நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு அழகான அழகை பெற 10 நிமிடமும், 1 ஸ்பூன் காஃபி பவுடரும் இருந்தாலே போதும்.

face11
- Advertisement -

அழகு என்பதே அழகு தான்‌. அதிலும் அழகான அழகை தரக்கூடிய ஒரு ஃபேஸ் பேக்கை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே பெண்களுக்கு அழகு மேல் ஆர்வம் அதிகம் இருக்கும். உங்களுக்கும் உங்களை அழகுபடுத்திக் கொள்ள ஆர்வம் இருந்தால், இந்த சுலபமான குறிப்பை பயன்படுத்தி பலனைப் பெறலாம். நம் வீட்டில் இருக்கக் கூடிய மூன்று பொருட்களை வைத்து இந்த ஃபேஸ் பேக்கை எப்படி தயார் செய்வது தெரிந்து கொள்வோமா.

ஃபேஸ் பேக்கை எப்படி தயார் செய்வது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு, இந்த ஃபேஸ் பேக்கை போட்டால் நமக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். முகச்சுருக்கம் உடனடியாக குறையும். கருமை நிறம் குறைந்து, முகம் பொலிவு பெறும். முகப் பருக்கள் படிப்படியாக குறையத் தொடங்கும். ஓபன் போர்ஸ் என்று சொல்லப்படும் முகத்தில் இருக்கும் துவாரங்கள் ஒரு சில நாட்களில் காணாமலேயே போய்விடும்.

- Advertisement -

இப்போது பேக்கை எப்படி தயார் செய்வது என்று தெரிந்து கொள்வோமா. ஒரு சிறிய பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1 முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வெள்ளை கருவோடு கடலை மாவு – 1 ஸ்பூன், இன்ஸ்டன்ட் காபி பவுடர் – 1 ஸ்பூன், சேர்த்து நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். முட்டையின் வெள்ளை கருவோடு இந்த இரண்டு பொருட்களையும் கலந்து ஜெல் போல நமக்கு ஒரு கிரீம் கிடைத்திருக்கும். எந்த பிராண்ட் காபி தூளை வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்போது நமக்குத் தேவையான ஃபேஸ் பேக் தயார். உங்களுடைய முகத்தை முதலில் நன்றாக கழுவிவிட்டு, ஈரத்தை துடைத்து விட்டு அதன் பின்பு இந்த ஃபேஸ் பேக்கை முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். கழுத்திலும் அப்ளை செய்து கொள்ளுங்கள். நன்றாக அப்ளை செய்து விட்டு, 20 நிமிடங்கள் அப்படியே உலர விட்டு, முகத்தை லேசாக 2 நிமிடம் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். முகத்தை மசாஜ் செய்யும் போது முகத்தில் இருக்கும் ஹேர் பேக்கை தண்ணீரில் நனைத்து விட்டு அதன் பின்பு, உங்களுடைய கையை ஈரத்தில் நினைத்துக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

உங்களுடைய முகத்தில் நிறைய முகப்பரு இருந்தால் மசாஜ் செய்ய வேண்டாம். பேக்கை போட்டு விட்டு அப்படியே கழுவி விடுங்கள். வாரத்தில் மூன்று நாட்கள் இந்த பேக் போட்டு வரலாம். அவசரமாக நீங்கள் வெளியே கிளம்ப வேண்டும். முகத்திற்கு இன்ஸ்டன்ட் பொலிவு கிடைக்க வேண்டும் என்றாலும் இந்த பேக்கை பயன்படுத்தலாம்.

இந்தப் பேக் பிரிட்ஜில் வைத்தால் 3 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். உங்களுக்கு இந்த ரெமிடி பிடிச்சிருக்கா. யோசிக்காம இன்னைக்கு நைட்டு ட்ரை பண்ணி பாருங்க. நாளைக்கு காலையில உங்களுடைய முகத்தில் இருக்கும் வித்தியாசத்தை சுற்றி இருப்பவர்கள் நிச்சயம் கேட்பார்கள்.

- Advertisement -