5 நிமிடத்தில் சூப்பரான வித்தியாசமான ஒரு தேங்காய் சட்னியை இப்படி கூட செய்யலாம். லஞ்ச் பாக்ஸில் எடுத்து சென்றாலும் இந்த சட்னி கெட்டுப் போகாமல் இருக்கும்.

chutney
- Advertisement -

விதவிதமாக எத்தனை வகைகளில் இந்த தேங்காய் சட்னியை செய்து சாப்பிட்டாலும் நாவிற்கு ருசியாக தான் இருக்கும். தேங்காய் சட்னி வேண்டாம் என்று யாருமே சொல்ல மாட்டார்கள். தேங்காய் சட்னி என்றாலே எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். மிக மிக சுலபமாக ஒரு தேங்காய் சட்னி ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்படி சட்னியை அரைத்து இட்லி மேலே தடவியோ அல்லது தோசை மேலே தடவியோ லஞ்ச் பாக்ஸில் போட்டு எடுத்துச் சென்றாலும் அவ்வளவு சீக்கிரமாக இந்த சட்னி கெட்டுப்போகாது. வாங்க அந்த இன்ட்ரஸ்டிங்கான சட்னி ரெசிபியை நாமும் தெரிந்துகொள்வோம்.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் அரை மூடி தேங்காயை சிறிய துண்டுகளாக வெட்டி போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து ஒரு தாளிப்பு கடாயை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் – நல்லெண்ணெய் ஊற்றி, அந்த எண்ணெயில் – சின்ன நெல்லிக்காய் அளவு பெருங்காய கட்டியை போட்டு, பொரியும் வரை வறுக்க வேண்டும்.

- Advertisement -

பெருங்காய கட்டி நன்றாக சிவந்து பொரிந்து வந்ததும் வரமிளகாய் – 5 லிருந்து 7, சேர்த்து அதையும் பொன்னிறம் வரும் வரை வறுத்து இதை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு வைத்திருக்கும் தேங்காயில் கொட்டி விடுங்கள். அடுத்து சட்னிக்கு தேவையான அளவு – உப்பு, பெரிய நெல்லிக்காய் அளவு – புளி, சிறிய எலுமிச்சம்பழ அளவு – வெல்லம், இந்த பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் முதலில் மிக்ஸியை ஓட விடுங்கள். (வறுத்த பெருங்காயம், வறுபட்ட வரமிளகாய், பொடியாக வெட்டிய தேங்காய், வெல்லம், புளி, உப்பு)

மிக்ஸி ஜாரில் போட்டிருக்கும் பொருட்கள் அத்தனையும் கொரகொரப்பாக அரைந்து விடும். அதன் பின்பு தேவைப்பட்டால் லேசாக தண்ணீர் தெளித்து இந்த சட்னியை துவையல் போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியே கையில் எடுத்து உருண்டை பிடித்தால் கட்டியாக உருண்டை பிடிக்க வரவேண்டும். தளதளவென இருக்கக்கூடாது. அந்த பதத்திற்கு சட்னியை அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவு தான். சூப்பரான காரசாரமான வரமிளகாய் தேங்காய் துவையல் தயார்.

- Advertisement -

இட்லி சுட்டு வைத்திருந்தால் அந்த இட்லிக்கு மேலே இந்த சட்னியை தடவி 4 இட்லியை டிபன் பாக்ஸில் அடைத்து எடுத்துச் செல்லலாம். தேவைப்பட்டால் கல் தோசை வார்த்துக் கொள்ளுங்கள். அந்த தோசையை இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு நன்றாக வேக வைத்து விட்டு, தோசையில் இந்தச் சட்னியை போட்டு பரப்பி தோசையை இரண்டாக மடித்து அப்படியே எடுத்து லஞ்ச் பாக்ஸில் வைத்து மூடி கொடுத்தாலும் சுவையாகத்தான் இருக்கும்.

பார்க்கும் போதும், இந்த ரெசிபியை படிக்கும்போதும் நம் வீட்டிலும் செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை நிச்சயம் எல்லோருக்கும் வரும். நீங்க மிஸ் பண்ணாதீங்க. உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. லஞ்ச் பாக்ஸில் எடுத்துச் செல்லவில்லை என்றாலும், வீட்டிலேயேகூட இந்த சட்னியை இட்லி தோசை மீது தடவி சாப்பிட்டு பாருங்கள். இதன் சுவைக்கு உங்கள் நாக்கு நிச்சயம் அடிமையாகும்.

- Advertisement -