90-களில் மருதாணி இலை கிடைக்கலன்னா வெறும் கொட்டாங்குச்சியை வைத்து 10 நிமிடத்தில் இப்படித்தான் மருதாணி செய்வாங்க தெரியுமா? இன்ஸ்டன்ட் மருதாணி மிக்ஸ் ரெசிபி!

coconut-shell-maruthani-sugar
- Advertisement -

அவசரத்திற்கு மருதாணி இலை கிடைக்கலன்னா 90-களில் வாழ்ந்த குழந்தைகள் சட்டுனு ஒரு தகர டப்பாவை எடுத்து அதில் கொட்டாங்குச்சியை உடைத்து போட்டு ஏதோ செய்து கொண்டிருப்பார்கள். கொஞ்ச நேரத்தில் எல்லோருடைய கைகளிலும் கலர் கலராக செக்க செவேலென்று மருதாணி இடப்பட்டிருக்கும். அட எப்படிடா செஞ்சீங்கன்னு? ஆச்சரியப்படுவோம்! இன்ஸ்டன்ட் ஆக கொட்டாங்குச்சியை வைத்து செய்யக்கூடிய இந்த மருதாணி மிக்ஸ் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

இன்ஸ்டன்ட் மருதாணி மிக்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:
கொட்டாங்குச்சி – அரை மூடி, சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன், டீ தூள் – ஒரு டீஸ்பூன், குங்குமம் – தேவையான அளவு.

- Advertisement -

இன்ஸ்டன்ட் மருதாணி மிக்ஸ் செய்முறை விளக்கம்:
முதலில் அரை மூடி அளவிற்கு நன்கு காய்ந்த கொட்டாங்குச்சி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒன்றிரண்டாக துண்டுகள் போல உடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். உடைத்து எடுத்த துண்டுகளை ஒரு மண்சட்டி அல்லது உபயோகப்படுத்தாத பழைய பாத்திரம் ஏதாவது ஒன்றில் சேர்த்துக் கொள்ளுங்கள். மீண்டும் இந்த பாத்திரத்தை பயன்படுத்த முடியாது எனவே இதற்காக தனியாக ஒரு பாத்திரம் அல்லது சட்டி வைத்துக் கொள்வது தான் நல்லது. 90களில் உள்ள குழந்தைகள் தகர டப்பாவில் இதை செய்து மகிழ்ந்ததுண்டு.

மூணு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கொட்டாங்குச்சி உடன் வெள்ளை சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நீங்கள் வெல்லத்தையும் சேர்க்கலாம். ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் தேயிலை தூள் ஏதாவது ஒரு பிராண்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் சட்டியை அடுப்பில் வைத்து உட்புறம் கொட்டாங்குச்சிக்கு மேலே ஒரு சிறிய கிண்ணம் ஒன்றை காலியாக வையுங்கள். பின்னர் சட்டியின் மீது பொருந்தும் அளவிற்கு ஒரு பாத்திரத்தில் பாதி அளவிற்கு தண்ணீருடன் எடுத்து மூடி போல மேலே மூடி வையுங்கள். சிறிது நேரத்தில் சட்டியின் இடைவெளியில் இருந்து ஆவி வர ஆரம்பிக்கும். புகை வர ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

உள்ளே நீங்கள் வைத்துள்ள காலியான கிண்ணத்தில் சிறிதளவு நீர் நிரம்பி இருக்கும். இந்த நீர் தான் நமக்கு இப்பொழுது தேவை. கொட்டாங்குச்சி எரிந்து வெல்லம் அல்லது சர்க்கரை கரைய ஆரம்பிக்கும். இதனுடன் சீரகம் மற்றும் டீ தூளின் எக்ஸ்ட்ராக்ட்ஸ் கலந்து ஆவியாகி அதன் மூலம் உருவாகக்கூடிய இந்த லிக்விட் மேலே வைக்கப்பட்டுள்ள கிண்ணத்தில் இறங்க துவங்குகிறது. இது குங்குமத்துடன் சேரும் பொழுது எளிதாக மருதாணி வைத்தது போல நல்ல ஒரு நிறம் நம்முடைய கைகளில் பிடித்துக் கொள்ள உதவுகிறது.

லிக்விட் நன்கு ஆறியதும் இதனுடன் நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய நல்ல கெமிக்கல் இல்லாத ஏதாவது ஒரு குங்குமத்தை தேவையான அளவிற்கு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பட்ஸ் அல்லது துடைப்பக் குச்சியை வைத்து நன்கு கலந்து விட்ட பின்பு அழகாக உங்களுடைய கைகளில் நீங்கள் விரும்பிய டிசைனில் மருதாணி போல இட்டுக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
முகத்திற்கு கடலை மாவு பயன்படுத்துபவர்கள் இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க, நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு அழகு ஆளை அள்ளும்! இத பண்ணினா எல்லா சரும பிரச்சனைக்கும் ஒரே வழியில் குட் பை சொல்லலாமே!

ஐந்து நிமிடத்தில் இது நன்கு காய்ந்து உலர்ந்து விடும். நன்கு உலர்ந்ததும் கைகளை கழுவி விடுங்கள். அவ்வளவுதான், 10 நிமிடத்திற்குள் சட்டுனு மருதாணி இன்ஸ்டன்ட் ஆக வைத்துக் கொள்ளலாம். இது நாளிலிருந்து ஐந்து நாட்கள் வரை இருக்கும் அவ்வளவுதான். அதன் பிறகு நீங்கள் மீண்டும் செய்து தான் வைக்க வேண்டும். இது பக்க விளைவுகள் அற்றது. அரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தாது எனவே தாராளமாக பயன்படுத்தலாம்.

- Advertisement -