கொட்டாங்குச்சியை வைத்து சின்ன சின்ன வீட்டு குறிப்புகள்

mixerjar
- Advertisement -

மட்டன் கீமா செய்ய, கோலா உருண்டை செய்ய, சில சமயம் மட்டனை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். சில பேர் முட்டையின் ஓடு, முட்டை இவைகளையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து ஏதாவது ஒரு வீட்டு குறிப்புக்காக பயன்படுத்துவார்கள். சமையலுக்காக பயன்படுத்துவார்கள். இதனால் மிக்ஸிக்கு உள்ளே அந்த அசைவ வாடை வீசிக்கொண்டே இருக்கும்.

உடனடியாக அதை போக்கவே முடியாது. என்னதான் லிக்விட் ஊற்றி கழுவினாலும், அந்த வாடையை நீக்குவதில் ஒரு சிரமம் இல்லத்தரசிகளுக்கு இருக்கும். மிக்ஸியில் வீசும் அந்த அசைவ வாடையை ஒரே நிமிடத்தில் போக்க சூப்பரான ஒரு வீட்டு குறிப்பு. இதோடு சேர்த்து இன்னும் சில பல பயனுள்ள வீட்டு குறிப்புகளையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

குறிப்பு 1

கொட்டாங்குச்சியில் இருந்து ஒரு சின்ன ஓடு(துண்டு) எடுத்துக்கோங்க. அதை கேஸ் ஸ்டவ்வில் வைத்து, பற்ற வைத்தால் அதில் நெருப்பு பிடித்து லேசாக புகை வரத் தொடங்கும். அந்த சமயத்தில், அந்த கொட்டாங்குச்சி துண்டை அப்படியே எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு மூடிடுங்க. அந்தப் புகை மிக்சிக்கு உள்ளே பரவிவிடும்.

ஒரு நிமிடம் கழித்து மூடியை திறந்துபார்க்கும்போது மிக்ஸி ஜார் முழுவதும் அந்த புகை நிரம்பி இருக்கும். பிறகு அந்த மிக்ஸி ஜாரை எடுத்து முகர்ந்து பாருங்கள். மிக்ஸி ஜாரில் அசைவவாடை வீசவே வீசாது. அந்த கொட்டாங்குச்சியின் சின்ன தூண்டில், முனையில் மட்டும் லேசாக நெருப்பு பிடித்திருந்தால் போதும். மொத்தமாக பற்ற வைத்து அப்படியே தூக்கி மிக்சி ஜாரில் போட்றாதீங்க ஜாக்கிரதை.

- Advertisement -

குறிப்பு 2

கொட்டாங்குச்சியை நேராக ஸ்டவ்வில் வைத்தோ அல்லது கற்பூரம் வைத்து நெருப்பு மூட்டியோ நன்றாக கங்கு பிடித்து எறியும் படி பார்த்துக் கொள்ளுங்கள். கொட்டாங்குச்சி நெருப்பில் எரிந்து முடிந்ததும், கருப்பு நிறமாக மாறி இருக்கும். அதை நன்றாக ஆற வைத்து விடுங்கள். ஆற வைத்த பிறகு கருப்பாக இருக்கும்.

அந்த கறி பிடித்த கொட்டாங்குச்சிகளை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு இதோட 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு போட்டு மிக்ஸியை ஒரு ஓட்டு ஓட்டினால் மிக்ஸி ஜார் பிளைடும் சார்பாகும். அதே சமயம் நமக்கு ஒரு சூப்பரான பொடியும் கிடைத்திருக்கும். இந்த பொடியை அப்படியே எடுத்து காய்ந்த டப்பாவில் ஸ்டோர் செய்யுங்க. (அந்த பொடியை தேவைப்பட்டால் நீங்கள் நைசாகவும் அரைத்துக் கொள்ளலாம்.)

- Advertisement -

குறிப்பு 3

இந்த பொடியை எந்தெந்த வேலைகளுக்கு, எப்படி எல்லாம் பயன்படுத்தலாம். நீண்ட நாள் அடர்த்தியாக படிந்திருக்கும் துருக்கறை உப்புக்கறை எதை நீக்கவும் இந்த பொடி உங்களுக்கு பயன்படும். கொழ கொழப்பாக அழுக்கு படிந்த சிங்குக்கு மேலே இந்த பொடியை தூவி ஸ்டீல் நாரை வைத்து தேய்த்து கழுவி பாருங்கள். என்ன ரிசல்ட் கிடைக்குதுன்னு உங்களுக்கே தெரியும்.

குறிப்பு 4

அதே போல பள பளப்பு இல்லாத ஸ்டீல் குழாய் (steel tap) உங்க வீட்ல இருக்கு. துருப்பிடிச்ச ஸ்டீல் டேப்புக்கு மேலே இந்த தூளை தூவி விட்டு, ஸ்டீல்நார் வைத்து தேய்த்துக் கொடுத்தால் அந்த டேப் புது டேப் போல உடனடியாக மாறும். உப்பு கறை படிந்த ஸ்டீல் டாப்புக்கும் இதே போல செய்யலாம்.

குறிப்பு 5

இதேபோல பாத்ரூமில் பிளாஸ்டிக் கறை படிந்த பக்கெட், ஜக் ஏதாவது இருந்தால் அதை தேய்கவும் இந்த பொடியை பயன்படுத்திக் கொள்ளலாம். எவ்வளவு காசு கொடுத்து பாத்திரம் தேய்க்க சோப்பு வாங்கினாலும், லிக்விட் வாங்கினாலும் இந்த கொட்டாங்குச்சி பொடிக்கு ஈடு இணை ஆகாது.

குறிப்பு 6

இதை அழகு குறிப்புக்குப் பயன்படுத்தலாம். சார்கோல் பவுடர் என்று சொல்லுவார்கள் அல்லவா. அதுபோல தாங்க இது. இதை நைசாக தூள் செய்துவிட்டு, இதில் கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் ஊற்றி, கலந்து இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உங்கள் முகத்தில் வட்ட வடிவில் லேசாக ஸ்கிரப் செய்து முகத்தை கழுவி பாருங்கள் முகம் உடனடியாக பொலிவு பெறும்.

இதையும் படிக்கலாமே: இல்லத்தரசிகளுக்கு தேவையான 6 சமையலறை குறிப்புகள்

குறிப்பு 7

மிக்ஸி ஜாருக்கு பின்னாடி எப்போதும் கொழகொழப்பாக அழுக்கு படிந்து தான் இருக்கும். அந்த இடத்தில் கொஞ்சமாக இந்த பொடியை தூவி விட்டு, பல் தேய்க்கும் பிரஷ்சை வைத்து தேய்த்து பிறகு நல்ல தண்ணீரில் அலசி கழுவி விடுங்கள். மிக்சி ஜாருக்கு பின்பக்கம் உடனடியாக சுத்தமாகும். இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்கு பயன்படும் படி இருந்தால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்க.

- Advertisement -