உங்ககிட்ட தேங்காய் இருந்தா பால் கொழுக்கட்டை இப்படி ஒரு முறை ஈஸியா செஞ்சு பாருங்க சுவை சூப்பரா இருக்குமே! குழந்தைகள் திரும்பத் திரும்ப கேட்பாங்க.

paal-kolukattai_tamil
- Advertisement -

பால் இல்லாமல் பால் கொழுக்கட்டையை தேங்காய் பால் கொண்டு செய்யும் பொழுது அதன் ருசியே வித்தியாசமாகவும், அலாதியானதாகவும் இருக்கும். நிச்சயம் ரசிச்சு சாப்பிடக் கூடிய வகையில் இருக்கக் கூடிய இந்த தேங்காய் பால் கொழுக்கட்டை ரெசிபி செய்வதும் சுலபம் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக் கூடிய இந்த பாரம்பரிய தேங்காய் பால் கொழுக்கட்டை எப்படி எளிதாக தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி நாம் தொடர்ந்து கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

அரிசி மாவு – ஒரு கப், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – கால் ஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு, பொடித்த வெல்லம் – அரை கப், ஏலக்காய் தூள் – கால் ஸ்பூன், சுக்கு தூள் – கால் ஸ்பூன், தேங்காய் பால் – ஒன்றரை கப்.

- Advertisement -

செய்முறை

தேங்காய் பால் கொழுக்கட்டை செய்வதற்கு முதலில் ஒரு கப் துருவிய தேங்காயை எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கெட்டியான தேங்காய் பாலை எடுத்து வடிகட்டி பிழிந்து கொள்ள வேண்டும். மீண்டும் அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி இரண்டாவது தேங்காய் பாலையும் எடுத்துக் கொள்ளுங்கள் போதும்.

இப்பொழுது ஒரு கப் அளவிற்கு அரிசி மாவை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு கொஞ்சம் போல உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு எல்லா இடங்களிலும் படும்படி கலந்து விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கெட்டியாக மாவு சட்டியில் ஒட்டாதபடி பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை சேர்த்து அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கரைந்து போக பாகு காய்ச்சுங்கள். ஒருபுறம் இன்னொரு பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்ததும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள உருண்டைகளை அதில் சேர்த்து வேக விட வேண்டும்.

மாவு நன்கு வெந்து வந்த பின்பு அதனுடன் காய்ச்சி வைத்துள்ள வெல்லப்பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த சமயத்தில் வாசனைக்கு ஏலக்காய் தூள் மற்றும் சுக்குத்தூள் சேர்த்து நன்கு ரெண்டு நிமிடம் கொதிக்க விடுங்கள். பிறகு கடைசியாக நீங்கள் எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை ஊற்றி ஒரு நிமிடம் கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
மீன் வறுக்க போறிங்களா? இப்படி அரைச்சு மீன வறுத்து பாருங்க மொறுமொறுன்னு டேஸ்ட் நாக்குல ரெண்டு நாள் ஆனாலும் அப்படியே நிக்கும்!

தேங்காய்ப்பால் சேர்த்ததும் அடுப்பை எரிய விடக்கூடாது. இதன் மீது கொஞ்சம் துருவி வைத்துள்ள தேங்காயையும் சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விட்டு சுடச்சுட பரிமாற வேண்டியதுதான். இந்த அளவிற்கு நீர்க்க இருந்தால் தான் ஆற ஆற பால் கொழுக்கட்டை கெட்டியாகும். இப்பொழுது ஒரு கிண்ணத்தில் வைத்து சுடச்சுட பரிமாற வேண்டியதுதான். குழந்தைகள் திரும்பத் திரும்ப கேட்கக்கூடிய இந்த பாரம்பரிய தேங்காய் பால் கொழுக்கட்டை ரொம்பவே ருசியாக இருக்கப் போகிறது. நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -