முல்தானிமட்டியுடன் இதை சேர்த்தால் முகம் மினுமினுப்பாகுமா? கண்ணாடி போல முகம் ஜொலிக்க ஈசியான டிப்ஸ்!

multani-mitti-face-pack
- Advertisement -

பொதுவாக முகம் பிரகாசமாக இருக்க, எண்ணெய் வழிவதில் இருந்து பாதுகாக்க முல்தானிமட்டி என்னும் இந்த ஒரு பொருள் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான அழகு பொருட்களில் முல்தானிமட்டி கலக்கப்படுகிறது. இந்த முல்தானிமட்டியுடன் எந்த பொருட்களை சேர்க்கும் பொழுது நம்முடைய முகம் மினுமினுப்பாக ஜொலிக்க செய்கிறது? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

முல்தானி மட்டி முகத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான எண்ணெய் பிசுக்கை வெளியேற்றி, முகத்தை கிருமிகளில் இருந்து பாதுகாப்பாக வைத்து மென்மையாக மாற்றுகிறது. இதனால் அதிக அளவில் இந்த முல்தானி மட்டியின் இறக்குமதியும் நடைபெறுகிறது. இதன் விலையும் மலிவாக இருப்பதால் பெரும்பாலானோர் இதை அதிகம் வாங்கி முகத்திற்கு பூசி அழகுக்காக பயன்படுத்துகின்றனர்.

- Advertisement -

இதை சாதாரணமாகவே தண்ணீரில் குழைத்து, முகத்தில் தடவி நன்கு உலர விட்டு கழுவி வந்தால் முகம் பிரகாசமாக ஜொலிக்கும். அப்படி இருக்கும் பொழுது இதனுடன் சில பொருட்களை சேர்த்து நாம் பேக் போல பயன்படுத்தும் பொழுது, எப்படியான ரிசல்ட் கிடைக்கும்? என்று பாருங்கள். ரொம்பவே அசத்தலான, சூப்பரான ரிசல்ட் முகத்தில் தெரிய முல்தானி மட்டி உடன் இந்த நான்கு பொருட்களை சேர்த்து பயன்படுத்துங்கள். இதை தனித்தனியாகவும் நீங்கள் பயன்படுத்தி விதவிதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதில் முதலாவது ஆக இருப்பது எலுமிச்சை சாறு.

எலுமிச்சை சாற்றுடன் முல்தானி மட்டி சேரும் பொழுது, முகத்தில் இருக்கக்கூடிய முகப் பருக்கு நல்ல ஒரு நிவாரணம் கிடைக்கிறது. முல்தானிமட்டி உடன் தக்காளி சாற்றை சேர்க்கும் பொழுது, முகம் வறண்ட தன்மையிலிருந்து மாறி மிருதுவாக ஈரத்தன்மையை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் முல்தானி மட்டி உடன் புதினா சாற்றை சேர்க்கும் பொழுது முகத்தில் இருக்கக்கூடிய முகப்பருக்கள் நீங்கி முகம் பொலிவுறுகிறது. அதேபோல முல்தானிமட்டி உடன் பன்னீர் சேர்த்து பயன்படுத்தும் பொழுது முகம் மாசு, மரு இல்லாமல் சுருக்கங்கள் நீங்கி, இளமையை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

- Advertisement -

அந்த வரிசையில் இந்த நான்கு பொருட்களையும் சேர்த்து பயன்படுத்தும் பொழுது அபரிமிதமான ஆற்றல் புரிந்து நம்முடைய சருமத்தை பலவிதமான பிரச்சனைகளில் இருந்து மீட்டெடுத்து, நமக்கு கண்ணாடி போல ஜொலிப்பான முகத்தை கொடுக்கிறது. ஒரு டீஸ்பூன் அளவிற்கு முல்தானி மட்டியை ஒரு சிறிய அளவிலான பௌலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் புதினா சாறு, ஒரு டீஸ்பூன் பன்னீர், ஒரு டீஸ்பூன் தக்காளி சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு பேஸ்ட் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
உங்களுடைய முகமே, அடுத்தவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடி போல பளபளப்பாக மாறிவிடும். இந்த ஃபேசியலை வீட்டிலேயே செலவில்லாமல் செய்தால்.

பின்னர் முகத்தில் கீழிருந்து மேலாக மசாஜ் செய்வது போல தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்யும் பொழுது முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் நீங்கி, புதிய செல்கள் ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் முக துவாரங்களுக்குள் இருக்கும் அழுக்குகளை நீக்கி, முகத்தை இறுக செய்கிறது. நன்கு அரை மணி நேரம் உலர விட்டு விடுங்கள். முகம் இறுகிவிடும், அதன் பிறகு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சூப்பராகா முகம் கண்ணாடி போல மினுமினுப்பாக இருக்கும்.

- Advertisement -