இல்லத்தரசிகளுக்கு தேவையான 6 சமையலறை குறிப்புகள்

cooking
- Advertisement -

இந்த குறிப்புகள் எல்லாமே தினம் தினம் சமையலறையில் பயன்படுத்தக்கூடிய குறிப்புகள். இல்லத்தரசிகள் தினம் தினம் புதுசாக ஏதாவது ஒரு விஷயத்தை சமையல் அறையில் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வரிசையில் இன்று புத்தம் புது ஆறு குறிப்புகளோடு இந்த பதிவு உங்களை நோக்கி வருகிறது. முத்து முத்தான புத்தம் புது ஐடியாக்களை மிஸ் பண்ணிடாதீங்க.

குறிப்பு 1

பொதுவாகவே இஞ்சி தோலை சீவி தான் சமையலுக்கு பயன்படுத்துவோம். ஆனால் அந்த தோலை தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விடுவோம். இனிமே அப்படி பண்ணாதீங்க. இஞ்சி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு, அப்படியே சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். கடைகளில் ஜாமான்கள் வாங்கும் போது கிடைக்கும் அல்லவா நெட் பேக், அதற்குள்ளே இந்த இஞ்சி தோலை போட்டு ரப்பர் பேண்ட் போட்டு இந்த முடிச்சை அப்படியே சிங் தண்ணி போகும் ஓட்டையில் வச்சிருங்க.

- Advertisement -

ஒரு கொட்டாங்குச்சியை எடுத்து அதன் மேலே கவிழ்ந்து வச்சுட்டீங்கன்னா, ராத்திரியில் கரப்பான் பூச்சி அந்த வழியா உங்க வீட்டுக்குள்ள வரவே வராது. இஞ்சி தோலின் வாசத்துக்கு அந்த மகிமை இருக்கு. இதே போல வாஷ்பேஷன் பாத்ரூமிலும் இந்த இஞ்சி தோலை பயன்படுத்தலாம்.

குறிப்பு 2

ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து விடுங்கள். அந்த கடாய் சூடானதும் தேவையான முட்டைகளை அதில் அடுக்கி, ஒரு கைப்பிடி அளவு ஐஸ் கட்டிகளை அதில் போட்டு, அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, கடாய்க்கு மேலே சரியான அளவு தட்டை போட்டு மூடி வைத்தால் ஐந்தே நிமிடத்தில் முட்டை பக்குவமாக வேகும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

குறிப்பு 3

சில சமயம் அடுப்பில் வைத்த கடாயில் தண்ணீர் காய்வதற்கு முன்பே எண்ணெயை தூக்கி ஊற்றி விடுவோம். அவ்வளவுதான் எண்ணெய் சிடசிட படபடவென பொறிந்து மேலே சிதறும். உடனடியாக ஒரு சின்ன புளிக்கொட்டை சைஸ், புளியை எடுத்து அந்த எண்ணெயில் போட்டால் எண்ணெய் தெரிப்பது உடனே நிற்கும்.

குறிப்பு 4

ஒரு அகலமான பிளாஸ்டிக் கிண்ணத்திலோ அல்லது சில்வர் கிண்ணத்திலேயே தண்ணீர் எடுத்துக்கோங்க. அதில் வாழை காய்களை போட்டு மூடி அப்படியே பிரிட்ஜில் வச்சிருங்க. ஒரு வாரம் ஆனாலும் வாழைக்காய் பழுத்து போகாது. வாடியும் போகாது. ஆனால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த தண்ணீரை மாற்றம் மறக்கக்கூடாது.

- Advertisement -

குறிப்பு 5

தண்ணீரில் உப்பு அதிகமாக இருக்கக்கூடிய வீட்டில் பாத்திரத்தை என்னதான் தேய்த்து கழுவி வைத்தாலும், அது காய்ந்த பிறகு அதன் மேலே சின்ன சின்ன வெள்ளை வெள்ளை புள்ளிகள் படிந்திருக்கும். சில்வர் பாத்திரங்கள் எல்லாம் உப்பு பூத்து போய் பளபளப்பு இழந்து மங்கிப் போயிருக்கும். உங்க வீட்டில் தண்ணீரில் அதிகம் உப்புத்தன்மை இருக்கா.

உங்க வீட்டு பாத்திரமும் இப்படி பொலிவிழந்து கிடக்கா. ஒரு சின்ன பிளாஸ்டிக் கப்பில் பாத்திரம் தேய்க்கும் லிக்விட், வினிகர் 1 ஸ்பூன், கொஞ்சமாக தண்ணீர் கலந்து கொள்ளுங்கள். இந்த லிக்விடை தொட்டு பாத்திரம் தேய்த்து பாருங்க. சில்வர் பாத்திரங்கள் எல்லாம் பட்டு போல மின்னும். அது மட்டும் இல்லாமல் காய்ந்த பிறகு அதில் எந்த வெள்ளை நிறமும் பூத்து நிற்காது.

குறிப்பு 6

சில பேர் மட்டன், சிக்கன், மீன் இதையெல்லாம் வாங்கி ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரீசரில் வைத்து விடுவார்கள். ஆனால் அதை உடனடியாக எடுத்து சமைக்க முடியாது. அப்படியே இறைச்சி எல்லாம் ஒன்றோடு ஒன்றாக ஒட்டி இறுகிப் பிடித்துக் கொண்டு இருக்கும். இப்படிப்பட்ட சமயத்தில் அதை உடனடியாக சமைக்க ஒரு ஐடியா இருக்கு. ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கோங்க. அதில் உப்பு போட்டுக்கோங்க.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

இந்த உப்பு கலந்த தண்ணீரில் ஃப்ரீசரில் வைத்திருக்கும் இறைச்சி டப்பாவை அப்படியே சிறிது நேரம் வைத்தீர்கள் என்றால், அந்த இறைச்சியில் இருக்கும் குளிர்ச்சி உடனடியாக இறங்கிவிடும். பிறகு அதை எடுத்து உடனடியாக சமைக்கவும் முடியும். மேலே சொன்ன பயனுள்ள வீட்டு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -