2 ரூபாய்க்கு இத மட்டும் வாங்கினால் போதும் உங்க ரோஜா செடி கொத்து கொத்தாக பூத்து தள்ளும் தெரியுமா?

rose-plant-coffee-powder
- Advertisement -

செடி வளர்ப்பவர்கள் பெரும்பாலும் அதிகம் விரும்பி வளர்க்கும் இந்த ரோஜா செடி, இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது. ஆண் பெண் பாகுபாடு இன்றி அனைவராலும் விரும்பி வளர்க்கப்படும் இந்த ரோஜா செடியை கண்ணால் பார்த்தாலே மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கிறது. ரோஜா செடிக்கு எளிமையான பராமரிப்பு கொடுத்து வந்தாலே அது நிறைய பூக்களை கொடுக்கும். ரோஜா செடியில் இருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கப்படும் இந்த ஒரு பொருளே அற்புதமான தீர்வை கொடுக்கும். அப்படியான பொருள் என்ன? அதை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ரோஜா செடி எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. அது மட்டுமில்லாமல் ரோஜா செடியில் இருக்கும் மண் ஆனது தளர்வாக இருக்க வேண்டும். மிகவும் இறுக்கமாக இருந்தால், அதற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் அது வாட துவங்கும். மண்ணில் இருந்து கிடைக்கக்கூடிய ஆக்சிஜன் மற்றும் ஈரப்பதம் கொடுக்கக்கூடிய உரங்கள் இவை அனைத்துமே ஒரு ரோஜா செடியை நன்கு பூக்க செய்கிறது.

- Advertisement -

ரோஜா செடிக்கு தேவையான சத்துக்கள் முட்டையின் ஓட்டிலும், தேயிலை தூளிலும் அதிகமாக காணப்படுகிறது. அதனால் ரோஜா செடி வளர்ப்பவர்கள் பெரும்பாலும் இந்த ரெண்டு உரத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். அது மட்டும் அல்லாமல் காய்கறி மற்றும் பழக் கழிவுகளும் பயன்படுத்தப்படுவது உண்டு. அந்த வகையில் இந்த ஒரு பொருளும் ரோஜா செடிகளுக்கு தேவையான சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளது.

ரெண்டு ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய காபி தூள் தாங்க அந்த பொருள்! தேயிலை தூளை போலவே காபி தூளில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், அயன், மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இதை முறையாக நீங்கள் 20 நாட்களுக்கு ஒரு முறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை உங்களுடைய செடிகளுக்கு கொடுத்து வந்து பாருங்கள், இலை உதிர்தல் பிரச்சனை, செடி வாடி போவது, ஒரு கிளையில் ஓரிரு மலர்கள் மலர்வது போன்ற பிரச்சனைகள் மற்றும் மலரின் நிறம் மங்குவது, ரோஜா பூ பெரியதாக பூக்காமல் இருப்பது போன்ற பிரச்சனைகளும் இவற்றின் மூலம் நீங்கும்.

- Advertisement -

பத்து ரோஜா செடிக்கு குறைவாக வைத்திருப்பவர்கள் இரண்டு ரூபாய் காபி தூள் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதை ஒரு லிட்டர் அளவிற்கு அரிசி கழுவிய தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். சாப்பாட்டிற்கு ஊற வைத்த அரிசியில் இருந்து கிடைக்கக் கூடிய தண்ணீர் ஒரு லிட்டர் எடுத்துக் கொண்டு அதில் இதை கலந்து பின்னர் பத்து லிட்டர் அளவிற்கு சாதாரண தண்ணீரில் சேர்க்க வேண்டும். இந்த தண்ணீரை தான் நீங்கள் ரோஜா செடிகளுக்கு ஸ்ப்ரே செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் செடி முழுவதும் தண்ணீர் எப்பொழுதும் ஊற்றுவது போல ஊற்றி விட வேண்டும்.

ஈரப்பதத்தை எப்பொழுதும் தக்க வைத்துக் கொண்டிருந்தால் அதிலிருந்து கிடைக்கக்கூடிய சத்துக்கள் முழுமையாக ரோஜா செடிக்கு சென்றடையும். இதை தினமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாதம் இருமுறை செய்யுங்கள். பூச்சி தாக்குதல்கள் இல்லாமல், ரோஜா செடியின் இலைகள், மொட்டுக்கள், பூக்கள், கிளைகள் என்று எல்லாவற்றிலும் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு நிறைய பூக்களை, பெரிது பெரிதாக நல்ல அடர்த்தியான நிறங்களில் அள்ளலாம்.

- Advertisement -