இந்த பிள்ளையார் சதுர்த்திக்கு வித்யாசமான சாக்லேட் கொழுக்கட்டை இப்படி செய்து பாருங்க. செய்ய செய்ய தீர்ந்துகொண்டே இருக்கும்.

kozhukattai
- Advertisement -

நாம் எத்தனை பண்டிகைகளை கொண்டாடினாலும், முழுமுதற்க் கடவுளான விநாயகரை வணங்கும்  இந்த விநாயகர் சதுர்த்தி மிகவும் முக்கியமானது.  இந்த சதுர்த்தி நாளில் நாம் விநாயகருக்கு பல நெய்வேத்தியங்கள், பழங்கள் என அனைத்தும் படைத்து அவருக்கு நன்றி சொல்லி இந்த நாளை தொடங்குவோம். விநாயகர் சதுர்த்தி என்றதும் நமக்கு நினைவில் வருவது கொழுக்கட்டை, மோதகம், இவைதான்.  இதில் இந்த கொழுக்கட்டை பல வகைகளில் உண்டு.  எள்ளு கொழுக்கட்டை, பூரண கொழுக்கட்டை,  இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இந்த விநாயகர் சதுர்த்தியில் வித்தியாசமான முறையில் சாக்லேட் கொழுக்கட்டை செய்து அசத்தலாம் வாங்க.

தேவையான பொருள்
பச்சரிசி மாவு, தேங்காய் – 1/2 மூடி, சாக்லேட், பாதாம் – சிறிதளவு, முந்திரி – சிறிதளவு, ஏலக்காய் – சிறிதளவு, நெய்
இந்த சாக்லேட் கொழுக்கட்டைக்கு ஒயிட் சாக்லேட் பிளாக் சாக்லேட் என எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.  ஹோம் மேட் சாக்லேட் என்று கடைகளில் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் இது அனைத்து சூப்பர் மார்க்கெட்டிலும்  கிடைக்கும்.

- Advertisement -

சரி வாங்க,  இந்த சாக்லேட் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம். முதலில்  ஒரு வானலியை வைத்து ஒரு அரைமூடி அளவுக்கு தேங்காயை துருவி எடுத்து வானலியில் போட்டு நன்றாக அதில் இருக்கும் நீர் வற்றும் வரை வறுக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக சிவக்க வறுத்து கொள்ளுங்கள். பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் சிறிது பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளங்கள். இதை வறுப்பட்டு கொண்டிருக்கும் தேங்காயில் பாதாம் முந்திரி பவுடருடன் சிறிதளவு ஏலக்காயும் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். இது அப்படியே இருக்கட்டும்.

இன்னொரு புறம் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தண்ணீர்  ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து கொள்ளுங்கள். தண்ணீர் நன்றாக கொதிக்க வேண்டும். கொதித்துக் கொண்டிருக்கும் நீரின் பாத்திரத்தின் அளவிற்கு ஏற்றாற் போல் அதன் மேல் ஒரு சிறிய பாத்திரத்தை  வைத்து அதில் நீங்கள் வாங்கி வைத்துள்ள சாக்லேட் ஏதாவது ஒன்றை போட்டு கொள்ளுங்கள். இதை நேரடியாக உருக்க  கூடாது. இப்படி ஏதாவது ஒரு பாத்திரத்தின் மீது வைத்து  அந்த ஆவியில் தான் இதை உருக்க வேண்டும். அடுத்ததாக பச்சரிசி மாவில் அரை கிலோ அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொதித்து கொண்டிருக்கும் நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

- Advertisement -

கொழுக்கட்டை மாவு பிசைவதற்கு தண்ணீர் நன்றாக சூடாக இருக்கும் போது தான்  ஊற்றி பிசைய வேண்டும். முதலில் மாவு பிசையும் போது ஒரு கரண்டி விட்டு கிளறி கொள்ளுங்கள். ஏனெனில் தண்ணீர் சூடாக இருக்கும் ஆகையால் கையால் பிசையாமல் கரண்டியை வைத்து கலந்து விடுங்கள். பின் உருக்கி வைத்திருக்கும் சாக்லேட் கிரீமில் நன்றாக வறுத்த தேங்காய் முந்திரி பாதாம் கலவையை  கொட்டி கிளறி வைத்துக் கொள்ளவும். அவ்வளவு தான் சாக்லேட் பூரணம் தயார்.

மாவு ஓரளவிற்கு கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன் கை வைத்து நன்றாக பிசைந்து கொள்ளவும். மாவை பிசையும் போது கையில் சிறிதளவு நெய் தடவிக் கொள்ளுங்கள். மாவு பிடிக்க,  நீங்கள் கொழுக்கட்டை அச்சு, வாழை இலை, அரச இலை, ஏதாவது ஒன்றை பயன்படுத்தி அதன் மேல் நீங்கள் பிசைந்து வைத்திருக்கும் மாவை மெல்லிதாக தட்டிக் கொள்ளுங்கள். மாவின் நடுவில் தயார் செய்து வைத்திருக்கும் சாக்லேட் பூரணத்தை வைத்து இலையை இரண்டாக மடித்து  இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சுவையான சாக்லேட் கொழுக்கட்டை ரெடி.

- Advertisement -