்தினை வீட்டில் பலர் வைப்பது கிடையாது. ஆகையால் அரிசிமாவால் சித்ர குப்தனின் படத்தினை வரைய வேண்டும். அவரது கையில் எழுதுகோல் மற்றும் ஏடு இருக்கும்படி வரைவது அவசியம். பிறகு வீட்டில் தீபம் ஏற்றிவைக்கவும்.

மாலையில் தான் சித்ரா பௌர்ணமி பூஜை செய்வது வழக்கம். ஆகையால் மாலை வரை விரதம் இருப்பது நல்லது. விரதம் இருக்க இயலாதவர்கள் பால் பழம் உண்ணலாம். உணவு உன்ன நினைத்தால் உப்பில்லாத உணவை உண்ணலாம். நாள் முழுவதும் சித்ர குப்தனின் நாமத்தை ஜபிப்பது நல்லது.

மாலை நேரத்தில் சித்தகுப்தனுக்குரிய பூஜையினை துவங்கலாம். தலைவாழை இலையில் எருமை பாலால் செய்த பாயாசம், சக்கரை பொங்கல் போன்றவற்றை நைவேத்தியம் செய்து சித்ரகுப்தனை வழிபடவேண்டும். சித்ர குப்தனுக்கான படையலில் பலவிதமான காய் காரிகளால் செய்யப்பட்ட கூட்டினை நிவேதியம் செய்வது சிறப்பு. சுவாமிக்கு தீபாராதனை காட்டி பௌர்ணமி பூஜையை முடிக்கலாம். சித்ரா பௌர்ணமி விரதத்தினை முழுமையாக இருப்போர்கள் இரவு சித்திரை நிலவை பார்த்த பிறகு உணவு உண்ணலாம்.

பூஜையை நிறைவு செய்த பிறகு நம்மால் முடிந்தவரை ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது. குறிப்பாக நோட்டு புத்தகங்கள், பேணா போன்றவற்றை ஏழை குழந்தைகளுக்கு தானம் செய்வதன் மூலம் நமக்கான அறிவும் செல்வமும் கூடும்.

- Advertisement -

சித்ரா பௌர்ணமி விரத பலன்கள்:

சித்ரா பௌர்ணமி நாளில் விரதம் இருப்பதன் மூலம் குழந்தைகளின் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான பிரச்சனைகளும் படிப்படியாக குறையும். நீண்டநாள் வழக்கு நமக்கு சாதகமாக முடியும். இந்த நன்னாளில் பலர் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது வழக்கம். அதன் மூலம் மிக சிறந்த பலன்கள் கிடைக்கும். அதோடு கிரிவலம் செல்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதன் மூலம் மிக மிக அரிதான பலன்களை நாம் பெற இயலும்.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

இதையும் படிக்கலாமே:
பாவம் போக்கும் சிவன் மந்திரம்

English Overview:
He we explained Chitra pournami 2018 viratham benefits in Tamil language. This is famous devotional day. In this day everybody pray Lord Chitragupthan to get his grace.