கேரளா பெண்களின் கூந்தல் ரகசியம்! கரு கரு என்று நீளமாக அவர்களின் முடி இருக்க காரணம் என்ன? இனி உங்கள் தலைமுடியை எலிவால் மாதிரி இருக்குன்னு யாருமே சொல்ல மாட்டாங்க!

kerala-hair-coconut-milk
- Advertisement -

கூந்தல் நீளத்திற்கு உதாரணத்திற்கு கேரளாவை தான் நாம் கூறுகிறோம். கேரளாவில் இருக்கும் பெண்களின் தலை முடி கருகருன்னு நீளமாகவும், அடர்த்தியாகவும் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அது அங்கு இருக்கும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப இயற்கையாகவே அமைந்த அருட்கொடையாகும். அவர்கள் அதிக அளவு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதும் ஒரு காரணமாக இருக்கிறது. இந்த வகையில் நமக்கும் அவர்களைப் போலவே கருகருன்னு நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம்? என்பதை தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த ரகசியங்களின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

கருங்கூந்தல் மற்றும் உதிராத கூந்தலுக்கு தேங்காய் எண்ணெயை விட சிறந்த எண்ணெய் இருக்க முடியாது. செக்கிலாட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெயில் தினமும் 10 நிமிடம் ஆவது மசாஜ் செய்யுங்கள். ஒரு வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைக்கு சீயக்காய் போட்டு குளியுங்கள். அதே போல நல்ல ஹேர் பேக்குகளை தேர்ந்தெடுத்து குளிப்பதும் இழந்த முடியை மீட்டு எடுப்பதற்கான சிறந்த வழிகள் ஆகும்.

- Advertisement -

கேரளா பெண்கள் அதிக அளவு தேங்காய் பாலை தலைக்கு தேய்த்து ஹேர் பேக் போடுவது உண்டு. இது தான் அவர்களுடைய கூந்தல் உதிராமல் நீண்டு வளர்வதற்கும் காரணமாக இருந்து வருகிறது. அதே போல நாமும் நம்முடைய வீட்டில் எளிதாக தேங்காய் பால் ஹேர் பேக் போடலாம்.

முதலில் உங்கள் தலைமுடியின் அளவிற்கு ஏற்ப தேங்காய் பாலை மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியான தேங்காய் பால் எடுத்துக் கொள்வது நல்லது. முடி குறைவாக உள்ளவர்கள் இரண்டு பத்தை தேங்காயிலேயே தேவையான தேங்காய் பாலை எடுத்து விடலாம். இந்த அரை கப் தேங்காய் பாலுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தேன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தேன் சேர்த்தால் முடி வெள்ளை ஆகி விடுமா? என்கிற பயமே தேவையில்லை. தேனில் இருக்கும் நற்குணங்கள் நம்முடைய தலைமுடியின் வறட்சியை நீக்கி நீரேற்றம் ஆகவும், ஈரப்பதமாகவும் வைத்துக் கொள்கிறது. இதனால் எப்பொழுதும் தலைமுடி மென்மையாகவும், வறண்டு போகாமல், உடைந்து போகாமலும் இருக்கும். இவற்றை நன்கு கலந்து பின்பு தலை முழுவதும் மசாஜ் செய்து கொள்ளுங்கள். ஸ்கேல்ப் பகுதியில் இருந்து நுனி முடி வரை எல்லா இடங்களிலும் படும்படி மென்மையாக மசாஜ் செய்து தடவி விட வேண்டும். இதனால் தலைமுடிக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்தும், ரத்த ஓட்டமும் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
கடலை மாவு இருந்தா போதும் வறண்ட, எண்ணெய் வடியும் சருமம் கூட நிமிடத்தில் பளிச்சின்னு பிரகாசமா மாத்திட முடியும். இந்த வெயிலில் கூட முகம் எப்போதும் பளிச்சென்று பிரகாசமாக இருக்க கடலை மாவை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.

மசாஜ் செய்த பின்பு 20 நிமிடங்களில் இருந்து அரை மணி நேரம் வரை அதை அப்படியே நன்கு காய விட்டு விடுங்கள். காய்ந்து உலர ஆரம்பிக்கும் பொழுது தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூவை நன்கு தண்ணீரில் கலந்து தலைக்கு தேய்த்து குளியுங்கள். இது போல வாரம் ஒருமுறை மட்டும் செய்து வந்தாலே போதும், கேரளா பெண்களை மிஞ்சும் அளவிற்கு நம்முடைய முடியும் நன்கு கருகருன்னு அடர்த்தியாக வளர துவங்கும். இனி எலி வால் மாதிரி இருக்கு உங்க முடி என்று யாருமே சொல்ல மாட்டாங்க.

- Advertisement -