கடலை மாவு இருந்தா போதும் வறண்ட, எண்ணெய் வடியும் சருமம் கூட நிமிடத்தில் பளிச்சின்னு பிரகாசமா மாத்திட முடியும். இந்த வெயிலில் கூட முகம் எப்போதும் பளிச்சென்று பிரகாசமாக இருக்க கடலை மாவை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.

face beauty
- Advertisement -

முகம் பளிச்சென்று பிரகாசமாக மாற நாம் கடைகளில் கிடைக்கும் கிரீம்களை பயன் படுத்தினால் தான் முடியும் என்று கிடையாது. நம் வீட்டில் சமையல் அறையில் தினந்தோறும் பயன்படுத்தும் ஒரு சில பொருட்களை வைத்தே முகத்தை நல்ல முறையில் பராமரிக்க முடியும். அந்த வகையில் கடலை மாவு இருந்தால் போதும் அதை வைத்து உங்கள் முகத்தை எப்போதும் பளிச்சென்று வச்சிக்கலாம்.

முகம் பளிச்சென்று மாற கடலை மாவு ஃபேஸ் பேக்
முன்பெல்லாம் முகத்தை பராமரிக்கவென்று கடைகளில் எதையும் தனியாக வாங்கி பயன்படுத்தும் பழக்கம் கிடையாது. நம் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே தான் முகத்தை பொலிவாக மாற்றிக் கொண்டார்கள். அந்த வகையில் இந்த கடலை மாவு முகத்தை பொலிவாகவும், பிரகாசமாகவும் மாற்ற பெரிதும் உதவி செய்யும். அந்த கடலை மாவை வைத்து ஒரு சில பேக்குகளை எப்படி போடுவது என்று தான் இந்த அழகு குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

ஒரு சிலருக்கு முகம் எப்போதும் வறட்சியாகவே இருக்கும். அது மட்டுமின்றி தோல்கள் உறிந்தும் காணப்படும். அப்படியானவர்கள் இந்த கடலை மாவுடன் சிறிதளவு கற்றாழை ஜெல் அல்லது சிறிதளவு வாழைப்பழம் இதை ஒரு பேக்காக தயார் செய்து முகத்தில் போடலாம். அதே போல் உங்களுடைய சருமம் சென்சிட்டிவான இருந்தால், எந்த பேக்கையும் உடனே முயற்சி செய்ய முடியாது. அப்படியானவர்கள் கடலை மாவுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் மட்டும் கலந்து பேக் போட்டுக் கொள்ளலாம். இது நல்ல ஒரு பலனை கொடுக்கும்.

அடுத்து ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் கடலை மாவுடன் சிறிதளவு டீ தூள் கொதிக்க வைத்த நீரை கலந்து குழைத்து அதை பேக் போல பயன்படுத்தும் போது அதிகப்படியான எண்ணெய் வடிவது தடுப்பதோடு முகமும் பளிச்சென்று இருக்கும். இவையெல்லாம் இல்லாமல் சாதாரணமான சருமமாக இருந்தால் கடலை மாவுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து இத்துடன் கொஞ்சம் முல்தானி மெட்டி கலந்து பேக் போட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -

இன்றைய கால இளம் தலைமுறைகளில் மிகப்பெரிய பிரச்சனை முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள் தான். இந்த முகப்பருவை நீக்குவதற்கும் கடலை மாவை பயன்படுத்தலாம். கடலை மாவுடன் சிறிதளவு கிரீன் டீயை கலந்து நன்றாக குழைத்து முகத்தில் பேக் போட்டு 10 நிமிடம் கழித்து முகம் நல்ல வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது குளிர்ந்த நீர் இரண்டில் ஏதாவது ஒன்றை வைத்து சுத்தமாக துடைத்து விடலாம் இப்படி வாரம் ஒரு முறை செய்தாலே போதும் முகப்பருக்கள் எல்லாம் நீங்கி முகம் பளிச்சென்று மாறிவிடும்.

இதையும் படிக்கலாமே: அடிக்கிற வெயிலில் முடி ரொம்பவும் டிரை ஆகி கொட்டிக் கொண்டே இருக்கிறதா? இந்த 1 ஹேர் பேக் போதும். இந்த வெயில் காலத்திலேயே உங்களுடைய முடியை அழகாக அடர்த்தியாக வளர்த்து விடலாம்.

நம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் இந்த ஒரு பொருளை வைத்து எல்லா வகை சருமத்தினருக்கும் பயன்படக்கூடிய பல வகை பேக்குகளை போட்டு கொள்ளலாம். இதன் மூலம் எந்த வித பக்க விளைவும் ஏற்படாது என்பதோடு முகமும் பளிச்சுன்னு பிரகாசமாக இருக்கும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -