சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி வழிபாடு

perumal1
- Advertisement -

ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரக்கூடிய, ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கிறது. இதன் அடிப்படையில் சித்திரை மாதம் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியை ‘காமதா ஏகாதசி’ என்று சொல்லுவார்கள். இந்த ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்தால் நீங்கள் வேண்டிய வரங்களை எல்லாம் சுலபமாக பெற முடியும்.

நீங்கள் விரும்பிய அனைத்து செல்வங்களையும் உங்களால் பெற முடியும் என்பது நம்பிக்கை. நாளைய தினம் 19.4.2024 வளர்பிறை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து ஏகாதசி திதி வந்திருக்கின்றது. ஆகவே இந்த நாளை நாம் தவற விடக்கூடாது. நம் கஷ்டங்கள் தீர நாளைய தினம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

சித்திரை ஏகாதசி வழிபாடு

நாளை வளர்பிறை வெள்ளிக்கிழமை. வீட்டில் இருக்கும் பெண்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து எண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்து விட வேண்டும். வாசல் தெளித்து மங்களகரமாக கோலம் போட்டு, நிலை வாசலில் பூக்களால் அலங்காரம் செய்து விடுங்கள். பிறகு பூஜை அறையில் ஒரு விளக்கு மட்டும் ஏற்றி வைத்துவிட்டு, பெருமாளை நினைத்து விரதத்தை தொடங்குங்கள்.

விரதம் இருப்பது அவரவருடைய ஆரோக்கியத்தை பொறுத்தது வெறும் துளசி தீர்த்தத்தை மட்டும் அருந்தி நாளைய தினம் விரதம் இருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது. உடல்நிலை சரியில்லை என்பவர்கள் எப்போதும் போல மூன்று வேளை மன நிறைவோடு சாப்பிட்டும் விரதம் மேற்கொள்ளலாம். தவறு கிடையாது. இன்று மாலை பூஜை அறையில் பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, வழக்கம் போல விளக்குகளை எல்லாம் ஏற்றி, வைத்து விடுங்கள்.

- Advertisement -

மகாலட்சுமிக்கு தாமரைப்பூ, பெருமாளுக்கு துளசி இலை மாலை வைப்பது சிறப்பு. பிறகு இன்று மாலை பச்சரிசியால் உங்கள் கையாலேயே கொஞ்சமாக தயிர் சாதம் செய்து கொள்ளுங்கள். நல்ல பசுந்தயிர் கிடைத்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு. அந்த தயிர் சாதம் மணக்க மணக்க இருக்க வேண்டும். எப்படி தெரியுமா.

கொஞ்சமாக எண்ணெயில் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, மல்லித்தழை எல்லாம் போட்டு தாளித்து இந்த தயிர் சாதத்தில் கொட்டி கலந்து கொள்ளுங்கள். செல்வ செழிப்பை கொடுக்கும் மாதுலம்பழம் முத்துக்களை பிரித்து தயிர் சாதத்தின் மேலே தூவி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இந்த நெய்வேத்தியம் பெருமாளுக்காகவே சிறப்பாக தயார் செய்யப்பட வேண்டும்.

- Advertisement -

இதை பெருமாளுக்கு முன்பாக வைத்துவிட்டு தீப தூப ஆராதனை காண்பிக்க வேண்டும். உங்களுடைய வேண்டுதலை பெருமாளின் பாதத்தில் வையுங்கள். என்ன கோரிக்கை எல்லாம் இருக்குதோ அதெல்லாம் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். துளசி தீர்த்தம் கட்டாயம் பூஜை அறையில் இருக்க வேண்டும்.

பிறகு உங்களுடைய வீட்டில் விஷ்ணு சகஸ்ரநாமம் லட்சுமி சகஸ்ரநாமம் இவைகளை ஒலிக்க விடுங்கள். கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையையும் நிறைவு செய்து கொண்டு, அந்த பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். இந்த எளிமையான வழிபாட்டை நாளை யாரெல்லாம் உங்கள் வீட்டு பூஜை அறையில் செய்கிறீர்களோ அவர்களுக்கு எல்லாம் பெருமாளின் பரிபூரண ஆசி கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: நல்லது நடக்க சித்திரை மாதத்தில் செய்ய வேண்டியது

முடிந்தால் உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு நாளை சென்று வழிபாடு செய்து விட்டு வருவது சிறப்பு. நம்பிக்கை உள்ளவர்கள் நாளைய தினம் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -