நாளை வரக்கூடிய சித்ரா பவுர்ணமியில், மாலை 6 மணிக்கு இதை மட்டும் செய்தால் போதும். பரம ஏழை கூட, பல கோடிக்கு அதிபர் ஆகலாம்.

pournami
- Advertisement -

பொதுவாகவே பவுர்ணமி தினத்தன்று, சந்திர பகவானை தரிசனம் செய்து வழிபாடு செய்வது பல நல்ல பலன்களைக் கொடுக்கும். மாதம்தோறும் வரக்கூடிய பவுர்ணமி தினத்தில், பிரபஞ்சத்தில் இருந்து இந்த பூமிக்கு கிடைக்கக்கூடிய சக்திகள் நேர்மறை ஆற்றல்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக நாளை வரப்போவது சித்ராபௌர்ணமி. சந்திரனின் ஒளிக்கதிர்கள் நம்முடைய பூமிக்கு அதிகமாகக் கிடைக்கக்கூடிய நாள் என்று கூட சொல்லலாம். சந்திர பகவானின் ஒளி கதிர்கள் அதிகமாக இந்த பூமியை வந்தடைய கூடிய இந்த தினத்தை யாரும் தவறவிடாதீர்கள். சந்திர பகவானின் அருளாசியை பெற்று நம்முடைய வாழ்க்கையில் எப்படி முன்னேறலாம் என்பதைப் பற்றிய ஒரு வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

aadi-pournami

வாழ்க்கையில் நிறைய பேருக்கு முன்னேற்றத்தில் தடை இருக்கின்றது. குறிப்பாக இன்றைய சூழ்நிலையில் நம்மை சுற்றி இருக்கும் சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக அமையவில்லை. கண்ணுக்கு தெரியாத நோய் தொற்றால் பல கஷ்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். கடந்த வருடம், கடந்து சென்ற கசப்பான சம்பவம் இந்த வருடம்மும் தொடருமோ என்ற பயம் நம் எல்லோரது மனதிலும் இருக்கின்றது.

- Advertisement -

பல குழப்பத்தில் இருக்கக்கூடிய நம்முடைய மனம் தெளிவு பெற, நமக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் தீர எல்லா நன்மைகளையும் அள்ளித்தர கூடிய ஒரு வழிபாடு தான் பவுர்ணமி நிலவு வழிபாடு. சந்திர பகவானை மனதார நினைத்து பௌர்ணமி தினத்தில் வழிபாடு செய்யும்போது நம்முடைய மனம் தெளிவுபெறும்.

Pournami days in Tamil Calendar

பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாமா? உங்களுடைய வீட்டில் புதியதாக எந்த காட்டன் துணி இருந்தாலும் அதை பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தத் துணியை சதுர வடிவில் வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். கருப்பு நிற துணியை தவிர மற்ற எந்த துணியாக இருந்தாலும் சரிதான். எச்சில் படாத ஒரு தட்டை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டின் மேல் தயாராக இருக்கும் துணியைப் பிரித்துப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அந்தத் துணியின் மேல் இரண்டு கைப்பிடி அளவு பச்சரிசியை போட்டு நன்றாக பரப்பி கொள்ளுங்கள். பரப்பிய பச்சரிசியில் உங்களது வலது கை ஆள்காட்டி விரலைக் கொண்டு, ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து, அந்த ஸ்வஸ்திக் சின்னத்தில், நடுவே 1 ரூபாய் நாணயத்தை காணிக்கையாக வைத்து, சந்திர பகவான் இடம் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

pacharisi

‘கடந்த வருடம் நாம் சந்தித்து வந்த கஷ்டங்களை எல்லாம் படிப்படியாக குறைய வேண்டும். ஆரோக்கியத்திற்கு குறைபாடு வரக்கூடாது. வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான நிறைவான செல்வங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.’ என்ற படி சந்திர பகவானை இரண்டு கண்களாலும் தரிசனம் செய்து கொண்டே தயார் செய்த தட்டை உங்களுடைய இரண்டு உள்ளங்கைகளிலும் வைத்துக் கொண்டு வேண்டுதல் வைக்க வேண்டும். அதன் பின்பு துணியின் மேல் வைத்த பச்சரிசியையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் அப்படியே சிறிய முடிச்சாக கட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

swasthik

முக்கியமான ஒரு விஷயம் இந்த பரிகாரத்தை நீங்கள் வீட்டிற்குள் இருந்து செய்யக்கூடாது. நாளை சித்ரா பௌர்ணமி தினத்தன்று மாலை 6 மணி அளவில் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் செய்யலாம். அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டில் சந்திர பகவானை எந்த இடத்தில் தரிசனம் செய்ய முடியுமோ, பல்கனி, வீட்டு வாசல் அல்லது வீட்டிற்கு பின் பக்கம் எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். சந்திர பகவானின் தரிசனம், நிலவின் ஒளிக்கதிர்கள் நீங்கள் தட்டில் வைத்து இருக்கும் பச்சரிசியின் மேல் விழ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

praying-god1

அடுத்த பௌர்ணமிக்கு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை கோவில் உண்டியலில் சேர்த்து விடவேண்டும். பச்சரிசியை பறவைகளுக்கு தானியம் ஆக போட்டு விட வேண்டும். மாதந்தோறும் வரக்கூடிய பவுர்ணமி தினத்தன்று இந்த பரிகாரத்தை செய்து வரும் பட்சத்தில் நம்முடைய வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -